பாதாளச்சாக்கடையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்ட போது விஷவாயு தாக்கி மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காட்ராம்பாக்கம் பகுதியில் உள்ள பாதாளச் சாக்கடையை சுத்தப்படுத்தும் பணியில், அப்பகுதி துப்புரவு பணியாளர்களான முருகன், பாக்யராஜ், ஆறுமுகம் ஆகியோர் ஈடுபட்டனர். அப்போது, எதிர்பாராத விதமாக விஷவாயு தாக்கியதால் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்த்துறை விசாரணை நடத்தி, உடல்களை பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு […]
திருநல்லூரில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்ய இறங்கிய இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். பாதாள சாக்கடையை சுத்தம் செய்ய வருவதில் மனிதர்கள் ஈடுபடுவதால் பலர் உயிரிழக்க நேரிடுகிறது என்ற காரணத்திற்காக அரசாங்கத்தால் சில இயந்திரங்களும் விநியோகிக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும் வாகனங்கள் செல்ல முடியாத இடுக்குகளில் உள்ள பாதாள சாக்கடைகளை மனிதர்கள்தான் இறங்கி சுத்தம் செய்ய வேண்டியுள்ளது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள மணலி புதுநகர் பகுதியில் வேல்முருகன் தர்மராஜ் ஆகிய இரண்டு பேர் பாதாள சாக்கடை சுத்தம் செய்வதற்காக […]