விஷவாயு தாக்கி ஆந்திராவில் 8 பேர் பலியான விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தேசிய பேரிடர் மீட்பு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஆந்திர மாநிலம், விசாகபட்டினத்தில் இயங்கி வரும் எல்.ஜி பாலிமர் இண்டஸ்டிரியில் இருந்து இன்று அதிகாலை 3 மணிக்கு விஷவாயு ஒன்று வெளியானது. இதனால் அந்த தொழிற்சாலையை சுற்றி இருந்த ஊர்மக்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்ற பிரச்சனை எழுந்தது. இதன் காரணமாக இதுவரை ஒரு குழந்தை உட்பட 8 பேர் பரிதாபமாக […]
உலகமே கொரோனாவுக்கு எதிராக போராடி கொண்டிருக்கும் போது சில நாடுகள் மட்டும் பயங்கரவாதம் எனும் கொடுமையான வைரஸை பரப்பி வருகின்றன – பிரதமர் மோடி. நாம் எனப்படும் அணிசேரா நாடுகளின் கூட்டமைப்பு நேற்று காணொலி மூலம் நடைபெற்றது. அதில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது தனது பல்வேறு கருத்துக்களை அதில் முன்வைத்தார். அவர் பேசுகையில், ‘ உலகமே கொரோனாவுக்கு எதிராக போராடி கொண்டிருக்கும் போது சில நாடுகள் மட்டும் பயங்கரவாதம் எனும் கொடுமையான வைரஸை பரப்பி […]
ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் முழுஊரடங்கை மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்க வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளாராம் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் மார்ச் 24 முதல் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் பின்னர் பிரதமருடனான முதலமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு, ஏப்ரல் 14ஆம் தேதி மீண்டும் 19 நாட்கள் ஊரடங்கு நீடிக்கப்பட்டு மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என பிரதமர் அறிவித்தார். இந்நிலையில் இன்று […]
மருத்துவ, சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் செய்யப்போவதில்லை என பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், சுகாதார பணியாளர்களை தாக்குபவர்களுக்கு 5 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், மருத்துவ சுகாதார ஊழியர்கள் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், கொரோனா வைரஸிற்கு எதிராக […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 15,000 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது மத்திய அரசு. அவரச தேவைக்காக 7,774 கோடி ரூபாயை விடுவிக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த நோய் தொற்று பரவலை தடுக்கவும், நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. […]
நாளுக்கு நாள் கொரோனா வைரஸை தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் அறிவிக்கபட்ட 21 நாள் ஊரடங்கு மேலும் 19 நாட்கள் நீட்டிக்கப்பட்டு,மே மாதம் 3ஆம் தேதி வரையில் இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என பிரதமர் அறிவித்திருந்தார். பிரதமர் இன்று மக்களிடையே இணையம் வழியாக பேசுகையில் ஒரு துண்டால் தனது முகத்தை மூடியவாறு பேச தொடங்கி பின்னர் அதனை நீக்கி முழு முகம் தெரியுமாறு தனது பேச்சை தொடர்ந்தார். பின்னர் தனது டிவிட்டர் பக்கத்தின் புரொபைல் புகைப்படத்தை […]
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு இன்று நிறைவு பெறுவதாக இருந்ததது. இந்த ஊரடங்கை நீட்டிக்க கோரி பல்வேறு மாநில முதல்வர்களும், மருத்துவ நிபுணர்களும் அரசிடம் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் தற்போது பிரதமர் மோடி கூறுகையில், ‘ இன்றுடன் நிறைவடைய இருந்த ஊரடங்கு மேலும் 19 நாள் நீட்டிக்கப்பட்டு, வரும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும்.’ என அறிவித்துள்ளார். மேலும், ‘ஏப்ரல் 20-க்கு பிறகு கொரோனா கட்டுப்படுத்தபட்ட பகுதிகளில், […]
