டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றுள்ள நீரஜ் சோப்ராவிற்கு கவிஞர் வைரமுத்து அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில்,இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்று 87.58 மீ தூரத்தில் ஈட்டியை எறிந்து தங்க பதக்கத்தை வென்றுள்ளார். இதன்காரணமாக,ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இந்தியா தனது முதல் தங்கப்பதக்கத்தை நேற்று வென்றுள்ளது.டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றதன் மூலம் ஒலிம்பிக் அரங்கத்தில் இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டது.இவ்வாறு,உலக அரங்கில் […]
முக்கூட்டணியால் மட்டுமே கொன்றழிக்கும் கொரோனாவை வென்றெடுக்க முடியும் என்று வைரமுத்து ட்வீட் செய்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையானது கடந்த மாதத்தில் பெரும் உச்சத்தை எட்டியது.ஆனால்,அதன்பின்னர் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு காரணமாக தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. எனினும்,தமிழகத்தில் வருகின்ற ஜூன் 21 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில்,கவிஞர் வைரமுத்து அவர்கள்,”காக்கும் அரசு,கட்டுப்படும் மக்கள்,தடையில்லாத் தடுப்பூசி […]
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மனைவியின் மறைவிற்கு,கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி புற்று நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 6 மாதங்களாக ரெலா மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த நிலையில்,நேற்று இரவு 07.05 மணிக்கு சிகிக்சை பலனின்றி பரமேஸ்வரி உயிரிழந்தார். இந்நிலையில்,ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி மறைவிற்கு,கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது,”புயலடித்த பொதுவாழ்க்கை சகோதரர் ஆ.ராசாவுடையது. அப்போதெல்லாம் தோளோடு தாங்கி வீழாது காத்த வேர்த்துணை அவர்தம் […]