குளிர்பானத்தில் விஷம் கொடுத்து காரைக்காலில் பள்ளி மாணவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. காரைக்காலில் பள்ளி மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த சம்பவத்தின் பெயரில் கொலை வழக்கின் கீழ் இன்று காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் காரைக்கால் காவல்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்த குற்றப்பத்திரிகையில், கொலையாளியாக குற்றம் சுமத்தப்பட்ட சகாயராணி கொடுத்த குளிர்பானத்தில் உள்ள விஷமும், அதே போல மாணவன் உடற்கூராய்வில் உடலில் இருந்த விஷமும் ஒன்று என குறிப்பிடப்பட்டுள்ளது.