இந்தியா கேட் அருகே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிரமாண்ட சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் பராக்ரம் திவாஸ் அன்று (ஜனவரி 23) நேதாஜியின் ஹாலோகிராம் சிலை திறக்கப்பட்ட அதே இடத்தில், பிரதமரால் திறக்கப்படும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சிலை நிறுவப்படும். நேதாஜியின் பிரமாண்ட சிலை 280 மெட்ரிக் டன் எடையுள்ள கிரானைட் கற்களால் செதுக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய நுட்பங்கள் மற்றும் […]
முந்தைய அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனை விட நான் தான் இந்தியாவின் சிறந்த நண்பன். முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேட்டி. அமெரிக்காவின் முன்னாள் அதிபராக பதவி வகித்த டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் அமெரிக்க தனியார் தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை கொடுத்து இருந்தார். அதில் இந்தியாயவுடனான உறவு குறித்தும் பேசியிருந்தார். அப்போது கூறுகையில், இந்தியாவுடனும், பிரதமர் நரேந்திர மோடியுடனும் நல்ல நட்புறவு இருக்கிறது. முந்தைய அமெரிக்க அதிபர் […]
குஜராத்தில் பேசிய நரேந்திர மோடி, இந்தியா உலக பெரிய பொருளாதாரத்தில் 5வது இடத்தில் உள்ளது என தெரிவித்தார். இன்று குஜராத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசிய பாரத பிரதமர் நரேந்திர மோடி, உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா விளங்குகிறது. இந்த முன்னேற்றம் சாதாரணமானது இல்லை. இதனை அப்படியே விட்டுவிட கூடாது. இந்த உற்சாகத்தை தக்கவைத்து கொள்ள வேண்டும். மேலும் முன்னேற வேண்டும். இந்தியா தற்போது இங்கிலாந்தை முந்தியுள்ளது. உலக பொருளாதாரத்தில் அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஜெர்மனிக்கு […]
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள காலடி கிராமத்தில் உள்ள துறவி-தத்துவ ஞானி ஆதி சங்கராச்சாரியார் பிறந்த இடமான ஆதி சங்கரர் ஜென்ம பூமி க்ஷேத்திரத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று வருகை புரிந்தார். “சிறந்த இந்திய துறவியின்” பாரம்பரியத்தை போற்றும் வகையில், பெரியாறு நதிக்கரையில் அமைந்துள்ள ஆதி சங்கரரின் பிறந்த ஸ்தலத்திற்கு பிரதமர் வருகை புரிந்தார். அதன்பின், 4500 கோடி ரூபாய் மதிப்பிலான கொச்சி மெட்ரோ மற்றும் இந்திய ரயில்வேயின் பல்வேறு திட்டங்களை பிரதமர் அடிக்கல் நாட்டி […]
ரிச்மண்டைச் சேர்ந்த இரைப்பைக் குடலியல் நிபுணர் டாக்டர் லோகேஷ் வுயுரு, பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் தொழிலதிபர் கெளதம் அதானி, உலகப் பொருளாதார மன்றத்தின் நிறுவனரும் தலைவருமான பேராசிரியர் கிளாஸ் ஸ்வாப் ஆகியோர் மீது அமெரிக்காவில் ஊழல் மற்றும் பெகாசஸ் ஸ்பைவேரைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளார். கொலம்பியா மாவட்டத்திற்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் இந்த தலைவர்கள் அனைவருக்கும் சம்மன் அனுப்பியுள்ளது. […]
இந்தியாவில் காசநோயை ஒழிப்பதில் தீவிர கவனம் செலுத்தும் வகையில், இக்கொடிய நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் ஊட்டச்சத்து தேவைகளை ஆதரிக்கும் திட்டத்தை நரேந்திர மோடி அரசாங்கம் தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டம் தற்காலிகமாக பிரதான் மந்திரி டிபி முக்த் பாரத் அபியான் (பிஎம்டிபிஎம்பி) என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் கீழ் காசநோயாளிகளின் உணவுத் தேவைகளுக்கு, அரசு சாரா நிறுவனங்கள் (என்ஜிஓக்கள்), தனியார் துறை கார்ப்பரேட்டுகள் அல்லது தனிநபர்களின் நிதி பங்களிப்புகள் ஊக்குவிக்கப்படும். . இந்தத் திட்டம் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து ஆதரவை […]
நெய்வேலி என்.எல்.சி தொழிற்சாலைக்கு இடம் கொடுத்தவர்களுக்கு பட்டதாரி பொறியாளர் பணியில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். நெய்வேலியில் இயங்கி வரும் என்.எல்.சி தொழிற்சாலையில் அன்மையில் புதியதாக பொறியாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் வெளிமாநிலத்தவர்கள். ஒருவர் கூட தமிழ்நாட்டை சேர்ந்தவர் இல்லை. இது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், என்.எல்.சிக்கு […]
இன்று பிரதமர் நரேந்திர மோடி காந்திநகருக்கு அருகிலுள்ள குஜராத் சர்வதேச நிதி டெக்-சிட்டியில் (கிஃப்ட் சிட்டி) சர்வதேச நிதிச் சேவை மையங்கள் (ஐஎஃப்எஸ்சி) ஆணையத்தின் தலைமையகக் கட்டிடத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டிய பின், நாட்டின் முதல் சர்வதேச பொன் பரிமாற்றமான இந்தியா இன்டர்நேஷனல் புல்லியன் எக்ஸ்சேஞ்சை (ஐஐபிஎக்ஸ்) தொடங்கி வைக்கிறார். இந்த பரிவர்த்தனையானது திறமையான விலையைக் கண்டறியவும், பொறுப்பான ஆதாரம் மற்றும் தரத்தை உறுதிப்படுத்தவும் உதவும், தவிர, இந்தியாவில் தங்கத்தை நிதியாக்குவதற்கு உதவுகிறது என்று IFSC ஆணையம் தெரிவித்துள்ளது. […]
சென்னையில் நிகழ்ச்சிகளை முடித்து விட்டு, தற்போது சென்னையை விட்டு புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி. நேற்று 44வது சர்வதேச ஒலிம்பியாட் துவக்க விழா நடைபெற்றது. அதில், கலந்து கொள்ள பாரத பிரதமர் நரேந்திர மோடி நேற்று விமானம் மூலம் சென்னை வந்தார் பிரதமர் மோடி , நேற்று, மாலை செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதன் பின்னர் , இரவு பாஜக நிர்வாகிகள் உடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அதில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட பலர் […]
ஜூலை 22ஆம் தேதி மாலை 5:30 மணிக்கு டில்லியில் உள்ள அசோகா எனும் ஹோட்டலில் தற்போதைய குடியரசு தலைவரான ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி விருந்து அளிக்க உள்ளார். இந்தியாவின் 14வது குடியரசு தலைவரான ராம்நாத் கோவிந்த் அவற்களின் பதவிக்காலம் வரும் (ஜூலை) 24ஆம் தேதி நிறைவடைகிறது. 25ஆம் தேதி புதிய குடியரசு தலைவர் பதவி ஏற்க உள்ளார். இந்த நிலையில், தற்போதைய குடியரசு தலைவரான ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி […]
பாரதியார் பாடலை தூய தமிழில் அருணாச்சல பிரதேச மாநில பெண்கள் இருவர் படுகின்றனர். அதனை குறிப்பிட்டு பிரதமர் மோடி தமிழில் பாராட்டியுள்ளார். தனது விடுதலை வேட்கை கொண்ட பாடல்கள் மூலம் சுதந்திரத்திற்காக ஏங்கி இருந்த இந்திய மக்களிடையே விடுதலை உணர்வை தூண்டியவர் மகாகவி பாரதியார். இவரது ‘ பாருக்குள்ளே நல்ல நாடு’ எனும் தமிழ் பாடலை பிழையில்லாமல், அச்சு பிசிராமல் தூய தமிழில் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த இரு பெண் சகோதரிகள் பாடியுள்ளனர். இதனை டிவிட்டரில் பார்த்த […]
பிரதமர் மோடி, மன்மோகன் சிங், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஹர்பஜன் சிங், கௌதம் கம்பீர் என பலரும் தங்கள் வாக்கினை செலுத்தினர். குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் அவர்களின் பதவிக்காலம் இம்மாதம் (ஜூலை) 24ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், இன்று இந்தியாவின் புதிய குடியரசு தலைவர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியாவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் ( மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள்) பிரதமர், மாநில […]
மத்திய பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்து வேதனை அளிப்பதாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் இந்தோரிலிருந்து புனே நோக்கி சென்ற பேருந்து தார் மாவட்டம் கல்காட் சஞ்சய் என்ற பகுதியில் உள்ள பாலத்திலிருந்து ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 15 பேர் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய பிரதேச அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தகவல் தெரிவித்துள்ளார். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் […]
