ஹாக்கி அணி வீரர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக ஒரு சர்ப்ரைஸ் போன் கால் வந்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி பிரிட்டன் காலிறுதி போட்டியில் பிரிட்டன் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் இந்திய ஆடவர் அணி வீழ்த்தியது. 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இதனையடுத்து,ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் ஹாக்கி அரையிறுதி தொடரில் பெல்ஜியம் அணியிடம் 5:2 என்ற கோல் கணக்கில் இந்தியா தோற்றதால்,வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில்,இன்று இந்தியா ஜெர்மனியை […]
ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தினவிழாவில் கலந்துகொள்ள செங்கோட்டைக்கு ஒலிம்பிக் குழுவை பிரதமர் மோடி அழைக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் டோக்கியோ ஒலிம்பிக்கில் 120 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் உட்பட 228 பேர் கொண்ட குழு இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளது.மேலும்,இந்திய அணிக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் வார்த்தைகளை பிரதமர் வழங்கி வருகிறார். இந்நிலையில்,பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று தனது எட்டாவது சுதந்திர தின உரையை நிகழ்த்தவுள்ளார்.இந்நிகழ்வில் கலந்து […]
நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் அவமதிக்கின்றன என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்து பெகாசாஸ்,கறுப்பு பணம்,வேளாண் சட்டம்,பெட்ரோல் டீசல் விலை உயர்வு மற்றும் விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி, அமளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி,இன்று 15 க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகளுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். ஆலோசனைக்கு பிறகு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆகியோர் […]
3000 மான்கள் ஒரே இடத்தில் துள்ளி குதித்து ஓடிய அழகிய காட்சியை பிரதமர் மோடி ரீடிவீட் செய்துள்ளார். குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள பாவ்நகர் மாவட்டத்தில் உள்ளது வெலவாடர் தேசிய பூங்கா. இந்த பூங்காவில் அதிகளவு இருப்பது மான்கள். அதிலும் அழியும் நிலையில் உள்ள மானினமான பிளாக்பக்(கலைமான்கள்) மான்கள் அதிகளவு உள்ளது. மேலும், இந்த பூங்காவில் பல்வேறு வகையில் இருக்கும் புல்லின வகைகள் உள்ளது. இதனையடுத்து இந்த இடத்தில் வலசை நேரங்களில் வெளிநாடுகளில் இருந்து பறவைகள் வருவது வழக்கம். […]
5 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது முறையாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதனையடுத்து முதல் மந்திரியாக மம்தா பானர்ஜி பதவி ஏற்ற பின்பு, தற்பொழுது முதல் முறையாக டெல்லி சென்றுள்ளார். நேற்று மாநில மந்திரிசபை கூட்டம் முடிந்ததும், கொல்கத்தாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு […]
பக்ரீத் பண்டிகை தினத்தையொட்டி இஸ்லாமிய பெருமக்களுக்கு குடியரசு தலைவர், பிரதமர் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பக்ரீத் தினத்தையொட்டி ட்விட்டர் பக்கத்தில், அனைத்து குடிமக்களுக்கும் ஈத் முபாரக். பக்ரீத் பண்டிகை என்பது அன்பு மற்றும் தியாகத்துடன் சமூகத்தில் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்திற்காக இணைந்து செயல்படுவதற்கான விழா என்று தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில் பக்ரீத் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில், ஈத்-முபாரக். ஈத்-உல்-ஆதா தினத்திற்கு […]
மும்பையில் தொடர் கன மழையால் விக்ரோலி பகுதியில் சுவர் இடிந்து இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மழைக்காலம் தொடங்கிய நிலையில்,மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.இதனால்,இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி)கடந்த சனிக்கிழமை ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்தது.அதன்படி,மும்பை நகரின் பல பகுதிகள் நீர் தேங்கியுள்ளது, பல வீடுகளுக்குள் மழைநீர் நுழைந்துள்ளது. இந்த நிலையில்,மும்பையில் பெய்து வரும் தொடர் கன மழையால் விக்ரோலி மற்றும் செம்பூர் பகுதியில் சுவர் இடிந்து விழுந்துள்ளது. […]
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு செல்லும் இந்திய வீரர்களுடன் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாட இருக்கிறார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு 126 வீரர்கள் செல்ல உள்ளனர். இவர்கள் 18 விளையாட்டுகள் உள்ளடக்கிய 69 போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். முதன்முதலாக இந்திய சார்பாக 18 விளையாட்டு போட்டிகள் உள்ளடங்கிய 69 போட்டிகளில் வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்தியாவிலிருந்து டோக்கியோ செல்லும் இந்திய வீரர்களுடன் பிரதமர் இன்று மாலை 5 மணியளவில் காணொலி வாயிலாக கலந்துரையாட உள்ளார். இந்த உரையாடல் […]
இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதிற்கு பிரபலம் அடையாத பெயர்களை பரிந்துரைக்கலாம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடந்த 1954 ஆம் ஆண்டு முதல் குடியரசு தினத்தன்று பல்வேறு துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தும் சிறந்த நபர்களுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. தற்போது இதுகுறித்து பிரதமர் மோடி, பத்ம விருதுகளுக்காக சாதிக்க உத்வேகம் அளிக்கக்கூடிய நபர்களை மக்களே பரிந்துரைக்கலாம் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளதாவது, […]
தமிழகத்தில் புதிய ஆளுநர் நியமனம் செய்யப்படுகிறாரா? அவ்வாறு நடந்தால் மத்திய அரசு எப்படி கலந்தாலோசிக்க வேண்டும் என்று காங்கிரஸ் பிரமுகர் பீட்டர் அல்போன்ஸ் அவரது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். தமிழகத்தின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹிட் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். தற்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற பின்னர், தற்போது முதன் முதலாக தமிழக ஆளுநர் டெல்லி செல்கிறார். இன்று மாலை 4 […]
இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்,குடியரசு தலைவர் மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை இன்று காலை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில்,பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் ஆளுநர் சந்தித்து உள்ளார். தமிழகத்தின் ஆளுநர் மாற்றப்படலாம் என தகவல் வெளியாகி வரும் நிலையில், இந்த சந்திப்பு மிக முக்கியத்தும் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் இந்த சந்திப்பில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை, நீட் தேர்விலிருந்து விலக்கு உள்ளிட்ட விவகாரங்கள் […]
பிரதமர் மோடி தலைமையில் புதிதாக விரிவாக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சரவையின் கூட்டம் தற்போது தொடங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டு பல துறைகளில் மாற்றங்கள் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி,36 பேர் புதிய மத்திய இணை அமைச்சர்களாக நேற்று பதவியேற்றனர்.முன்னதாக,மத்திய இணை அமைச்சர்களாக இருந்த 7 அமைச்சர்கள் பதவி உயர்வு பெற்றனர். இந்நிலையில்,விரிவுப்படுத்தப்பட்ட புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் தற்போது தொடங்கியுள்ளது.டெல்லியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் புதிதாக பதவியேற்ற […]
பிரதமர் மோடிக்கு வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா சிறந்த மாம்பழங்களை பரிசாக அனுப்பியுள்ளார். இந்தியாவின் அண்டை நாடான வங்கதேச அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா மற்றும் வங்கதேசத்தின் நட்புறவின் அடையாளமாக மாம்பழங்களை வங்கதேச பிரதமர் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் மற்ற தலைவர்கள் என 2,600 கிலோ மாம்பழங்கள் 260 பெட்டிகளில் சரக்கு வாகனம் வழியாக அனுப்பி வைக்கப்பட்டது. இதனை கொல்காத்தாவில் உள்ள வங்கதேசத்தின் துணை தூதரகத்தின் […]
தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று மருத்துவர்களிடையே காணொலி வாயிலாக உரையாற்றினார். பிரபல மருத்துவரும் முன்னாள் மேற்கு வங்க முதல்வருமான பிதன் சந்திர ராய் மருத்துவ துறையில் பல்வேறு சேவைகளை செய்துள்ளதால் அவரது நினைவை அனுசரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 ஆம் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி,இன்று பலரும் மருத்துவர்களை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில்,தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று மருத்துவர்களிடையே […]
கடந்த வாரம் பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மாம்பழங்களை அனுப்பி வைத்துள்ளார். பிரதமர் மோடிக்கும், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் இடையே அரசியல் சண்டைகள் இருந்து வருகிறது. நடந்து முடிந்த மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளார் மம்தா பானர்ஜி. இருந்தபோதிலும் இரு தரப்புக்கு இடையேயான மோதல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் தற்போது மேற்கு வங்கத்தில் மாம்பழ பருவம் தொடங்கியுள்ளது. அதனால் மிக சிறந்த […]
மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று பிற்பகல் 3 மணியளவில் மருத்துவர்கள் மத்தியில் உரையாற்றுகிறார். தேசிய மருத்துவர்கள் தினத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, மருத்துவர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய நாட்டின் புகழ்பெற்ற மருத்துவர் மற்றும் மேற்கு வங்க இரண்டாம் முதல்வர் பிதான் சந்திர ராயின். இவர் ஜூலை 1, 1882 ஆம் ஆண்டில் பிறந்தார். மருத்துவ துறையில் பல்வேறு சேவைகளை செய்துள்ளதால் இவரது நினைவாக இவரின் பிறந்த தினத்தை தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. […]
தமிழ் மொழி மீதான என் அன்பு என்றுமே குறையாது என்று பிரதமர் மோடி இன்று மங் கி பாத் நிகழ்ச்சியில் கூறியுள்ளார். பிரதமர் மோடி இன்று காலை 11 மணியளவில் அகில இந்திய வானொலி மூலம் மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது, உலகிலேயே மிக பழமையான தமிழ் மொழி மீதும் தமிழ் கலாச்சாரத்தின் மீதும் அபிமானி நான் என்று கூறியுள்ளார். மேலும், பஞ்சாப் சீக்கிய குரு தமிழ் மொழி குறித்து பெருமையாக […]
நவம்பர் மாதம் வரை இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்தை நீட்டிப்பதாக மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணியளவில் மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், கொரோனா 3 ஆவது அலை பற்றிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் குறித்தும் கொரோனா தடுப்பு பணிகள் பற்றியும் கலந்தாலோசித்தனர். அப்போது பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தின் கீழ் தேசிய உணவு பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு […]
காங்கிரஸ் தலைவர் இந்திரா ஹிருதயேஷ் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி,காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட பிற கட்சி அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினரும்,காங்கிரஸ் தலைவருமான தலைவருமான இந்திரா ஹிருதயேஷ்(வயது 80),சனிக்கிழமையன்று டெல்லியில் நடந்த கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்நிலையில்,திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இன்று இந்திரா ஹிருதயேஷ் காலமானார். இதனையடுத்து,அவரது மறைவிற்கு காங்கிரஸ் கட்சி மற்றும் பிற அரசியல் கட்சி […]
டெல்லியில் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று பிரதமரை சந்திக்கவுள்ளார். முதல்வர் யோகி நண்பகல் 12 மணியளவில் பாஜக தேசிய தலைவரையும் சந்திக்க உள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டுக்கான சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று அவர் டெல்லி சென்றிருந்த நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியிருந்தார். இதனையடுத்து பிரதமர் மோடி அவர்களது […]