பிரதமரின் பாதுகாப்பு நிதி (PM Cares)யின் அறங்காவலராக டாடா குழுமத்தின் நிறுவனர் திரு ரத்தன் டாடா நியமிக்கப்பட்டுள்ளார். டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ் மற்றும் மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் கரியா முண்டா ஆகியோர் பி எம் கேர்ஸ் (PM CARES) நிதியின் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடியின் அரசாங்கம் தெரிவித்துள்ளது. முன்னாள் கன்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ராஜீவ் மெஹ்ரிஷி, இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் முன்னாள் தலைவர் […]
கடந்த மார்ச் 11, 2020 முதல் பிப்ரவரி 8, 2022 வரையிலான காலகட்டத்தில், கொரோனா தொற்று நோயால் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் அல்லது வளர்ப்பு பெற்றோர் அல்லது எஞ்சியிருக்கும் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஆதரவாக,குழந்தைகளுக்கான PM CARES திட்டம் கடந்த மே 29, 2021 அன்று தொடங்கப்பட்டது. இத்திட்டம் மூலம்,பெற்றோர் அல்லது பாதுகாவலரை இழந்த குழந்தைகள் 23 வயதை எட்டியவுடன் ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படுகிறது. மேலும்,கல்வி மற்றும் கல்வி உதவித்தொகை மூலம் குழந்தைகளை மேம்படுத்தி,அவர்களுக்கு […]
பி.எம்.கேர்ஸ் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கான உதவிகளை பிரதமர் மோடி இன்று வழங்குகிறார். நாடு முழுவதும் கொரோனாவால் பெற்றோர் அல்லது பாதுகாவலரை இழந்த குழந்தைகளுக்காக PM CARES திட்டத்தின் கீழ் பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 30, 2022) காலை 10:30 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் உதவிகளை வழங்குகிறார்.இந்நிகழ்ச்சியில் அந்தந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அமைச்சர்கள்,எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்வார்கள்.மேலும்,இது தொடர்பாக,பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது: “மே 30 ஆம் […]
இந்தியாவுக்கு தேவையான ஆக்சிஜன் வாங்க ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரட் லீ ரூ.41 லட்சம் நிதியுதவி. இந்தியாவில் கொரோனா 2வது அலை காரணமாக பெரும் பேரழிவை சந்தித்து வருகிறது. பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்க, ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடும் நிலவுகிறது. பொருளாதாரமும் சரிவை கண்டுள்ளது. இந்த நிலையில், பிஎம்கேர்ஸ் நிதிக்கு பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்தவகையில் சமீபத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக நடப்பு ஐபிஎல் சீசனில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய […]
பி.எம். கேர்ஸ் நிதியை ஏன் இலவசமாக கொரோனா தடுப்பூசிக்கு பயன்படுத்த முடியாது? என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி. இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் பெருமளவில் அதிகரித்துள்ள நிலையில், மத்திய அரசின் மொத்த தவறான நிர்வாகத்தின் காரணமாக நாடு குழப்பத்தில் உள்ளது. கொரோனா முடிந்துவிட்டதாக மத்திய சுகாதார அமைச்சர் கூறியிருந்த நிலையில், அவர் இதில் கவனம் செலுத்தவில்லை என்றும் கூறியுள்ளார். மேற்குவங்கத்தை கைப்பற்றும் முயற்சியில், பாஜகவினர் முழு நாட்டையும் குழப்பத்தில் தள்ளியுள்ளனர் என விமர்சித்துள்ளார். கொரோனா தடுப்பூசியின் உலகளாவிய […]
தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் பாசாங்கு மட்டுமே நடைபெறுகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தியா முழுவதும் தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தாலும்,கொரோனா வைரஸின் 2-வது அலை மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில், அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி திருவிழா நடத்த அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், ஒவ்வொரு மாநிலங்களிலும் தடுப்பூசி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி […]
பி.எம்.கேர்ஸ் நிதியை தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். பிரதமர் மோடி கொரோனா தடுப்பு நிவாரண பணிகளுக்காக விருப்பமுள்ளவர்கள் பி.எம். கேர்ஸில் நிதி அளிக்கலாம் என்று தெரிவித்தார். கொரோனா போன்ற திடீரென ஏற்படும் பேரிடர் பிரச்னைகளை சமாளிக்கவும், பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவி வழங்கவும் உருவாக்கிய இந்நிதியத்திற்கு, தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், தொண்டு நிறுவனங்கள், தனி நபர்கள் நன்கொடை அளித்து உள்ளனர். இந்நிலையில், பி.எம் கேர்ஸ் நிதியை தேசிய பேரிடர் நிதிக்கு […]