விருந்தினராக வருபவருக்கு கறுப்புக்கொடி காட்ட வேண்டிய அவசியமில்லை என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் ட்வீட். இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், திடீர் ஞானோதயம் பெற்றிருக்கிற தி.மு.க, “பிரதமர் மோடி எங்களுக்கு எதிரி இல்லை. விருந்தினராக வருபவருக்கு கறுப்புக்கொடி காட்ட வேண்டிய அவசியமில்லை” என்று கூறியுள்ளதைப் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது. எதிர்க்கட்சியாக இருந்தால் ஒன்று, ஆளுங்கட்சியான பிறகு வேறொன்று என தி.மு.க போடும் இரட்டை வேடங்கள் அம்பலமாகி வருவதற்கு […]
நாட்டில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில்,பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார். தென்னாப்பிரிக்காவில் உருமாறிய ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்றானது,பல்வேறு நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது.அந்த வகையில் இதுவரை 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமிக்ரான் தொற்று தீவிரமாகப் பரவி மக்களிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக,இந்தியாவில் இதுவரை 213 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.அதன்படி,நாட்டில் மகாராஷ்டிரா,கர்நாடகா, தெலுங்கானா,டெல்லி,ஆந்திரா,கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பரவி வரும் ஒமிக்ரான் தொற்று,ஜம்மு காஷ்மீர் மற்றும் ஒடிசாவில் முதல் […]
நாட்டில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார். இந்தியாவில் 213 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். நாடு முழுவதும் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று பரவ தொடங்கியுள்ள நிலையில், நாளை ஆலோசனையில் ஈடுபடுகிறார். நாட்டில் மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பரவி வரும் ஒமிக்ரான் தொற்று, ஜம்மு காஷ்மீர் […]
பூடான் நாட்டின் உயரிய விருதான “நகடக் பெல் ஜி கோர்லோ” விருதை இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கவுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவுத்துள்ளது. பூடான் நாட்டின் 114-வது தேசிய நாளான இன்று பல்வேறு துறைகளில் உள்ளவர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.அந்த வகையில், இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடிக்கு,பூடான் அரசு அந்நாட்டின் மிக உயரிய விருதான் “நகடக் பெல் ஜி கோர்லோ” விருதை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக,பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் கூறியதாக அந்நாட்டின் பிரதமர் […]
பெண்களின் திருமண வயதை 18 லிருந்து 21 ஆக உயர்த்தும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,தனது உரையின்போது பெண்களின் திருமண வயது 18 லிருந்து 21 ஆக உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில்,பெண்களின் திருமண வயதை 18 லிருந்து 21 ஆக உயர்த்தும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.எனினும்,இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட வேண்டும், […]
1971ஆம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தானுடனான போரில் இந்தியா வெற்றி பெற்றதன் பொன்விழாவை முன்னிட்டு,தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கதேச விடுதலைப் போரானது பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடந்தது.இப்போரில்,டிசம்பர் 16 ஆம் தேதி இந்தியாவும் முக்தி பாஹினியும் (வங்காளதேச விடுதலை இராணுவம்) வென்று வங்கதேசம் உருவாக்கப்பட்டது.அப்போது,சுமார் 90,000 பாகிஸ்தான் போர் வீரர்கள் சரணடைந்தனர்.மேலும்,இப்போரில்,இந்திய ராணுவ வீரர்கள் உட்பட 3 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. […]
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக இன்று தனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசிக்கு வருகிறார். பிரதமர் அலுவலகம் (PMO) படி, பிரதமர் மோடி, தனது பயணத்தின் முதல் நாளான இன்று மதியம் 12 மணிக்கு, பிரபலமான கால பைரவர் கோயிலுக்குச் செல்வார். பின்னர், சுமார் ஒரு மணி நேரம் கழித்து, அவர் காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று, சுமார் 339 கோடி செலவில் கட்டப்பட்ட காசி விஸ்வநாத் தாமின் முதல் கட்டத்தைத் திறந்து வைப்பார் என்று […]
மார்ட்டினின் பியூச்சர் கேமிங் அண்ட் ஓட்டல் சர்வீஸ் நிறுவனம் மூலம் பா.ஜ.க.வுக்கு லாட்டரி மன்னன் என்ற மார்ட்டின் என்பவர் ரூ.100 கோடி நன்கொடை அளித்திருப்பது புரூடண்ட் தேர்தல் நிதி அறக்கட்டளை மூலம் அம்பலமாகியுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலின்போது,பாஜக கட்சிக்கு லாட்டரி மன்னன் என்றழைக்கப்படும் மார்ட்டின் சாண்டியாகோ ரூ.100 கோடி நன்கொடை அளித்திருப்பது புரூடண்ட் தேர்தல் நிதி அறக்கட்டளை மூலம் அம்பலமாகியுள்ளது என்றும், சர்ச்சைக்குரிய லாட்டரி அதிபர் ஒருவர் […]
கடந்த 2003 ஆம் ஆண்டு மின்சாரத் திருத்தச் சட்டத்தில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்த முன்வடிவை நிறுத்தி வைக்குமாறு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். கடந்த 2003 ஆம் ஆண்டு,மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட மின்சாரத் திருத்த சட்டத் திருத்தம்,தனியார் மின் விநியோக நிறுவனங்களுக்குச் சாதகமாகவும், பொதுத்துறை நிறுவனங்களை பாதிக்கும் வகையிலும் இருப்பதோடு, மாநில அரசு நிறுவனங்களின் செயல்பாடுகளில் தலையிடுவதாகவும் உள்ளதால்,இந்தச் சட்டத் திருத்த முன்வடிவினை […]
உங்களை மாற்றிக்கொள்ளுங்கள் அல்லது மாற்றங்களுக்கு தயாராகுங்கள் என பிரதமர் மோடி கட்சி எம்.பிக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். புதுடெல்லியில் உள்ள அம்பேத்கார் சர்வதேச மையத்தில் நடைபெற்ற பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பிரதமர் மோடி அவர்கள் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், பாஜக உறுப்பினர்கள் தாங்களாகவே மாறிக் கொள்ளுங்கள் அல்லது காலப்போக்கில் வரும் மாற்றத்திற்கு தயாராகுங்கள் என கூறியுள்ளார். ஏனென்றால், பாஜக உறுப்பினர்களின் வருகை பதிவு மிக மோசமாக இருப்பதாகவும் இந்த பிரச்சனை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. […]
உத்தரபிரதேசம்:கோரக்பூரில் முக்கிய வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு மாநிலத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,இன்று,கிழக்கு உ.பி.யின் மிக முக்கியமான நகரங்கள் மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த ஊரான கோரக்பூரில் ரூ.9600 கோடி மதிப்பிலான 3 பெரிய திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார். இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.மேலும்,பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். PM Narendra […]
உத்தரபிரதேசம்:கோரக்பூரில்,எய்ம்ஸ் மருத்துவமனை திறப்பு உள்ளிட்ட 3 பெரிய நலத்திட்ட பணிகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு மாநிலத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,பிரதமர் நரேந்திர மோடி இன்று,கிழக்கு உ.பி.யின் மிக முக்கியமான நகரங்கள் மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த ஊரான கோரக்பூரில் ரூ.9600 கோடி மதிப்பிலான 3 பெரிய திட்டங்களைத் தொடங்கி வைக்கவுள்ளார். கடந்த திங்கள்கிழமை மாலை கோரக்பூர் வந்தடைந்த யோகி ஆதித்யநாத், பிரதமரின் வருகையை முன்னிட்டு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு […]
ரஷ்யா- இந்தியா உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின் இன்று டெல்லி வருகிறார். ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதின் அவர்கள் இந்திய ரஷ்யா உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று டெல்லி வரவுள்ளார். அப்பொழுது,7 லட்சத்துக்கும் மேற்பட்ட நிமிடத்திற்கு 600 தோட்டக்களை உமிழும் ஏகே 203 வகை துப்பாக்கிகளை வாங்குவது மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான வணிகம் உள்ளிட்ட பல்வேறு உடன்பாடுகள் செய்து கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று […]
