சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 95 கோடியே 58 லட்சம் மதிப்பீட்டில், 2,771 வாகனங்களை காவல்துறை பயன்பாட்டிற்காக முதலமைச்சர் வழங்கினார். பின்னர் காவல்துறையின் புதிய வாகனங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், குற்றங்களை தடுக்கவும், ரோந்து பணிகளுக்காக காவல்துறைக்கு புதிய வாகனங்கள் வாங்கப்படும் என காவல்துறை மானியக் கோரிக்கையின் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி […]