ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவிற்காக தங்கம் வென்ற முன்னாள் குத்துசண்டை வீரர் டிங்கோ சிங்(42) கல்லீரல் புற்றுநோயால் உயிரிழந்தார். டிங்கோ சிங் மணிப்பூரை சேர்ந்தவர். இவர் இந்தியாவிற்காக 1998 இல் நடைபெற்ற ஆசிய குத்துசண்டை போட்டியில் 16 ஆண்டுகளுக்கு பிறகு தங்கம் வென்று பெருமை சேர்த்தார். இதனால் இந்திய அரசு இவரை கௌரவிக்கும் பொருட்டு அந்த வருடமே அர்ஜுனா விருது வழங்கியது. மேலும் கப்பல் படையில் வேலை வழங்கியது. குத்துசண்டை மீது உள்ள ஈர்ப்பால் இவர் குத்துசண்டை […]
கொரோனா தடுப்பூசி முன்பதிவு கோவின் இணையத்தில் தமிழ் மொழி சேர்க்க இ.பி.எஸ் வேண்டுகோள்…. இந்தியாவில் கொரோனா 2 வது அலை பேரழிவை ஏற்படுத்தி மக்களை வாட்டி வதைத்து வருகிறது, மேலும் கொரோனா தொற்றிலிரந்து மக்களைக் காப்பாற்ற தடுப்பூசி ஒன்றே ஒரே தீர்வாக உள்ளதால், மத்திய, மாநில அரசுகள் மக்களை தடுப்பூசி போட வலியுறுத்திவருகிறது. இதைத்தொடர்ந்து அரசு விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் மக்கள் நோய் தொற்றிலிருந்து தப்பிக்க தடுப்பூசிகளை செலுத்துவதில் ஆர்வம் காட்டிவருகின்றனர். மேலும் இந்தியாவில் தடுப்பூசி பற்றாக்குறை நிகழ்வதால் […]
புயல் பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் மாநில முதல்வருக்கு இடையேயான ஆய்வுக் கூட்டத்தில் பாஜக தலைவர்கள்,ஆளுநருக்கு என்ன வேலை? என்று மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று யாஸ் புயல் காரணமாக பிரதமர் நரேந்திர மோடி ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய இரு மாநிலங்களை மேற்பார்வையிட்டார். அப்போது புயல் குறித்த ஆய்வுகூட்டத்தில் பிரதமர் மற்றும் மேற்கு வங்க ஆளுநர், பாஜகவினர் வருகை புரிந்த நிலையில்,மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அரை மணி நேர தாமதமாக […]
யாஸ் புயல் குறித்து பிரதமர் மோடி நேற்று நடத்திய ஆய்வுக்கூட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணித்து,பிரதமர் மோடியை,அவமதித்து விட்டார் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று யாஸ் புயல் காரணமாக பிரதமர் நரேந்திர மோடி ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய இரு மாநிலங்களை மேற்பார்வையிட்டார். அப்போது புயல் குறித்த ஆய்வுகூட்டத்தில் பிரதமர் மற்றும் மேற்கு வங்க ஆளுநர் மட்டுமே வருகை புரிந்த நிலையில்,மேற்கு வங்க முதல்வர் மம்தா […]
யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா,மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட் உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு முதற்கட்டமாக ரூ.1000 கோடி நிவராணம் வழங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் அதி தீவிரப் புயலாக வலுப்பெற்ற யாஸ் புயல்,ஒடிசா-மேற்கு வங்கம் இடையே கடந்த 26 ஆம் தேதியன்று ஒடிசாவின் பாலசோர் பகுதியில்,முழுவதுமாக கரையை கடந்து,மெதுவாக வடக்கு மற்றும் வடமேற்கு திசை குறிப்பாக ஜார்கண்ட் நோக்கி நகர்ந்தது. இருப்பினும்,புயல் கரையைக் கடக்கும்போது,ஒடிசா மற்றும் மேற்கு வங்க […]
இந்திய பிரதமர் ஆலோசனை மற்றம் உரை நிகழ்த்துவதற்கான நேரம் இது இல்லை என்று காங்கிரஸ் ஜெனரல் செக்ரட்ரி கே.சி வேணுகோபால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டு வரும் நிலையில் மக்கள் ஆங்காங்கே கொரோனாவால் மடிந்து வருகின்றனர். மேலும் தடுப்பூசி பற்றாக்குறை, ஆக்ஸிஜன் தட்டுப்பாடு மற்றும் மருத்துவமனைகளில் போதிய படுக்கை இன்மை போன்ற காரணங்கலாலும் மக்கள் அநியாயமாக பலியாகி வருகின்றனர். இந்த சூழலில் அடிக்கடி இந்திய பிரதமர் காணொலி வாயிலாக மக்களுக்காக […]
சிப்கோ இயக்கத்தை அறிமுகப்படுத்திய பிரபல சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் சுந்தர்லால் பகுகுணா கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.அவரின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவலானது மிகவும் தீவிரமாகப் பரவி வருகிறது.இதனால்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக,அரசியல் தலைவர்கள்,திரைத்துறையினர் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். அந்த வகையில்,சிப்கோ இயக்கத்தை அறிமுகப்படுத்திய பிரபல சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் சுந்தர்லால் பகுகுணா(வயது 94),கொரோனா தொற்று காரணமாக ரிஷிகேஸில் உள்ள ஒரு […]
நடிகர் ரஜினிகாந்த்திற்கு இந்திய சினிமாவில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு சற்றுமுன் அறிவித்திருந்தது. நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளராக ரஜினியின் பங்களிப்பிற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து விருது பெற்ற ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி, முதல்வர் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தனது வாழ்த்துகளை தெரிவித்தனர். தற்போது அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நடிகர் ரஜினிகாந்த் தனது ட்வீட்டர் […]
புதுச்சேரி உட்பட 4 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது.இவ்வாறு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள், பேனர்கள்,கட்சி கொடிகள் ஆகிவற்றை பயன்படுத்தக்கூடாது என்பது வழக்கமான நடைமுறை.இந்நிலையில் மத்திய அரசின் திட்டங்களை விளம்பரபடுத்தும் நோக்கில் பிரதமர் மோடியின் புகைப்படம் பெட்ரோல் பங்குகளில் வைக்கப்பட்டு உள்ளது. தேர்தல் தேதி அறைவிக்கப்பட்டுவிட்டதால் இவ்வாறு வைத்திருப்பது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவதாகும் என்று […]
பிரதமர் மோடி சென்னையில் காரில் செல்லும்போது அஜித் ரசிகர்கள் அவரிடம் ஐயா வலிமை அப்டேட் என்று கேட்கும் வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் அஜித் தற்போது வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார்.போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தினை ஹெச்.வினோத் இயக்குகிறார்.நேர் கொண்ட பார்வை படத்தின் வெற்றியை அடுத்து இந்த கூட்டணி வலிமை படத்தில் இணைந்துள்ளது .அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் […]
காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத் மற்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் வியாழக்கிழமை ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தை சந்தித்து மத்திய அரசு நிறைவேற்றியுள்ள புதிய விவசாய சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தினர் . இந்த சந்திப்புக்கு பின்னர் ராஷ்டிரபதி பவனுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “இந்த விவசாய சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானவை என்று நான் ஜனாதிபதியிடம் கூறினேன். இச்சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை இந்த விவசாயிகள் […]
உலகின் மிக நீளமான 9 கி.மீ குகைவழிப்பாதையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி. பனிக்காலத்தில் கடுமையாக ஏற்படக்கூடிய பணி சரிவால் இமாசலப் பிரதேசத்திலுள்ள மணாலியில் இருந்து லஹால்-ஸ்பிடி பள்ளத்தாக்கு வரைக்கும் பனியால் மூடப்பட்டு காணப்படும். இதனால் ஆறுமாதங்களுக்கு அப்பகுதியில் யாரும் போக்குவரத்து வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படும். இந்நிலையில் கடந்த 2000ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் வாஜ்பாய் அரசு முடிவில் கட்டத் தொடங்கப்பட்ட ரேத்தங் சுரங்கப்பாதை வாஜ்பாய் நினைவாக அடல் சுரங்கப்பாதை என கடந்த டிசம்பர் […]
உத்தரகண்ட் மாநிலத்தில் ‘நமாமி கங்கே’ திட்டத்தின் கீழ் 6 முக்கிய திட்டங்களை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். உத்தரகண்ட் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி, காணொளி காட்சி மூலம் இன்று காலை 11 மணிக்கு “நமாமி கங்கே” கீழ் ஆறு திட்டங்களை திறந்து வைக்கிறார். மேலும், கங்கை ஆற்றில் செய்யப்படும் கலாச்சாரம் மற்றும் புத்துணர்ச்சி நடவடிக்கைகளை வெளிப்படுத்த சாந்தி காட்டில் “கங்கா அவ்லோகன்” என்று பெயரிடப்பட்ட கங்கை பற்றிய ஒரு அருங்காட்சியையும் தொடங்கிவைக்கிறார். இந்நிலையில், ஹரித்வார் […]