டெல்லி:நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத்தொடரில் அனைத்து விவகாரங்கள் தொடர்பாக விரிவான விவாதங்களுக்கு தயார் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தற்போது தொடங்கியுள்ளது.இந்த குளிர்கால கூட்டத்தொடர் டிச.23-ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், முதல் நாளான இன்று மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறுவது மற்றும் 26 புதிய மசோதாக்களை பாஜக தலைமையிலான மத்திய அரசு நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில்,நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக செய்தியாளர் […]
டெல்லி:எதிர்காலத்தில் தான் ஆட்சி அதிகாரத்தில் இருக்க விரும்பவில்லை எனவும்,எனினும்,மக்களுக்காக சேவை செய்ய மட்டுமே தான் விரும்புவதாகவும்,மன் கி பாத் வானொலியின் 83 வது எபிசோடில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மன் கி பாத் என்பது பிரதமரின் மாதாந்திர வானொலி உரை ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பாகும்.இந்நிலையில்,மன் கி பாத் வானொலியின் 83 வது எபிசோடில் பேசிய பிரதமர் மோடி,தான் இன்றும் ஆட்சி அதிகாரத்தில் இல்லை என்றும் சேவை மட்டுமே செய்ய தான் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக […]
டெல்லி:கொரோனா நிலைமை மற்றும் தடுப்பூசிகள் குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவர்கள்,தற்போது ஆலோசனை மேற்கொண்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில்,கொரோனா நிலைமை மற்றும் தடுப்பூசிகள் குறித்து அரசு உயர் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தலைநகர் டெல்லியில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன்,அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா, பிரதமரின் முதன்மை செயலாளர் பிகே மிஸ்ரா மற்றும் நிதி ஆயோக் […]
அரசியலமைப்பை மத்திய அரசு அவமதிப்பதாகக் கூறி அரசியலமைப்பு நாள் விழாவைப் புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் வரைவுக்குழுவின் தலைவராக செயற்பட்ட டாக்டர் அம்பேத்கரை கௌரவிக்கும் விதமாகவும், நினைவுகூரும் வகையிலும் மற்றும் இந்திய அரசியலமைப்புக்காக அயாரதுழைத்த அனைவருக்கும் மரியாதை செய்யும் விதமாகவும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் உள்ள மத்திய அரசால் 2015 ஆம் ஆண்டு, நவம்பர் 26 இல் அரசியல் சாசன தினம் தொடங்கப்பட்டது. அதன்படி,ஒவ்வொரு வருடமும் நவம்பர் 26, “இந்திய […]
டெல்லி:3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும் மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.இவர்களது போராட்டம் 300 நாட்களுக்கு மேலாக தொடர்ந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறுவதாகவும், வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் […]
சம்யுக்தா கிசான் மோர்ச்சா என்ற விவசாயிகள் அமைப்பு 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி,டெல்லியில் விவசாயிகள் ஓராண்டாக போராடி வரும் நிலையில் ,மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்திருப்பதாகவும்,அதன்படி வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று கடந்த 19 ஆம் தேதியன்று பிரதமர் மோடி அறிவித்தார். நாடாளுமன்றத்தில் இதற்கான […]
பிரதமர் மோடி அவர்கள் தலைமையில் வருகின்ற 24 ஆம் தேதி மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி,டெல்லியில் விவசாயிகள் ஓராண்டாக போராடி வரும் நிலையில் ,மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்திருப்பதாகவும்,வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுவதாக,கடந்த 19 ஆம் தேதியன்று பிரதமர் மோடி அறிவித்தார். நாடாளுமன்றத்தில் இதற்கான சட்டங்கள் இயற்றப்படுவதற்கு முன்பு,மக்களவை மற்றும் மாநிலங்களவை […]