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு இன்று நிறைவு பெறுவதாக இருந்ததது. இந்த ஊரடங்கை நீட்டிக்க கோரி பல்வேறு மாநில முதல்வர்களும், மருத்துவ நிபுணர்களும் அரசிடம் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் தற்போது பிரதமர் மோடி கூறுகையில், ‘ இன்றுடன் நிறைவடைய இருந்த ஊரடங்கு மேலும் 19 நாள் நீட்டிக்கப்பட்டு, வரும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும்.’ என அறிவித்துள்ளார். ஏற்கனவே தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம்,புதுச்சேரி உள்ளிட்ட 9 […]
மத்திய அரசின் 2020-21 செலவு பட்ஜெட்டில் ரூ 30 லட்சம் கோடி இருக்கிறது. அதில், ரூ 65,000 கோடியை மக்களின் பசியைப் போக்க பிரதமர் தருவாரா மாட்டாரா என்பது தான் கேள்வி- முன்னாள் மத்தியஅமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட். இன்று காலை 10 மணி அளவில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளார். சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என நாட்டு மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் பிரதமர் பேச உள்ளதை குறித்து, முன்னாள் மத்திய நிதியமைச்சரும், […]
பிரதமர் மோடி, அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் தீவிர ஆலோசனை மேற்கொண்டார். இதன் பின்னர் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முக்கிய முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ பிரதமர் மோடி ஊரடங்கை நீட்டிக்கும் நல்ல முடிவை எடுத்துள்ளார். இது நல்ல முடிவு. இந்தியா ஊரடங்கை முன்னதாகவே அமல்படுத்தியதால் தான், பல வளர்ந்த நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை இந்தியாவிற்கு ஏற்படவில்லை. இந்த சமயத்தில் ஊரடங்கை […]
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால், கொரோனா தொற்று சமூக பரவலாக மாறாமல் தடுக்கும் வண்ணம் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சில மாநில முதல்வர்கள், மருத்துவர்கள் என பலர் நோய் பரவலை தடுக்க ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தற்போது இந்த சூழ்நிலையில், பிரதமர் மோடி, அனைத்து மாநில முதல்வர்களுடன் […]
உத்திர பிரதேச மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எப்படி நடக்கிறது என அப்பகுதி பாஜக நிர்வாகியிடம் தொலைபேசியில் கேட்டறிந்துள்ளார் பிரதமர் மோடி. வாரணாசி பகுதி பாஜக நிர்வாகி ஹன்ஸ்ராஜ் விஸ்வகர்மாவிடம், பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடியுள்ளார். அப்போது, வாரணாசியில் பொதுமக்களுக்கு விநியோகிக்க அதிகப்படியான முகக்கவசங்களை பாஜகவினர் தயார் செய்துவருவதாக, பாஜக நிர்வாகி குறிப்பிட்டுள்ளார். இந்த முகக்கவசங்களை முதலில் மருத்துவர்களுக்கும், மருத்துவ ஊழியர்கள், சுகாதார பணியாளர்களுக்கு கொடுங்கள். முகக்கவசங்கள் தயாரிப்பதில் நேரத்தையும், […]
இந்தியாவில் தயாரிக்கப்படும் மலேரியா தடுப்பு மருந்தான ஹைடிராக்சி குளூரோகுயின் மருந்தை 20 மில்லியன் டோஸ் அளவிற்கு அமெரிக்காவிற்கு அளித்துள்ளது இந்தியா. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ இந்தியாவிற்கும், இந்திய மக்களுக்கும் நன்றி. அசாதாரண சூழ்நிலையில், நண்பர்களின் உதவி மிக அவசியம். எனவும், இந்த உதவியை மறக்கமுடியாது. இந்திய மக்களை மட்டுமின்றி மனித குலத்திற்கு உதவும் பிரதமர் மோடியின் வலுவான தலைமைக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளிக்கும் […]
