ஒட்டாவா : கனடாவில் இந்திய தூதரகங்கள் ஏற்பாடு செய்திருந்த தூதரக சேவை முகாம்களுக்கு, கனடா பாதுகாப்பு அதிகாரிகள் அதாவது அந்நாட்டு அரசு போதிய பாதுகாப்பு மறுத்துள்ளது. இதனால், கனடாவில் நடைபெற இருந்த 14 சிறப்புமுகாம்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த நவ.-3 ஆம் தேதி. கனடாவில் பிராம்டன் நகரில் உள்ள ஹிந்து சபா கோயிலுக்குள் அத்துமீறி நுழைந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் அங்கிருந்த பக்தர்களை சரமாரியாக தாக்கினார்கள். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இந்த நிலையில், […]
சென்னை : முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கிது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்வு களைகட்டி வருகிறது. இந்நிகழ்ச்சிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் கடல் அலைபோல குவிந்துள்ளனர். சூரசம்ஹாரத்தை காண கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். இதை தொடர்ந்து 7-ம் நாளான நாளை (நவ.8) திருக்கல்யாணம் நடைபெறும்.
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக இருக்கும் பிஎம் வித்யாலட்சுமி (PM Vidhyalakshmi) திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது. உயர்கல்வி படிக்க விரும்பும் தகுதி உள்ள மாணவர்கள் இந்த திட்டத்தின் கீழ் கடனுதவி பெற்று உயர்கல்வி படிக்கலாம் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டத்தில் அதிகபட்சம் ரூ.10 லட்சம் ரூபாய் வரை மாணவ, மாணவிகள் கடனுதவி பெற்றுக் கொள்ள முடியும். மேலும், ரூ.7.50 லட்சம் வரை மத்திய அரசின் உத்தரவாதம் […]
வாஷிங்டன் : கடந்த நவ-5. தேதி அமெரிக்க அதிபர் தேர்தலானது நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 295 மாகாணங்களைக் கைப்பற்றி 2-வது அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அமெரிக்க அரசியல் வரலாற்றில் சிறப்பான வெற்றியைப் பெற்ற அவருக்கு உலக முழுவதும் உள்ள தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி, அதிபராக வெற்றிப் பெற்ற டிரம்ப்புக்கு எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார். அதன் பின், தொலைபேசி வாயிலாக டிரம்பை தொடர்பு […]
டெல்லி : 47-வது அமெரிக்க அதிபர் தேர்தலானது நேற்று மாலை தொடங்கி, இன்று காலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, உடனடியாக தொடங்கிய தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே முன்னிலைப் பெற்று, 538 மாகாணங்களில் 277 இடத்தில் வெற்றிப் பெற்று அமெரிக்காவின் அதிபராக மீண்டும் தேர்வாகி உள்ளார் டொனால்ட் டிரம்ப். இந்த நிலையில், ட்ரம்பின் ஆதரவாளர்கள் இந்த வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர். மேலும், வெற்றி பெற்றதை அறிவித்த பிறகு அவரது ஆதரவாளர்கள் முன்னாள் டிரம்ப் […]
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார். இந்நிகழ்வு பாராளுமன்றத்தின் மத்திய மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்த குளிர்கால கூட்டத்தொடரை வரும் 25-ஆம் தேதி முதல் டிசம்பர் 20-ஆம் தேதி வரை நடத்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்ததாக கிரண் ரிஜிஜு தகவல் தெரிவித்துள்ளார். மேலும், நவம்பர் 26-ஆம் தேதி, அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டதன் 75-வது ஆண்டு விழா சம்விதன் […]
டெல்லி : கனடாவில் உள்ள டொரன்டோ மாகாணத்திற்குட்பட்ட பிராம்ப்டன் எனும் பகுதியில் உள்ள ஹிந்து கோயில் மீது காலிஸ்தான் பயங்கரவாத குழுவினர் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் கோயிலிலிருந்த குழந்தைகள், பெண்கள் மற்றும் பக்தர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். கனடாவில் அமைந்துள்ள தூதரக முகாமிற்கு இந்திய அதிகாரிகளின் வருகையைக் கண்டித்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் பிராம்ப்டனில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து, அங்கிருந்த ஹிந்து கோயிலின் முன்பு முழக்கங்களை எழுப்பி வந்தனர். மேலும், கோயிலிலிருந்த […]
