தமிழகம்:நாடு முழுவதும் 100 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டதைக் கொண்டாடுகிற வகையில் பாஜக ஈடுபட்டு வருவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். கொரோனா பேரழிவை மூடி மறைக்கவே 100 கோடி தடுப்பூசிகள் போட்டதைக் கொண்டாட்டங்கள் மற்றும் விளம்பரங்கள் மூலம் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்து வருகிறார். இத்தகைய பிரச்சாரங்களின் மூலமாக பாஜக அரசின் இமாலயத் தவறுகளை மூடி மறைத்துவிட முடியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் […]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து மத்திய அரசு திட்டங்களையும் மக்களுக்கு இதேபோல் நேரடியாக எடுத்துச் செல்வார் என்று நம்புவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,கடந்த தீபாவளியன்று செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த 282 நபர்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள், குடும்ப அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகள், சாதிச் சான்றிதழ்கள். நல வாரிய அட்டைகள், பயிற்சிக்கான ஆணைகள், வங்கிக் கடனுதவிகள் ஆகியவற்றை வழங்கினார். […]
திமுகவின் பொய்யில் இருந்து எப்பொழுது எங்களுக்கு ‘விடியல்’ அரசே? என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி ரூ.5 மற்றும் ரூ.10 குறைக்கப்படும் என்று மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்தது.அதன்படி, இந்த விலை குறைப்பானது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து,கர்நாடக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையை 7 ரூபாய் குறைத்திருப்பதாக அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்தார்.அதேபோல,பல […]
இன்று ஆந்திரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், கேரளா, ஹரியானா ஆகிய மாநிலங்கள் உருவான தினம் என்பதால் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், கேரளா மற்றும் அரியானா ஆகிய 6 மாநிலங்கள் உருவான தினமான இன்று பிரதமர் மோடி இந்த மாநிலங்களுக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டர் பதிவு வெளியிட்டுள்ளார். ஆந்திர மக்களுக்கு அவர் தெரிவித்துள்ள வாழ்த்து பதிவில், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு மாநிலம் உருவான நாளில் வாழ்த்துக்கள். […]
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114-வது ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி புகழ்ந்து ட்வீட். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 114-வது ஜெயந்தி மற்றும் 59-வது குருபூஜை விழா கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114-வது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிலையில், பசும்பொன் முத்துராமலிங்கத் […]
இந்திய விமானப்படையின் 89 வது ஆண்டு விழாவான இன்று பிரதமர் மோடி,குடியரசுத்தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். இந்திய விமானப்படையின் ஆண்டு விழா,ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 8 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில்,இன்று இந்திய விமானப்படையின் 89 வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது.இதற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,இந்திய விமானப்படை என்றால் விடாமுயற்சி என்று பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: “விமானப்படை தினத்தில் நமது விமானப்படை […]
கூடங்குளம் அணுக்கழிவுகளை அணுமின் நிலையத்திலேயே சேமித்து வைக்க அனுமதி அளித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென பிரதமர் மோடிக்கு டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார். கூடங்குளம் அணுமின் நிலையத்தின் அணுக்கழிவுகளை அணுமின் நிலையத்திலேயே சேமித்து வைக்க அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் அளித்த உத்தரவை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு நாடாளுமன்ற திமுக உறுப்பினர்(எம்பி) டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: “கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சேமிக்கப் படும் அணுக்கழிவுகளை […]
ஒரு வருடத்திற்குள் சமையல் எரிவாயு விலை ரூ.305க்கு மேல் உயர்ந்துள்ளது என டெல்லி ஆம் ஆத்மி கட்சி குற்றசாட்டு. சர்வதேச சந்தையில்,கச்சா எண்ணெயின் விலை அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சாமானிய மக்கள் பயன்படுத்தும் சமையல் எரிவாயு விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படும். இதுபோன்று மாதத்தில் ஒரு முறை அல்லது இருமுறை சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாற்றம் செய்யப்படுகின்றன. இந்த வருடத்தில் சமையல் எரிவாயு விலை […]
குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி குற்றமற்றவர் என்ற சிறப்பு விசாரணைக் குழுவுக்கு எதிரான வழக்கை வருகின்ற அக்.26 ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கவுள்ளது. கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் உள்ள கோத்ரா எனுமிடத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்குத் தீ வைக்கப்பட்டது. இதில் 59 பேர் பலியாகினர்.இதைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் வன்முறை வெடித்தது. இதனைத் தொடர்ந்து,குஜராத் குல்பர்க்கா சொசைட்டி பகுதியில் நடந்த வன்முறையில் 68 பேர் கொல்லப்பட்டனர்.அதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் […]
ராஜ்யசபா உறுப்பினராக எல் முருகன் தேர்வான நிலையில், பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை பதவிக்கான வேட்பாளராக எல்.முருகன் போட்டியின்றி தேர்வானதை அடுத்து, சென்ற 1ம் தேதி ராஜ்யசபா உறுப்பினராக எல்.முருகன் பதவியேற்றுக்கொண்டார். எல்.முருகனுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சந்தித்து பேசியுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து […]
