ஈரான் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியும், பொருட்களின் விலை அதிகரிப்பும் நாடளாவிய ஆர்ப்பாட்டங்களை தூண்டி விட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் வங்கிகளையும், அரசு அலுவலகங்களையும் தாக்கியுள்ளனர். இன்று வரையில் இருபது பேர் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகியுள்ளனர். இறுதிக் கட்டத்தில் ஈரானிய அரசும் சில விட்டுக் கொடுப்புகளை செய்தது. உதாரணத்திற்கு, இனிமேல் முக்காடு போடாத பெண்களை கைது செய்வதில்லை என்று அறிவித்தது. ஆனால், அது மிகவும் காலதாமதமான முடிவு. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாத வரையில் ஆர்ப்பாட்டங்கள் ஓயப் போவதில்லை. […]