நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். புதிதாக கட்டப்பட்ட தண்ணீர் தொட்டியின் கழிவுகளை பிரிக்க உள்ளே இறங்கியபோது விஷவாயு தாக்கியதில் மேலும் 3 பேர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருக்கின்றனர். தொட்டியில் மழைநீர் தேங்கிய நிலையில் விஷவாயு வெளிப்பட்டு 5 தொழிலாளர்கள் மயங்கிய நிலையில், 2 பேர் உயிரிழப்பு.
அகமதாபாத்தில் உள்ள ஒரு ஜவுளி ஆலையில் கழிவு தொட்டியை சுத்தம் செய்யும்போது ஏற்பட்ட விஷவாயுவை சுவாசித்தால், 4 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத் மாநிலம், அகமதாபாத் மாவட்டத்தில் சிரிபால் குடும்பத்திற்கு சொந்தமான “விஷால் பேப்ரிக்ஸ்” எனும் அருகே ஒரு ஜவுளி தொழிற்சாலையில் ரசாயன கழிவுகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட நான்கு தொழிலாளர்கள், கழிவு தொட்டியின் உள்ளே விஷ வாயுவை சுவாசித்ததால், மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து அம்மாவட்ட டி.எஸ்.பி. நிதேஷ் பாண்டே கூறுகையில், இரசாயன கழிவு தொட்டியின் உள்ளே […]
திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் தொழிற்பேட்டையில் விஷவாயு தாக்கி இரு தொழிலாளர்கள் உயிரிழந்து உள்ளனர். திருவள்ளூர் அருகே உள்ள புட்டலூரை சேர்ந்த வேலவன், சந்துரு ஆகிய இரு தொழிலார்கள் கழிவு நீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி இறந்துள்ளனர்.