நீண்ட வருடம் குஜராத்தின் முதல்வர் பொறுப்பில் நான் இருந்துளேன். அப்போது நான் குஜராத்திற்கு செய்துள்ள சாதனைகளை எண்ணுவது மிக கடினம். – குஜராத்தில் பேசிய பிரதமர் மோடி பெருமிதம். குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாதில் மோடி கல்வி வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், முதலாம் தி்ட்டத்தினை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். அதன் பின்பு அங்கு பேசினார். அப்போது பேசுகையில், ‘ நீண்ட வருடம் குஜராத்தின் முதல்வர் பொறுப்பில் நான் இருந்துளேன். அப்போது நான் குஜராத்திற்கு […]
வரும் அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தியை முன்னிட்டு , மறைந்த முத்துராமலிங்கத்தேவர் அவர்களுக்கு மரியாதை செலுத்த பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. வரும் அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா அவர் பிறந்த ஊரான, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே , பசும்பொன்னில் நடைபெறுகிறது . இதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியர், காவல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். தமிழக பாஜக சார்பில் தேவர் ஜெயந்தியில் பங்கேற்க்க பிரதமர் […]
5 ஜி சேவையானது இந்தியாவின் வளர்ச்சியை காட்டுகிறது. இதன் மூலம் இந்தியாவின் தொழில்நுட்பம் அடுத்தகட்டத்திற்கு செல்லும்.- 5ஜி சேவை தொடங்கி வைத்த பின்னர் பிரதமர் மோடி பெருமிதமாக பேசினார். இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தை, இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார். முதற்கட்டமாக இந்தியாவின் பிரதான முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் தொடங்கப்பட உள்ளது. அடுத்ததாக 13 நகரங்களில் செயல்பாட்டிற்கு வந்து, பின்னர் அடுத்த 2 ஆண்டுகளில் நாடு முழுவதும் […]
இன்று காலை மும்பை காந்தி நகர் ரயில் நிலையத்தில் இருந்து, புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து துவங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் காந்தி நகர் – மும்பை இடையேயான பயணிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த ரயிலின் கட்டமைப்பை பார்த்து ஆய்வு செய்த பிரதமர் மோடி, காந்தி நகரில் இருந்து கலுபூர் ரயில் நிலையத்திற்கு பயணம் செய்தார். பின்னர் பேசிய பிரதமர் மோடி, விமானத்தில் பயணம் செய்பவர்கள் […]
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை டோக்கியோ சென்றடைந்தார். ஜூலை 8 ஆம் தேதி நாரா நகரில் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஷின்சோ அபே சுட்டுக் கொல்லப்பட்டார்.2020 இல் உடல்நலக் காரணங்களால் பதவியில் இருந்து விலகினார் ஷின்சோ அபே ஜப்பானின் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்ற பெருமைக்குரியவர். இந்நிலையில் ஜப்பான் டோக்கியோவில் அபேக்கு அரசு இறுதிச் சடங்கை பிரம்மாண்டமாக நடத்துகிறது, இதில் உலகம் முழுவதிலுமிருந்து வெளிநாட்டு […]
துறைமுக மசோதா 2022இல் குறிப்பிட்டுள்ள அம்சங்கள் மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் வகையில் அமைந்துள்ளது. அந்த அம்சங்களை நீக்க கோரி முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில் புதியதாக கூறப்பட்டுள்ள துறைமுக மசோதா பற்றியும் அதில் உள்ள அம்சங்கள் பற்றியும் கோரிக்கைளை வைத்துள்ளார். அதில், ஸ்டாலின் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ‘ இந்திய துறைமுகங்கள் மசோதா 2022இல் உள்ள அம்சங்கள் மாநில அரசின் உரிமைகளை […]
2400 கோடி செலவில் மேம்படுத்தப்படும் சென்னை விமான நிலைய பணிகள் விரைவில் நிறைவடைந்து வரும் டிசம்பர் இறுதியிலோ அல்லது ஜனவரி மாதத்திலோ பிரதமர் மோடி சென்னை வருகை புரிந்து திறந்து வைப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, மீனம்பாக்கத்தில் அமைந்துள்ள விமானநிலையத்திற்கு அன்றாடம் பயணிகளின் வரத்தும், விமானங்களின் வரத்தும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை சரிப்படுத்த, விமான நிலைய விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக 2,400 கோடி செலவில் விமான நிலையத்தில் முனையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. […]
