இந்திய வர்த்தக ஒப்பந்தத்தை கொண்டாட பிரதமர் மோடிக்கு ‘பிடித்த கிச்சடி’யை சமைத்த ஆஸ்திரேலிய பிரதமர், அப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்தியாவுடன் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி ஒரு மெய்நிகர் விழாவில் வர்த்தக ஒப்பந்தத்தில் ஆஸ்திரேலியா கையெழுத்திட்டது.ஆஸ்திரேலியா-இந்தியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் 85 சதவீத ஆஸ்திரேலிய பொருட்களுக்கும், 95 சதவீத இந்திய பொருட்களுக்கும் வரிவிலக்கு அளிக்கும்.இரு நாடுகளுக்கு இடையேயான ஏற்றுமதியை பில்லியன் டாலர்களாக அதிகரிக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில்,இந்தியாவுடனான புதிய […]
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது.இப்படிப்பட்ட சூழ்நிலையில் ரஷ்யா மீது மிகப்பெரிய நிறுவனங்கள் பொருளாதார தடையை விதிக்க தொடங்கியுள்ளன. ஆனால்,உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக ஐநா பொதுச் சபையின் தீர்மானத்தை இந்தியா,சீனா உள்ளிட்ட சில நாடுகள் புறக்கணித்தன.குறிப்பாக, உக்ரைன் நெருக்கடி தொடர்பாக பொதுச் சபைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் ஐ.நா. பாதுகாப்புச் சபையின் நடைமுறை வாக்கெடுப்பில் இருந்தும் இந்தியா விலகியிருந்தது. இந்நிலையில்,ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் […]
டெல்லி:நாடு முழுவதும் உள்ள பாஜக உறுப்பினர்களுடன் மத்திய பட்ஜெட் குறித்து இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி பேசுகிறார். கடந்த ஜனவரி 31 ஆம் தேதி மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் உரையுடன் தொடங்கிய நிலையில்,நேற்று மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.இந்த பட்ஜெட் தாக்கலில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்ட நிலையில்,சாமானிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும்,இதனால் விவசாயிகள், […]
முதலில் படேலை தேர்ந்தெடுத்த பிரதமர் மோடி, தற்போது நேதாஜியை தேர்ந்தெடுத்துள்ளார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சனம். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, பிரதமர் மோடியின் ஆட்சியில் ஏழைகளின் வருமானம் குறைந்து, பணக்காரர்களின் வருமானம் 33% அதிகரித்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் ஏழைகளின் வருமானம் 53 சதவிகிதம் குறைந்துள்ளது. ஏழைகளின் வருமானம் குறைந்ததால் ஏற்பட்ட விளைவுகளை கிராமப்புறங்களில் காண முடிகிறது. கோவை, ஈரோடு மாவட்டங்களில் ஏழை, பணக்காரர்கள் வேறுபாடு அதிகம் உள்ளது. […]
அரசு அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து பிரதமர் மோடி படத்தை மாட்டிய பாஜக அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கைது. கோவை அருகே பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்குள் புகுந்த பாஜக அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமையிலான பாஜகவினர், உள்ளே புகுந்து சுவற்றில் பிரதமர் மோடியின் படத்தையும் மாட்டியுள்ளனர். இதனைப் பார்த்த பேரூராட்சி அலுவலக ஊழியர்கள், அனுமதியின்றி அலுவலகத்திற்கு வந்து புகைப்படம் மாற்றுவது தவறு என்றும் வேண்டுமானால் அனுமதி […]
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 125-வது பிறந்தநாளில் அவருக்கு தலைவணங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மிகவும் முக்கிய பங்கு வகித்த சுதந்திரப் போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 125 வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.அந்த வகையில்,”சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி,இன்று காலை 10.30 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தின் மைய மண்டபத்தில் நடைபெறும் மத்திய அரசு முன்னதாக தெரிவித்திருந்தது. […]
மும்பை அருகே அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி உத்தரவு. மும்பையின் டார்டியோ பகுதியில் உள்ள பாட்டியா மருத்துவமனை அருகே அமைந்துள்ள 20 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தின் 18 வது மாடியில் இன்று காலை 7.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 13 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. இதனையடுத்து, தீ அணைக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தீ […]