உலக அளவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் அதனை தடுக்க பல்வேறு நாடுகளும் போராடி வருகின்றன. இந்நிலையில் கொரோனாவுக்குதடுப்பு மருந்து கண்டறியப்படாத நிலையில், மலேரியாவுக்கு கொடுக்கப்படும் ஹைடிராக்சி குளூரோகுயின் மருந்தை மருத்துவ ஊழியர்களுக்கு தடுப்பு மருந்தாக கொடுக்க இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரை செய்தது. இந்த மருந்தை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த உதவும் என பரிந்துரை செய்தது. இந்த ஹைடிராக்சி குளூரோகுயின் மருந்தை 70 சதவீதம் உற்பத்தி […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் நாடெங்கிலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை இந்தியாவில் 5194 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், இந்த எண்ணிக்கையை கட்டுப்படுத்த பிரதமர் மோடி, அனைத்து கட்சி கூட்டம் போன்ற பல மக்கள் பிரதிநிதிகள், வல்லுநர்கள் உடன் ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில் மாநில அரசுகள், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கை மேலும் நீடிக்க வேண்டும். என கோரிக்கை வைக்கப்பட்டதாகவும், நாட்டில் உள்ள ஒவ்வொரு மக்களின் உயிரையும் காப்பது அரசின் […]
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் உள்ள நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அதனை கட்டுப்படுத்த பலவேறு நாடுகளும் முயற்சித்து வருகின்றன. இந்த வைரஸ் தாக்குதல் வல்லரசு நாடாக அறியப்படும் அமெரிக்காவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. இந்த கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு, அமெரிக்க வாழ் இந்தியரான பிரேம் காஞ்சிபோட்லோ கடந்த திங்கள் கிழமை முயிரிழந்தார். 66 வயதாகும் இவர் அமெரிக்காவில் […]
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகள் முடங்கிப்போய் உள்ளன. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளிநாடுகளில் வேலைக்காக சென்ற இந்தியர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, ஓமன் நாட்டு அதிபரிடம் பேசியுள்ளார். அப்போது, அங்கு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கட்டுப்படுத்திய வழிமுறைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், அங்குள்ள இந்தியர்கள் நலமுடன் இருப்பதற்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, பிரதமர் நரேந்திர மோடியின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதியபட்டுள்ளது. […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வேளையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றாக செயல்படுவதை குறிக்கும் வகையில் அனைவரும் ஒற்றுமையாக மின் விளக்கை அணைத்து அகல்விளக்கு (அ) டார்ச் லைட் ஏற்றுமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இதனை அடுத்து, நேற்று இரவு 9 மணிக்கு பெரும்பாலானோர் தங்கள் வீட்டில் அகல்விளக்கு ஏற்றினர். பிரதமரின் இந்த நடவடிக்கைகள் குறித்து மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் ஓர் அறிக்கை […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பிரதமர் மோடி, பி.எம். கேர் என்கிற திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் நிவாரண உதவிகளை கேட்டுக்கொண்டார். இதற்கான வங்கிக்கணக்கையும், வங்கி கணக்கு இணையதள முகவரியையும் அறிவித்தார். இதனை தொடர்ந்து, பொதுமக்கள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் என பலர் தங்களால் முடிந்த நிதியுதவிகளை செய்துவந்தனர். இது தொடர்பாக மகாராஷ்டிரா மாநில சைபர் கிரைம் போலீசார் ஓர் அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். அதன்படி, பி.எம் கேர் என்கிற இணையதள கணக்கு போல பல போலி கணக்குகள் உருவெடுத்துள்ளனவாம். […]
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உலகம் மக்களின் இயல்பு வாழக்கையை வெகுவாக பாதித்துள்ளது. வளர்ந்த நாடுகள், வல்லரசு நாடுகள், வளரும் நாடுகள் என அனைத்தையும் கடுமையாக சூறையாடி வருகிறது இந்த கொரோனா. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் வல்லரசு நாடாக அறியப்படும் அமெரிக்க நாட்டின் அதிபர் ட்ரம்ப் உடன், தற்போது மெல்ல மெல்ல கொரோனா அதிகரித்து வரும் நம் நாட்டின் பிரதமர் மோடி தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார். இதில், இரு நாட்டிலும் கொரோனாவின் பாதித்து குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. […]