பிரதமரின் பாதுகாப்பு நிதி (PM Cares)யின் அறங்காவலராக டாடா குழுமத்தின் நிறுவனர் திரு ரத்தன் டாடா நியமிக்கப்பட்டுள்ளார். டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ் மற்றும் மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் கரியா முண்டா ஆகியோர் பி எம் கேர்ஸ் (PM CARES) நிதியின் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடியின் அரசாங்கம் தெரிவித்துள்ளது. முன்னாள் கன்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ராஜீவ் மெஹ்ரிஷி, இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் முன்னாள் தலைவர் […]
இன்று மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் தொடங்குகிறது. இதில் பல முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இன்றைய கூட்டத்தில், பிரதமர் மோடி மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் இடையே பல முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. தீபாவளிக்கு முன்னதாக அரசு ஊழியர்களுக்கு போனஸ் பற்றிய அறிவிப்பு ஏதேனும் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, இந்த […]
நீட் தேர்வு முக்கியம் என்றால் நீட்டிற்கு முன்னாடி பயின்ற மருத்துவர்கள் சரியில்லையா.? ஐயா மோடிக்கு உடம்பு சரி இல்லைனா யாருகிட்ட மருத்துவம் பார்ப்பார்கள்? – சீமான் கருத்து. இன்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது, நீட் தேர்வு, ஆ.ராசாவின் மனு தர்மம் பற்றிய கருத்துகள் குறித்த தனது கருத்துக்களை வெளிப்படையாக கூறினார். மனுதர்மத்தில் சூத்திரர்கள் பற்றி எம்.பி ஆ.ராசா பேசுகையில், நாமெல்லாம் விபசாரி மகன் என்று […]
உங்களுக்கு வலிமையும் ஆரோக்கியமும் இருக்க வேண்டும். ஒரு நாள் விடுமுறை எடுத்து உங்கள் பிறந்தநாளை கொண்டாடுங்கள் – பிரதமர் மோடிக்கு ஷாருக்கான் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று தனது 72வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். இவருக்கு அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாது, பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். திரை பிரபலங்களும் தங்கள் வாழ்த்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரிவித்து வருகின்றனர். பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது வாழ்த்தை […]
பிறந்தநாளை முன்னிட்டு மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற மகளிர் சுயஉதவி குழுக்கள் சார்பாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு , மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற மகளிர் குழு மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பிரதமர் திறன் மேம்பாட்டு பிரிவு சார்பாக, மத்திய பிரதேசத்தில் நலிவடைந்த குறிப்பிட்ட 4 பிரிவினருக்காக திறன் மேம்பாட்டு மையத்தை நேரடியாக துவங்கி வைத்தார். பின்னர் அங்கு நடைபெற்ற மகளிர் […]
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரபல மணல் சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக், ஒடிசாவின் பூரி கடற்கரையில் 1,213 மண் டீ கப்களை கொண்டு பிரதமரின் ஐந்து அடி மணல் சிற்பத்தை உருவாக்கி பிரதமர் மோடிக்கு தனது கலையின் மூலம் பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி டீ விற்பவராக வாழ்க்கையை தொடங்கி தற்போது நாட்டின் பிரதமர் […]
பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என டிவிட்டரில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். பாரத பிரதமர் நரேந்திர மோடி இந்த வருடம் தனது 72வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளுக்கு இந்திய அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி, பலரும் தங்கள் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது வாழ்த்தை டிவிட்டர் மூலம் தெரிவித்து உள்ளார். அதில் , ‘மரியாதைக்குரிய பாரத பிரதமர் […]
