தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு! இன்றைய நிலவரம் என்ன?
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய தினம் அதிகரித்து விற்பனையான நிலையில், இன்றும் உயர்ந்து காணப்படுகிறது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.7,225க்கும், 1 சவரன் தங்கம் ரூ. 57,800க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று 1 கிராம் தங்கம் விலை ரூ.35 உயர்ந்து, ரூ. 7,260ஆக விற்கப்படுகிறது. இதேபோல், 1 சவரன் தங்கம் விலை ரூ.280 அதிகரித்து ரூ.58,080க்கு விற்பனையாகிறது. அதே நேரம், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,920-க்கு விற்பனை ஆகிறது. […]