குஜராத்துக்கு மட்டும் முன்னுரிமை காட்டுகிறார் என பிரதமர் மோடி மீது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி குற்றசாட்டு. குஜராத் மாநிலத்துக்கு மட்டும் பிரதமர் மோடி சாதகமாக செயல்படுவது கூட்டாட்சி தத்துவத்திற்கு வேட்டு வைப்பதாகும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நிதி ஒதுக்குவதில் இருந்து கொரோனா தடுப்பு நடவடிக்கை வரை பாஜக ஆளும் மாநிலத்திற்கு மட்டும் பிரதமர் அள்ளி கொடுக்கிறார் என குற்றசாட்டியுள்ளார். குஜராத்துக்கு மட்டும் […]
ஸ்வச் பாரத் மிஷன் 2.0 இன் நோக்கம் நகரங்களை குப்பை இல்லாததாக மாற்றுவதாகும் என்று பிரதமர் மோடி உரை. டெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் ஸ்வச் பாரத் எனும் தூய்மை இந்தியா 2.O திட்டத்தை (Swachh Bharat Mission-Urban 2.0) பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். குப்பை இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும், திறந்தவெளி கழிவறையை ஒழித்தல், நகரங்களை தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பணிகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக […]
புதுச்சேரி எம்பியாக செல்வகணபதி அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டது குறித்து பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். புதுச்சேரி மாநிலங்களவை எம்.பி.கோகுலகிருஷ்ணன் அவர்களின் பதவிக் காலம் வருகின்ற அக்டோபர் 6-ம் தேதியுடன் முடிவடையவுள்ளது. இதனால்,புதிய எம்.பி.யைத் தேர்வு செய்ய வரும் அக்டோபர் 4-ம் தேதி மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி,இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த செப். 15-ம் தேதி தொடங்கி கடந்த 22-ம் தேதி முடிவடைந்தது. மாநிலத்தின் ஆளும் கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு […]
பிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி விமான நிலையம் வந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க பயணம் மேற்கொண்டு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் 76 வது அமர்வில் உரையாற்றினார்.அதற்கு முன்னதாக குவாட் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டார் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்காட் மோரிசன் உள்ளிட்டவர்களிடம் இருதரப்பு மற்றும் பலதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார். இந்நிலையில்,பிரதமர் நரேந்திர மோடி தனது […]
பிரதமர் மோடி அவர்களின் சொத்து மதிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அடல் பிஹாரி வாஜ்பாயின் காலத்தில், பொது வாழ்க்கையில் அதிக வெளிப்படைத்தன்மைக்காக ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும் அனைத்து மத்திய அமைச்சர்களும் தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை தானாக முன்வந்து அறிவிக்க வேண்டும் என்று அரசாங்கம் முடிவு செய்தது. இந்த அறிவிப்புகள் பொது களத்தில் கிடைக்கின்றன மற்றும் பிரதமரின் இணையதளம் மூலம் அணுகலாம். இந்நிலையில்,பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,தனது சொத்து மதிப்பு குறித்த விபரங்களை பொதுமக்கள் பார்வைக்காக தனது அதிகாரப்பூர்வ […]
அமெரிக்க சுற்றுப்பயணம் நிறைவடைந்ததையடுத்து,பிரதமர் மோடி நேற்று இரவு நியூயார்க்கில் இருந்து இந்தியா புறப்பட்டார். அமெரிக்கா வாஷிங்டனில் நடைபெற்ற குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி மூன்று நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார்.நேற்று இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து,பிரதமர் மோடி நியூயார்க்கில் நடந்த ஐ.நா. பொது சபை கூட்டத்தின் 76-வது அமர்வில் உரையாற்றினார்.அப்போது,கொரோனா தொற்று பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கை,பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை, […]
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடியை விமான நிலையத்தில் அமெரிக்க அதிகாரிகள் மற்றும் இந்திய தூதர் வரவேற்பு. நன்கு நாட்களுக்கு அரசு முறை சுற்று பயணமாக நேற்று டெல்லியிலிருந்து அமெரிக்கா புறப்பட்ட பிரதமர் மோடி அங்கு சென்றடைந்தார். வாஷிங்டனில் உள்ள ஆண்ட்ருஸ் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடியை அமெரிக்கா அரசு உயர் அதிகாரிகள் மற்றும் இந்திய தூதர் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். அமெரிக்க வாழ் இந்தியர்கள் பலர் விமான நிலையத்தில் இந்திய தேசிய கொடியுடன் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு […]
செப்டம்பர் 24 ஆம் தேதி நடைபெற உள்ள பிரதமர் மோடி மற்றும் அதிபர் ஜோ பைடன் சந்திப்பு இரு நட்டு உறவை வலுப்படுத்தும் என வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்துள்ளார். செப்டம்பர் 24-ஆம் தேதி அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் குவாட் அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இந்த வாரம் அமெரிக்கா புறப்பட உள்ளார். அங்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவரும் […]
தமிழகத்துக்கு வாரம்தோறும் 50 லட்சம் கொரோனா தடுப்பூசி வழங்கக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம். அதில், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் அதிகளவில் செலுத்தப்பட்டு வரும் நிலையில், அக்டோபர் 31-ஆம் தேதிக்கு முன்பாக தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசிகளை போடுவதற்காக வாரந்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். தமிழநாட்டுக்கு இதுவரை போதிய தடுப்பூசிகளை வழங்கி வரும் பிரதமருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். எனினும் தடுப்பூசி போடுவதில் தேசிய […]
பிரதமர் மோடியை மிகவும் மதிக்கிறேன் என்று முன்னாள் வங்காள முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் மைத்துனி தெரிவித்துள்ளார். இரா பாசு தெரிவித்துள்ளதாவது, பிரதமர் நரேந்திர மோடியின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அவர் ஊழலில் ஈடுபடுவதாக நான் நினைக்கவில்லை. இவ்வாறு முன்னாள் வங்காள முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் மைத்துனி இரா பாசு கூறியுள்ளார். மேலும் கூறிய இரா பாசு, பிரதமர் மோடி நல்ல வேலை செய்து வருகிறார். விவசாயிகளால் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றாலும், குறிப்பாக ரயில்வே துறையில் […]