சென்னை : மத்திய அரசின் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இன்னும் இணையவில்லை. இதனால் பி.எம் ஸ்ரீ திட்டத்தின் கீழ் மாநில அரசுகளுக்கு கல்வி உட்கட்டமைப்புகளுக்காக வழங்கப்படும் நிதி இன்னும் மத்திய அரசால் வழங்கப்படவில்லை என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும், பிஎம் ஸ்ரீ திட்டமானது மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையையை போன்றுள்ளது. மும்மொழி கொள்கையை நடைமுறைப்படுத்த கோருகிறது என்றும் அதனால், பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையவில்லை என்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. […]