டெல்லி : பிரதமரை மோடி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் “தேர்தல் பிரச்சாரத்தின்போதும் மக்களுக்கு ஏராளமான வாக்குறுதிகளை அளித்துவிட்டு காங்கிரஸ் ஏமாற்றிவிட்டதாக விமர்சனம் செய்து பதிவிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் கூறியதாவது ” உண்மைக்குப் புறம்பான வாக்குறுதிகளை அளிப்பது எளிது ஆனால் அவற்றை முறையாக செயல்படுத்துவது கடினமானது அல்லது சாத்தியமற்றது என்பதை காங்கிரஸ் கட்சி உணர்ந்துள்ளது.பிரச்சாரத்திற்குப் பிறகு பிரச்சாரம் அவர்கள் மக்களுக்கு வாக்குறுதிகளை அளிக்கிறார்கள், அவர்களால் ஒருபோதும் வழங்க முடியாது என்பது நன்றாகவே […]
டெல்லி : டிஜிட்டல் கைது என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றும் மோசடி கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார். மனதின் குரல் என்ற பெயரில் பிரதமர் மோடி மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் உரையாற்றி வருகிறார். அது போல நேற்று நடைபெற மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, “டிஜிட்டல் கைது என்ற மோசடியில் தொலைபேசியில் அழைப்பவர் போலீஸாகவோ, சிபிஐயாகவோ, போதைப் பொருள் தடுப்பு அமைப்பைச் சேர்ந்தவராகவோ, ரிசர்வ் வங்கிக்காரராகவோ […]
டெல்லி : பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 2 நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி ரஷ்யா சென்றார். நேற்று முன் தினம் ரஷ்யாவில் 16ஆவது பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டு, நேற்றிரவு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். அதன்படி, ரஷ்யாவில் இருந்து இன்று அதிகாலை டெல்லிக்கு வந்தடைந்தார் பிரதமர் மோடி. 10 வருடத்திற்கு முன்பு பிரேசிலில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, தற்போது 2024 ரஷ்யாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கடலந்து கொண்டார். […]
இஸ்ரேல் :இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாடுகளுக்கு இடையே கடுமையான போர் நிலவி வரும் நிலையில், இந்த போர் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இரண்டு நாடுகளும் மாறி மாறி ஒருவருக்கொருவர் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதன் காரணமாக இரண்டு நாடுகளிலும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இஸ்ரேல் பிரதமருடன் சந்திப்பு இந்த சூழலில், ஈரான் பிரதமர் மசூத் பெசெஷ்கியனை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துள்ளார். இந்தியா, சீனா, பிரேசில், தென் ஆப்ரிக்கா, உள்ளிட்ட சில […]
கசான் : ரஷ்யா, தென்னாப்பிர்க்கா, சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் மாநாடு 16வது உச்சிமாநாடு இந்த ஆண்டு ரஷ்யாவில் உள்ள கசான் பகுதியில் நடைபெறுகிறது. இன்றும் நாளையும் நடைபெறும் இந்த மாநாட்டில் அந்நாட்டின் முக்கியத் தலைவர்கள் கலந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இன்று காலை பிரதமர் மோடி ரஷ்யா புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் ரஷ்ய அதிபரான விளாதிமிர் புடினுடன் பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளார். […]
கசான் : 16-வது ஆண்டு பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று ரஷ்யாவில் உள்ள கசான் நகரில் தொடங்கி வரும் அக்.-24-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டில் இந்தியா, பிரேசில், ரஷ்யா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் முக்கியத் தலைவர்கள் ஒன்றிணைந்து உலகப் பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கவுள்ளனர். இதில் கலந்துக் கொள்ள 2 நாட்கள் அரசு முறை பயணமாக, இன்று காலை டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி. காலை […]