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் சென்றார். அங்கு சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாட்டு தலைவர்களை நேரில் சந்தித்து பேசவுள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பான எஸ்.சி.ஓ அமைப்பில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக இருக்கின்றன. இந்த உறுப்பு நாடுகள் பங்கேற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு கடைசியாக 2019இல் நடைபெற்றது. கொரோனா காலகட்டத்தில் இந்த சந்திப்பு ஒரே இடத்தில் நடைபெறவில்லை. தற்போது மேற்கண்ட நாட்டு தலைவர்கள் […]
அம்பேத்கரும்-மோடியும் எனும் நூல் வெளியீட்டு விழா இன்று டெல்லியில் நடைபெற்று முடிந்தது. புத்தகத்திற்கு அணிந்துரை எழுதிய இளையராஜா பங்கேற்கவில்லை. சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் சீர்திருத்த திட்டங்களும், அதனை பிரதமர் மோடி செயல்படுத்திய விதம் குறித்தும் எழுதப்பட்டுள்ள அம்பேத்கரும்-மோடியும் – சீர்திருத்தவாதிகளின் சிந்தனைகளும், செயல்வீரரின் செயல்பாடுகளும்.. எனும் நூல் இன்று வெளியியிடப்பட்டுள்ளது. இந்த நூல் வெளியீட்டு விழாவானது, டெல்லியில், மத்திய ஒலிபரப்புதுறை அமைச்சகத்தால் நடத்தப்பட்டு உள்ளது. இந்த விழாவில், முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு […]
பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு நெல்லையில் மாட்டுவண்டி , குதிரை வண்டி பந்தயம் நடத்த அனுமதி கோரிய வழக்கு, மாவட்ட எஸ்.பி பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இம்மாதம் (செப்டம்பர்) 17ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது 72வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இதற்காக பாஜகவினர் சகல ஏற்பாட்டையும் ஆரம்பித்து உள்ளனர். அந்த வகையில் பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு திருநெல்வேலியில் மாட்டுவண்டி மற்றும் குதிரைவண்டி பந்தயம் நடத்த அனுமதி கோரி […]
மத்திய-மாநில அறிவியல் மாநாட்டை பிரதமர் இன்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, “மத்திய-மாநில அறிவியல் மாநாடு ‘சப்கா பிரயாஸ்’ என்ற நமது மந்திரத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. இன்று, நான்காவது தொழில்துறை புரட்சியை நோக்கி இந்தியா முன்னேறி வருகிறது. இந்த முன்னேற்றத்திற்கு இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பதுறையின் பங்கு மிகவும் முக்கியமானது.” மேலும், உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில், 2015ல் 81வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 46வது இடத்தைப் பிடித்துள்ளது. நமது […]
குஜராத், அகமதாபாத்தில் நடைபெறும் மத்திய மாநில அறிவியல் மாநாட்டை பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் காணொளி மூலம் தொடங்கி வைத்தார். மத்திய மாநில அறிவியல் மாநாடானது, இன்றும் நாளையும் (செப்டம்பர் 10 மற்றும் 11) குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அறிவியல் நகரில் நடைபெற உள்ளது. இன்று காலை இந்த மாநாட்டை பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொளி மூலம் தொடங்கி வைத்தார். பின்னர் அந்த மாநாட்டில் பிரதமர் உயரையாற்ற உள்ளார். இந்த மாநாட்டின் நோக்கமானது வலுவான […]
பிரிட்டனின் நீண்ட காலம் மகாராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் உடல் நலக்குறைவு காரணமாக 96 வயதில் காலமானார். இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி,”2015 மற்றும் 2018 ஆம் ஆண்டு எனது இங்கிலாந்து பயணங்களின் போது அவரது மாண்புமிகு ராணி இரண்டாம் எலிசபெத் உடன் மறக்க முடியாத சந்திப்புகளை மேற்கொண்டேன். அவரது அரவணைப்பையும் கருணையையும் என்னால் மறக்க முடியாது” என்று ட்வீட் செய்துள்ளார். இரண்டாம் எலிசபெத் ஒரு கம்பீரமானவராக நினைவுகூரப்படுவார்,அவர் தனது […]