இனி ஆண்டுதோறும் ஜனவரி 16 ஆம் தேதி “ஸ்டார்ட் அப் தினமாக” கொண்டாடப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். நாட்டில் உள்ள சிறு,குறு தொழில் முனைவோரிடம் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,காணொலி வாயிலாக இன்று காலை முதல் உரையாற்றி வருகிறார்.இந்நிலையில்,இனி ஆண்டுதோறும் ஜனவரி 16 ஆம் தேதி “ஸ்டார்ட் அப் தினமாக” கொண்டாடப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.இது தொடர்பாக,பிரதமர் கூறியதாவது: “ஜனவரி 16 ஆம் தேதி ‘தேசிய தொடக்க தினமாக'(ஸ்டார்ட் அப்) கொண்டாடப்படும்.இத்னையடுர்த்து,புதிய இந்தியாவின் முதுகெலும்பாக […]
புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள காமராஜர் மணிமண்டபத்தை நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி. புதுச்சேரி அரசு சார்பில் ரூ.23 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி அரங்குடன் கூடிய காமராஜர் மணிமண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை (12.01.2022) காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார். சுமார் 1,000 பேர் அமரும் வசதி கொண்ட இந்த மண்டபம் கல்வி நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சகம் சார்பில் புதுச்சேரியில் ரூ.122 கோடி முதலீட்டில் […]
தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை காணொலி வாயிலாக பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார். தமிழகத்தில் ராமநாதபுரம்,விருதுநகர்,திண்டுக்கல்,நீலகிரி,திருப்பூர், நாமக்கல்,திருவள்ளூர்,நாகப்பட்டினம்,கிருஷ்ணகிரி,அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு கடந்த ஆண்டு அனுமதி அளித்தது.அதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று நிறைவடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து,தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்க ஜனவரி 12 ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வர இருந்த நிலையில், கொரோனா காரணமாக பிரதமரின் பயணம் […]
சென்னை பெரும்பாக்கத்தில் 70 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை பிரதமர் நரேந்திர மோடி,காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார். சென்னையின் பெரும்பாக்கத்தில் ரூ.24.65 கோடியில் 70 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை வரும் 12 ஆம் தேதி காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். காணொலியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் […]
இந்தியாவில் கொரோனா தொற்றின் பாதிப்பு நிலவரம் தொடர்பாக பிரதமர் மோடி இன்று ஆலோசனை. நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, பிரதமர் மோடி இன்று மாலை 4.30 மணியளவில் ஆலோசனை மேற்கொள்கிறார். இந்தியாவில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். டெல்லியில் இன்று 4.30 மணிக்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை நடத்துகிறார். இதனிடையே, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,59,632 பேர் […]
டெல்லி:பஞ்சாப்பில் நேற்று முன்தினம் பிரதமர் மோடியின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு குறித்து இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவுள்ளது. பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் ரூ. 42,750 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட இருந்தார்.இந்த நிகழ்ச்சிக்காக நேற்று முன்தினம் பஞ்சாப் வந்த பிரதமர் மோடி,விமான நிலையத்திலிருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் செல்ல இருந்த நிலையில் மோசமான வானிலை கரணமாக ஹெலிகாப்டர் பயணம் ரத்து செய்யப்பட்டு சாலை மார்க்கமாக பிரதமர் சென்றார். அப்போது,பதிண்டா […]
