மத்திய பிரதேச மாநிலதில் திருமணமான பெண் காணாமல் போன காரணத்தால், அவருக்கு கிராம வீதிகளில் தனது கணவரைத் தோளில் சுமந்து செல்லும் தண்டனை அளிக்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம், ஜாபுவா மாவட்டத்தில் ஒருபெண் தனது கணவருடன் வசித்து வந்தார். மேலும், கடந்த சில நாட்களாக அந்தப் பெண் காணாமல் போயிருந்தார். அதுமட்டுமின்றி, அந்த பெண்ணுக்கு திருமணத்திற்குப் புறம்பான உறவு இருப்பதாக மாமியாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில், அந்தப் பெண்ணின் பெற்றோர் அவளை மீண்டும் தனது கணவரின் வீட்டிற்கு அழைத்து […]
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேசன் மிச்செல் போதைப்பொருள் மற்றும் ஆயுதக்கடத்தல் பிரிவில் கைதி. ஜேசன் மிட்செல், ஒரு அமெரிக்க நடிகர். அவர் 2015, ‘ஸ்ட்ரெய்ட் அவுட்ட காம்ப்டன்’ என்ற படத்தில் மறைந்த ராப் பாடகர் ஈஸி இ கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். அவர் காங்: ஸ்கல் ஐலேண்ட், முட்பண்ட் மற்றும் முஸ்டாங் போன்ற வெற்றி படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், மிசிசிப்பி மாகாணத்தில் போலீசார் வாகன சோதனையின் போது சிக்கிய ஜேசன் மிச்செல் காரை நிறுத்தி சோதனை செய்தனர். ஜேசன் […]
குதிரை தொழுவத்தின் கீழ் 4 மீட்டர் ஆழத்தில் சுரங்கம் அமைத்து சட்ட விரோதமாக செயல்பட்ட போதை சிகரெட் தயாரிக்கும் தொழிற்சாலையில் அதிரடியாக சோதனையிட்ட போலீசார் 20 பேரை கைது செய்தனர். ஐரோப்பாவில் குதிரை தொழுவத்தின் கீழ் 4 மீட்டர் ஆழத்தில் சுரங்கம் அமைத்து சட்ட விரோதமாக செயல்பட்ட போதை சிகரெட் தயாரிக்கும் தொழிற்சாலையில் அதிரடியாக சோதனையிட்ட போலீசார் 20 பேரை கைது செய்தனர். இது குறித்து அந்நாட்டு உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அண்டலுசியன் (Andalusian) நகரில் […]
சிறப்பு அந்தஸ்த்து கேட்டு காஷ்மீர் மாநில பிரிவினைவாதிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சிறப்பு அந்தஸ்த்து சட்டப்பிரிவை ரத்து செய்யும் வழக்கு நாளை விசாரணைக்கு வரும் நிலையில் யாசின் மாலிக்கை போலீசார் கைது செய்துள்ளனர். ஜம்மு காஷ்மீருக்கு மாநிலம் தங்களுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு பல்வேறு கட்டமாக போராட்டம் நடைபெறுகின்றது.இந்நிலையில் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 35-ஏ வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது இந்த மனு மீதான விசாரணை வருகின்ற திங்கள் கிழமை விசாரணைக்கு வரும் […]
2017 ஆம் ஆண்டின் சென்னை மத்திய குற்றப்பிரிவில் 572 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 559 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் 2017ல் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 57 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.
ஒஎன்ஜிசிக்கு எதிராக பரப்புரை செய்ததாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள கல்லடிமேடு கிராமத்தை சேர்ந்த 2 கல்லூரி மாணவிகள் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதனால் அக்கிராமத்தில் பதற்றம் நிலவுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செய்யூரை அடுத்த தண்டரையில் உள்ள ஆற்றில் அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் அள்ளியதாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.மேலும் அவர்களது 7 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்துள்ளது அனைக்கட்டு காவல்துறை. source: https://www.dinasuvadu.com
அரசு தேர்வாணையத்தில் விடைத்தாள் வெளியான விவகாரத்தில் தமிழக தேர்வாணையத்தின் ஊழியர் பெருமாள் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.ஏற்கனவே விடைத்தாள் வெளியான விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
சென்னை; அம்பத்தூர் மற்றும் கொரட்டூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கருக்கு பகுதியில் வாகனத் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்களை போலீசார் மடக்கி விசாரித்தனர். போலீஸ் விசாரணையில் இவர்கள் பல்வேறு பகுதிகளில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்ததால் மூவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 40 சவரன் நகை, 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. […]