உக்ரைன் – ரஷ்யா போர் தொடர்பாக இன்று இரவு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டு இருந்தார். இதைத்தொடர்ந்து, உக்ரைன் மீது ரஷ்யப்படைகள் இன்று காலை முதல் தாக்கல் நடத்தி வருகிறது. சற்று நேரத்திற்கு முன் பெலாரஸில் முகாமிட்டிருந்த ரஷ்யப்படைகள் தரை மார்க்கமாக உக்ரைனுக்குள் நுழைந்து தலைநகர் கீவ் சென்றடைந்தனர். இதற்கிடையில், போரை நிறுத்த […]
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் என்பிசி தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்தார். அப்போது 2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்புக்கு ஆதரவாக ரஷ்யா தலையிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்தார். அமெரிக்காவில் யூதர்களும், உக்ரேனியர்களும் ரஷ்யக் குடியுரிமையுடன் வாழ்ந்து வருவதாகவும் அவர்களின் தலையீடு இருந்திருக்கலாம் என்றும், அவர்களுக்கு அமெரிக்கர்களே நிதியுதவி செய்திருக்கலாம் என்றும் விளாடிமிர் புடின் குறிப்பிட்டார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் […]
ரஷ்ய அதிபர் புதின் கூறியது, ரஷ்யா அறிமுகப்படுத்தியுள்ள அதிநவீன ஏவுகணைகளால், உலக நாடுகளிடையே ஆயுதப்போட்டி வலுப்பெற்றுள்ளது. எந்த ஏவுகணை தடுப்பு அமைப்பாலும் கட்டுப்படுத்த முடியாத அணுஆயுத ஏவுகணை, வரம்பற்ற தொலைவு செல்லும் ஏவுகணை என, நவீன ஆயுதங்களை ரஷ்யா அறிமுகப்படுத்தியது. இதனால், ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மீண்டும் ஆயுதப்போட்டி உருவாகி உள்ளது. இதனிடையே, பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து நாட்டை பாதுகாக்கவே தவிர, மற்ற நாடுகளை அச்சுறுத்த ஆயுதங்களை குவிக்கவில்லை என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். மேலும் […]