பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இருவரும் காணொலி காட்சி மூலமாக சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்பொழுது, இரு நாட்டு உறவை வலுப்படுத்துவது மற்றும் ரஷ்யா – உக்ரைன் விவகாரம் குறித்து பேசிக் கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த பேச்சுவார்த்தைக்கு பின்பதாக பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவு மேலும் வலுவடையும் வேண்டும் எனவும், உக்ரைனுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பியதற்காக இந்தியாவிற்கு வாழ்த்துக்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி இன்று அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார். பிரதமர் நரேந்திர மோடி இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் காணொளியில் ஆலோசனை நடத்தவுள்ளார்.இந்த ஆலோசனையின் போது உக்ரைன்போர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும்,இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளை மேலும் மேம்படுத்தவும்,கொரோனா தொற்றுநோய், காலநிலை நெருக்கடி, உலகப் பொருளாதாரம் மற்றும் இந்தோ-பசிபிக் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜோ […]