ஜோத்பூர் சிலிண்டர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் அறிவிப்பு. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் ஷேர்கர் அருகே உள்ள புங்ராவில் திருமண நிகழ்வு நடைபெற்ற போது சிலிண்டர் வெடித்து பெரிய விபத்து ஏற்பட்டது. இதில், 32 பேர் உயிரிழந்துள்ளனர், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் சிலிண்டர் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 […]
விவசாயிகளுக்கு 12-வது தவணையாக ரூ.16,000 கோடி பிஎம் கிசான் நிதியை விடுவித்தார் பிரதமர் மோடி. டெல்லியில் நடைபெற்ற கிசான் சம்மான் சம்மேளன் 2022 மாநாட்டில் பிரதமர் கிசான் நிதியின் 12வது தவணையாக ரூ.16,000 கோடியை சுமார் 12 கோடிக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு பிரதமர் மோடி விடுவித்தார். நாடு முழுவதிலும் இருந்து 13,500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் 1500 வேளாண் தொடக்க நிறுவனங்கள் இந்த நிகழ்வில் பங்கேற்கின்றன. பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு […]
இமாச்சலப் பிரதேசத்தின் உனா மாவட்டத்தில் 4வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இமாச்சல பிரதேசம் முதல் புது டெல்லி வரை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மிகவும் இலகுவான, அதிநவீன வசதிகளை கொண்ட வந்தே பாரத் ரயில் அதிகவேகத்தில் செல்லும் திறன் கொண்டது. இந்த ரயில் புதன் கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் இயங்கும். விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற […]
குஜராத் கலவரம் விவகாரத்தில் பிரதமர் மோடி உள்ளிட்டோருக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். 2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரம் விவகாரத்தில் பிரதமர் மோடி உள்ளிட்டோருக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பழைய வழக்காக இருந்தாலும், குஜராத் கலவர வழக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக கருதப்படுகிறது. பிரதமர் மோடி மீது குற்றச்சாட்டப்பட்டு இருந்ததே இதற்கு காரணம். அந்த […]
பெங்களுருவில் ரூ.28,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்து அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று கர்நாடகா மாநிலம் பெங்களூரு சென்றுள்ளார். இந்தப் பயணத்தில், பெங்களூரு மற்றும் மைசூருவுக்குச் செல்லும் மோடி, பல திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார் என கூறப்பட்டது. இந்த நிலையில், பெங்களுருவில் ரூ.28,000 கோடி மதிப்பிலான ரயில் மற்றும் சாலை உள்கட்டமைப்பு திட்டங்களை தொடக்கி வைத்து அடிக்கல் நாட்டிய பிரதமர் நரேந்திர மோடி, பெங்களூரு மூளை […]
அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை மத்திய அரசு பணியில் சேர்க்க தேர்வு செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவு. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அலுவலகம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை மத்திய அரசு பணியில் பணியமர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். அனைத்துத்துறை அமைச்சகங்களில் பணியாளர்கள் பற்றாக்குறை குறித்து ஆய்வு நடத்தவும் அறிவுறுத்தியுள்ளார். மத்திய அரசு துறையில் […]
டெல்லியில் இன்று அனைத்து மாநில உயர்நீதிமன்றங்களின் 39-வது தலைமை நீதிபதிகள் மாநாடு நடைபெறவுள்ளது.இந்த மாநாட்டுக்கு 6 ஆண்டுகளுக்கு பின்னர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா தலைமை தாங்குகிறார். இதைத் தொடர்ந்து,நாளை (ஏப்ரல் 30-ஆம் தேதி) விக்யான் பவனில் தலைமை நீதிபதிகள் மற்றும் முதல்வர்களின் கூட்டு மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இரண்டு நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் கடந்த 2016 இல் நடைபெற்ற மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் மற்றும் நீதி வழங்கல் […]
அரசாங்கக் கொள்கைகள் ஏதேனும் தவறாகக் கண்டறியப்பட்டால் தங்கள் கருத்தைத் தெரிவிக்க வேண்டும் என பிரதமர் அறிவுறுத்தல். நாட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான செயல்முறைக்கு முன்னுரிமை அளிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி, உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். மத்திய அமைச்சகங்களின் செயலாளர்கள், எல்லாவற்றையும் வெறுமனே அங்கீகரிக்காமல், எந்தவொரு அரசாங்கக் கொள்கை அல்லது திட்டத்திலும் அவர்கள் கவனிக்கும் குறைபாடுகளைக் தெரிவிக்கமாறும் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார். காலம் காலமாக நடந்து வரும் வறுமையை சகஜபடுத்துவது […]
பாரதிய ஜனதாவிற்கு என்று தமிழகத்தில் ஒரு எம்பியும் இல்லாவிட்டாலும் பட்ஜெட்டில் குறையில்லாமல் துறைவாரியாக நிதி ஒதுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் இருந்து பாஜகவிற்கு ஒரு எம்பி கூட இல்லை. இருந்தாலும், தமிழகத்திற்கு எவ்வித குறையும் இல்லாமல் பட்ஜெட்டில் துறைவாரியாக நிதி ஒதுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். 2014 -இல் […]
லக்னோ பல்கலைக்கழகம் இன்று 100-வது ஆண்டு விழாவை கொண்டாடகிறது .இந்த நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். கடந்த 1920-ம் ஆண்டு தொடங்கப்பட்ட லக்னோ பல்கலைக்கழகம் இன்று 100-வது ஆண்டை கொண்டாடுகிறது .இந்த நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் மாலை 5.30 மணிக்கு கலந்து கொள்ளவுள்ளார் . மேலும் இந்த விழாவில் பல்கலைக்கழகத்திற்கான சிறப்பு நினைவு அஞ்சல் முத்திரை மற்றும் நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுவார் என்று பல்கலைக்கழக […]
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சென்று சந்தித்துள்ளார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று காலை விமானம் மூலம் 3 நாள் பயணமாக சென்னையில் இருந்து டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்டார். டெல்லியில் ஆளுநர் பன்வாரிலால் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்க உள்ளதாக கூறப்பட்டது . இந்த நிலையில், தற்போது டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது […]
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேற்றைய தினம் தமிழக பாஜக தலைவரான எல்.முருகன் சந்தித்ததை தொடர்ந்து இன்று காலை விமானம் மூலம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்னையில் இருந்து டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணம் மூலம், ஆளுநர் பன்வாரிலால் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்க உள்ளதாகவும், டெல்லியில் வெள்ளிக்கிழமை வரை […]
இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.மேலும் நாட்டு மக்களுக்கு முக்கிய தகவல்களை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. आज शाम 6 बजे राष्ट्र के नाम संदेश दूंगा। आप जरूर जुड़ें। Will be sharing a message […]
பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16-ஆம் தேதி உடல்நலக் குறைவினால் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உயிரிழந்தார்.இன்று வாஜ்பாய் முதலாமாண்டு நினைவுதினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் டெல்லியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் மரியாதை வாஜ்பாய் நினைவிடத்தில் அஞ்சலி […]