பஞ்சாப்பில் நேற்று பிரதமர் மோடியின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு குறித்து நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவுள்ளது. பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் ரூ. 42,750 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட இருந்தார்.இந்த நிகழ்ச்சிக்காக நேற்று பஞ்சாப் வந்த பிரதமர் மோடி,விமான நிலையத்திலிருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் செல்ல இருந்த நிலையில் மோசமான வானிலை கரணமாக ஹெலிகாப்டர் பயணம் ரத்து செய்யப்பட்டு சாலை மார்க்கமாக பிரதமர் சென்றார். அப்போது,பதிண்டா என்ற இடத்தில் […]
பிரதமர் தனது நிகழ்ச்சியை ரத்து செய்து, திரும்ப சென்றது வருத்தமளிக்கிறது என்று பஞ்சாப் முதல்வர் விளக்கம். பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் இன்று ரூ.42,750 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி சென்றிருந்தார். மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்த்த பிரதமர், சாலை மார்க்கமாக சென்ற போது ஏராளமான போராட்டக்காரர்கள் சாலையை மறித்ததால் 20 நிமிடங்கள் பிரதமரின் வாகனம் சிக்கியது. இதனால் பாதுகாப்பு குறைபாடு காரணமாக பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகள் […]
தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்கும் திட்டங்கள் 2014 முதல் 2019 வரை அறிவிக்கப்பட்டவை என்றும்,அதன்பின் 7 ஆண்டுகளாகியும் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படாததை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை,திருப்பத்தூர்,மயிலாடுதுறை,தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் தனியார் மருத்துவக் கல்லூரிகளும் இல்லை என்பதால் அவற்றில் மத்திய அரசின் நிதியுதவியுடன் கூடிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க அனுமதி கோரலாம் எனவும்,இது குறித்து மத்திய அரசுடன் தமிழக அரசு பேச்சு நடத்த […]
மேஜர் தியான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். உத்தரபிரதேசம் மீரட்டில் நவீன மற்றும் சிறந்த விளையாட்டு உள்கட்டமைப்புகளுடன் கூடிய மேஜர் தியான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மீரட்டின் சர்தானா நகரின் சல்வா மற்றும் காளி கிராமங்களில் சுமார் 700 கோடி மதிப்பீட்டில் பல்கலைக்கழகம் கட்டப்படவுள்ளது. விளையாட்டு பல்கலைக்கழகமானது செயற்கை ஹாக்கி மைதானம், கால்பந்து மைதானம், கூடைப்பந்து /கைப்பந்து/கபடி மைதானம், புல்வெளி டென்னிஸ் மைதானங்கள், உடற்பயிற்சி கூடம், செயற்கை […]
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு காஷ்மீர் வைஷ்ணவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ஜம்மு – காஷ்மீரின் கத்ராவில் உள்ள புகழ்பெற்ற வைஷ்ணவி தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்,காயமடைந்தவர்கள் 13 பேர் நாராயணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.எனினும், காயமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. #UPDATE | Visuals […]
பிரதான் மந்திரி கிசான் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு 10வது தவணை நிதியை விடுவிக்கிறார் பிரதமர் மோடி. விவசாயி குடும்பங்களுக்கு ஆதரவாக கடந்த 2018 டிசம்பரில் பிரதான் மந்திரி கிசான் திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டது. இதன்பின் கடந்த 2019 பிப்ரவரியில் பிரதமர் மோடி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். பிரதான் மந்திரி கிசான் திட்டத்தின் கீழ், வரும் ஒவ்வொரு விவசாய குடும்பங்களுக்கும் தலா ரூ.2,000 வீதம் ஆண்டு முழுவதும் மூன்று காலாண்டு தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கபடுகிறது. இத்திட்டத்தின் கீழ், […]
ஓமைக்ரான் வகை கொரோனா பரவல் காரணமாக பிரதமர் மோடியின் ஐக்கிய அரபு அமீரகம் பயணம் ஒத்திவைப்பு. ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு செல்லவிருந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டது. துபாய் எக்ஸ்போவில் (கண்காட்சி) பங்கேற்பதற்காக ஜனவரி 6-ஆம் தேதி அன்று ஐக்கிய அரபு அமீரகம் செல்லவிருந்த நிலையில், தற்போது பயணம் ஒத்திவைக்கப்பட்டது.