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குஜராத்திற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும். தேசிய மீட்பு படை மூலம் மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் – பிரதமர் மோடி. தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்த காரணத்தால் குஜராத் மாநிலத்தின் பெரும்பகுதி பாதிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அம்மாநிலத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். நவ்சாரி மற்றும் வல்சாத் ஆகிய மாவட்டங்களில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள நீர் புகுந்துள்ளது. அதனால் இதுவரை 700 […]
புதிய பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள 6.5 மீட்டர் உயரம் கொண்ட தேசிய சின்ன சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பாரத பிரதமர் நரேந்திர மோடி, இன்று புதிய பாராளுமன்ற வளாகத்தில் ஓர் புதிய 6.5 மீட்டர் உயரம் கொண்ட தேசிய சின்னத்தை திறந்து வைத்தார். இந்த சின்னம் முழுவதுமாக வெண்கலத்தால் ஆனது. Watch | PM @narendramodi unveiled the National Emblem cast on the roof of the New Parliament Building […]
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழந்ததை தொடர்ந்து, நாளை ஒருநாள் நாடு முழுவதும் துக்க அனுசரிப்பு அனுசரிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே பிரச்சார கூட்டத்தில் உரையாற்றி கொண்டிருக்கும் போதே 41 வயது மதிக்கதக்க இருந்த ஒரு நபர் ஷின்சோ அபேவை சுட்டிவிட்டார். அதன் பிறகு, உடனடியாக முதலுதவி செய்யப்பட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். ஒரு நாட்டின் முக்கிய அரசியல் தலைவர், முன்னாள் […]
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுடப்பட்டதை அறிந்து டிவிட்டரில் பிரதமர் மோடி வருத்தத்தை தெரிவித்தார். ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே,மேற்கு ஜப்பானில் திறந்த வெளியில் உரையாற்றும் போது, 41 வயது மதிக்க தக்க ஒரு நபரால் திடீரென சுடப்பட்டார். இதில் அவர் மார்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்தம் கொட்டியது தற்போது அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து இணையத்தில் ஷின்சோ அபே சுடப்பட்ட திக் திக் வீடியோ […]
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள் அடுத்த மாதம் தென் கொரியா மற்றும் ஜப்பான் செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த மாதம் டோக்கியோவில் குவைத் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் ஜோ பைடன் கலந்துகொள்ள உள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது. எனவே இவர்கள் இருவரும் இந்த மாநாட்டின் போது சந்திக்க உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஜோ பைடன் மே 20 முதல் […]
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். அப்பொழுது பேசிய அவர், கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு வாட் வரியை குறைத்தது போன்று தமிழகம், தெலுங்கானா,மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் எரிபொருள் மீதான வாட் வரியைக் குறைக்கவில்லை. இதன் காரணமாக தான் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்கள் எரிபொருளுக்கான வரியை […]
கொரோனா வைரஸ் இன்னும் நீங்கவில்லை,மீண்டும் பரவி வருகிறது என்று பிரதமர் மோடி எச்சரித்துள்ளார். கொரோனா தொற்றுநோயின் மூன்றாவது அலைக்கு மத்தியில் மாநிலங்கள் கொரோனா கட்டுப்பாட்டு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில்,கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் மக்கள் தங்கள் பாதுகாப்பைக் குறைக்க வேண்டாம் என்றும்,கொரோனா வைரஸ் இன்னும் நீங்கவில்லை, மீண்டும் பரவி வருகிறது என்று பிரதமர் மோடி எச்சரித்துள்ளார். இது தொடர்பாக,குஜராத்தின் ஜூனாகத் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் காணொலி வாயிலாக பங்கேற்ற பிரதமர் மோடி கூறுகையில்:”கொரோனா வைரஸ் நம்மை […]