டெல்லி : 16வது ஆண்டு BRICS உச்சி மாநாடு இன்று ரஷ்யாவின் கசான் நகரில் தொடங்குகிறது. இந்த உச்சி மாநாடு இன்று முதல் அக்டோபர் 24ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து உலகப் பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கவுள்ளனர். இந்நிலையில், 2 நாட்கள் அரசு முறை பயணமாக, பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா புறப்பட்டுச் சென்றார். இப்பொது, ரஷ்யா […]
டெல்லி : கனடாவில் வாழ்ந்து வந்த காலிஸ்தான் பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில், இந்தியாவுக்கு பங்கு உண்டு என கனடா பிரதமர் ட்ரூடோ முன்னதாக குற்றஞ்சாட்டி இருந்தார். இதனால், இந்த விவகாரம் அடுத்தகட்டமாக முற்றியது. இதன் விளைவாக கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை திரும்ப வரவழைத்த இந்தியா, இங்குள்ள கனடா தூதரக அதிகாரிகளை வெளியேற்ற உள்ளது. அதன்படி, 6 கனடா தூதரகள் அனைவரும் வருகிற அக்டோபர் 19-ம் தேதி இரவு 11.59 மணிக்குள் இந்தியாவை […]
மும்பை : பிரபல தொழிலதிபரும், டாடா குழுமத்தின் தலைவருமான ரத்தன் டாடா நேற்று இரவு உடல்நலக் கோளாறால் உயிரிழந்தார். அவரது இழப்பு இந்தியா உட்பட உலகம் முழுவதும் உள்ள மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அவர் வாழ்நாளில் அந்த அளவிற்கு சாதனையையும், மனிதநேயம் மிக்க மனிதராகவும் செயல்பட்டிருக்கிறார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து […]
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு இதயத்தில் இருந்து ரத்தத்தை உடலின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் பகுதியில் வீக்கம் இருந்தது.பின்னர் அறுவை சிகிச்சை இல்லாமல் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு நலமுடன் நேற்று நள்ளிரவு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் பூரண நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும் என பிரதமர் மோடி , தமிழ்நாடு […]
டெல்லி : கடந்த 2014ஆம் ஆண்டு இதே போல காந்தி ஜெயந்தி தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி ‘தூய்மை இந்தியா (Swachh Bharat)’ எனும் திட்டத்தை தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் உள்ள திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்துவதும் , திறந்தவெளி மலம் கழிப்பதை அகற்றி தூய்மை கழிப்பறைகள் அமைக்கப்படுவதும் , நாட்டின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதும் இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். இத்திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளை நிறைவு செய்ததை குறிப்பிடும் வகையில், #10YearsOfSwachhBharat எனும் ஹேஸ்டேக்கை தனது […]
ஜம்மு-காஷ்மீர் : கடந்த மாதம் செப்-18 தேதி 24 தொகுதிகளுக்கு முதற் கட்டமாகவும், அதைத் தொடர்ந்து செப்-26ம் தேதி 26 தொகுதிகளுக்கு 2-வது கட்டமாகவும் ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தலானது நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது 3-வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு 40 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 40 தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடிகளில் மக்கள் வரிசையாக நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். அந்த […]
டெல்லி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இன்று காலை பிரதமர் மோடியை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது தமிழகத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த மனுவை அளித்தார். இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றன. இந்த சந்திப்பு குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர் சந்திப்பு நிகழ்த்தினார். அந்த நிகழ்வில் கூறுகையில், ” பிரதமர் மோடியை சந்திப்பதற்காக நேற்று டெல்லி வந்தேன். […]