உத்தரகண்ட் மாநிலத்தில் ‘நமாமி கங்கே’ கீழ் 6 திட்டங்களை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கவுள்ளார். உத்தரகண்ட் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி, காணொளி காட்சி மூலம் நாளை “நமாமி கங்கே” கீழ் ஆறு திட்டங்களை திறந்து வைக்கவுள்ளார். மேலும், சாந்தி காட்டில் “கங்கா அவ்லோகன்” என்று பெயரிடப்பட்ட கங்கை பற்றிய ஒரு அருங்காட்சியை பிரதமர் தொடங்கிவைக்கவுள்ளார். இந்நிலையில்,ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷ் மாவட்டங்களில் கங்கை ஆற்றில் சுமார் 80% கழிவு நீர் இருக்கிறது. எனவே, இங்கு முதலில் […]
பீகாரில் 9 நெடுஞ்சாலை திட்டங்களுக்கு நாளை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர் நரேந்திர மோடி நாளை காணொளி காட்சி மூலம் பீகாரில் ஒன்பது நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார். மேலும், ஆப்டிகல் ஃபைபர் இணைய சேவைகளை தொடங்கி வைப்பார். இதன் மூலம் மாநிலத்தின் 45,945 கிராமங்களும் இணைக்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் நேற்று தெரிவித்துள்ளது. இந்த ஒன்பது நெடுஞ்சாலைத் திட்டங்களில் சுமார் 350 கிலோமீட்டர் நீளமுள்ள சாலையை ரூ. 14,258 கோடி செலவில் அமைக்கப்படவுள்ளது. அக்டோபர்-நவம்பர் […]
நீட், ஜே.இ.இ நுழைவு தேர்வுகளை தாமதப்படுத்துவது மாணவர்களின் கல்வி திறனை பாதிக்கும் என டெல்லி ஐஐடி இயக்குனர் கூறியதற்கு பாஜக எம்பி சுப்பிரமணியம் சுவாமி ட்வீட் மூலம் கருத்து தெரிவித்துள்ளார். மருத்துவ நுழைவு தேர்வான நீட் மற்றும் ஐஐடி பல்கலைக்கழக நுழைவுத்தேர்வான ஜே.இ.இ ஆகிய தேர்வுகளை தாமதப்படுத்துவதால் மாணவர்களின் கல்வி திறன் பாதிக்கப்படும். எனவே அவற்றை குறிப்பிட்ட தேதியில் நடத்தவேண்டும் என டெல்லி, ஐஐடி இயக்குனர் தெரிவித்திருந்தார். இது குறித்து, கருத்து தெரிவித்துள்ள பாஜக தலைவருக்கும் மாநிலங்களவை […]
பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தான் வளர்க்கும் மயிலை வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடி, தனது டிவிட்டர் பக்கத்தில் தேசிய பறவை மயிலை வளர்க்கும் விடியோவை பதிவிட்டுள்ளார். அதற்கு உணவளித்தும், அதனோடு விளையாடியும் மகிழ்ந்துள்ள விடியோவை புல்லாங்குழல் பின்னணி இசையோடு உருவாக்கிய விடியோவை பதிவிட்டு தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். भोर भयो, बिन शोर, मन मोर, भयो विभोर, रग-रग है रंगा, नीला भूरा […]
எனக்கும் அர்ஜுனா விருது என்பது கனவு. அந்த விருதை பெற இன்னும் வேறு என்னென்ன பதக்கங்கள் வாங்க வேண்டும். – மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், பிரதமர் மோடிக்கும், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் கடிதம் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் மல்யுத்த போட்டியில் பங்கேற்ற வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கல பதக்கம் வென்றிருந்தார். இந்நிலையில், அவருக்கு அந்தாண்டு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு சிறந்த விளையாட்டு […]
விநாயகர் சதுர்த்திக்கு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, இந்தாண்டு விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீடுகளில் இருந்தே விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருகின்றனர். மேலும், சிறிய கோவில்கள் திறக்கப்பட்டுள்ளதால், அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. பக்தர்கள், தனிமனித இடைவெளியை பின்பற்றி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை […]
தமிழகத்தில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு செலவிடும் செலவின் பாதி தொகையை மத்திய அரசு ஏற்க வேண்டும் என முதல்வர் பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்திற்கு கொரோனா தடுப்பு நிதியாக 712.64 கோடி ரூபாய் தமிழகத்திற்கு ஒதுக்கிய நிலையில், அதனை 3000 கோடி ரூபாயாக ஒதுக்கி நிதி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், கொரோனா பரிசோதனைக்காக நாள் ஒன்றுக்கு 5 கோடி ரூபாய் தமிழக அரசு செலவிடுகிறது என தெரிவித்த அவர், […]