உலகில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா வளர்ந்து வருகிறது. உலக வளர்ச்சிக்கு இந்தியாவின் எரிபொருள் பாதுகாப்பு என்பது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. – பிரதமர் மோடி உரை. இந்தோனேசியாவிலுள்ள பாலியில் இன்று மற்றும் நாளை நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, மூன்று நாள் பயணமாக இந்தோனேசியா சென்றுள்ளார். ஜி20 உறுப்பினர்களான அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில் , கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, […]
இந்தோனீசியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அமெரிக்க அதிபர் மற்றும் பிரான்ஸ் அதிபரை சந்தித்து கைகுலுக்கினார். இந்தோனேசியாவிலுள்ள பாலியில் இன்று (நவம்பர் 15) மற்றும் நாளை (நவம்பர்16) நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, மூன்று நாள் பயணமாக இந்தோனேசியா சென்றுள்ளார். ஜி20 உறுப்பினர்களான அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில் , கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரிபப்ளிக் ஆஃப் கொரியா, ரஷ்யா, சவுதி அரேபியா, […]
20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, இன்று இந்தோனேசியாவின் பாலிக்கு செல்கிறார். இந்தோனேசியாவிலுள்ள பாலியில் நவ 15-16 இல் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, மூன்று நாள் பயணமாக இந்தோனேசியா செல்கிறார். பிரதமர் மோடி இந்த பயணத்தின் போது, நவம்பர் 15 ஆம் தேதி நடைபெறும் இந்திய சமூக வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய சமூகம் மற்றும் இந்தியா மற்றும் பாலியின் நண்பர்களுடன் உரையாடுகிறார். ஜி20 […]
அனைவரும் தென்னிந்திய மொழியை கற்க வேண்டும். அது தமிழாக இருக்க வேண்டும் என கூறியவர் காந்தியடிகள். – மேடையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு. திண்டுக்கல், காந்திகிராம பல்கலைக்கழகத்தின் 36 வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராம நிறுவனத்தின் பவள விழா தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின், ஆளுநர் ரவி மற்றும் மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் என பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘ காந்தியடிகளுக்கும், தமிழகத்துக்குமான […]
திண்டுக்கல், காந்திகிராம பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராம நிறுவனத்தின் பவள விழா தற்போது நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி , முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் ஒரே மேடையில் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இளையராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை பிரதமர் மோடி வழங்கினார். அதற்கான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
காந்திகிராம பல்கலைக்கழகத்தின் 36 வது பட்டமளிப்பு விழா ஒரே மேடையில் பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் இருக்கின்றனர். மதுரையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் வந்தடைந்த பிரதமர் மோடி திண்டுக்கல், காந்திகிராம பல்கலைக்கழகத்தின் 36 வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராம நிறுவனத்தின் பவள விழாவை ஒட்டி நடைபெறும் விழாவில் பங்கேற்க வந்துள்ளார் . விழா நடைபெறும் பல்கலைக்கழக மேடையில் தற்போது பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் […]
பிரதமர் மோடியின் தமிழக வருகையை ஒட்டி, மதுரை விமான நிலையத்திற்கு உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று முதல் 3 நாட்கள் விமான நிலைய உள் வளாகத்தில் பார்வையாளர்கள் அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் தமிழகத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி தொடக்கவிழாவை தொடங்கி வைக்க பிரதமர் மோடி தமிழகம் வந்திருந்தார். அதன் பிறகு இரண்டாவது முறையாக பிரதமர் மோடி வரும் 11ஆம் தேதி தமிழகம் வர உள்ளார். திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி , காந்தி […]
மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால் மட்டுமே ஒரு மாநிலம் நல்ல முன்னேற்றத்தை அடைய முடியும். என இமாச்சல பிரதேச பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். இமாச்சல பிரதேசத்தில் இருக்கும் 68 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் நவம்பர் 12ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதன் தேர்தல் முடிவுகள் டிசம்பர் 8ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதற்காக பிரதான காட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இமாச்சல பிரதேச மாநிலத்தில் பிரதமர் […]
அடுத்த வருடத்திற்கான ஜி20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்க உள்ளது பெருமை மிகு தருணம் என ஜி20 லோகோவை வெளியிட்ட பின்னர் பிரதமர் மோடி பேசினார். இந்தியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் ஒன்றிணைந்த கூட்டமைப்பு தான் ஜி20 நாடுகள் கூட்டமைப்பு. இந்த அமைப்பில் 1999 முதல் […]
அதிமுக பிரச்சனையில் பாஜக தலையிடவில்லை என ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னேர்செல்வம் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். அப்போது பாஜக, பிரதமர் மோடி சந்திப்பு, டிடிவி.தினகரனுடன் கூட்டணி என பல்வேறு கேள்விகளுக்கு பதில் கூறினார் ஓபிஎஸ். அதிமுக தொண்டர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள். தலைமையில் பிரச்சனை இருப்பது போல பிம்பம் உருவாக்கப்படுகிறது என கூறினார். மேலும், அதிமுக பிரச்சனையில் பாஜக தலையிடவிலை. பாஜக இதற்கு காரணமில்லை என பாஜக பற்றிய கேள்விக்கு […]
பாஜக வாக்காளர்களை நினைவில் வைக்க வேண்டாம். தாமரை சின்னத்தை பார்த்து வாக்களித்தால் போதும். – இமாச்சல பிரதேச பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு. இமாச்சல பிரதேசத்தில் இருக்கும் 68 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் நவம்பர் 12ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதன் தேர்தல் முடிவுகள் டிசம்பர் 8ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதற்காக பிரதான கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று இமாச்சல பிரதேச மாநிலம், மாண்டியில் பிரதமர் மோடி […]
போலி செய்திகள் நாட்டில் புயலை கிளப்பிவிடும். அதன் உண்மை தன்மையை ஆராய்வது கட்டாயம். – பிரதமர் மோடி பேச்சு ஹரியானாவில் மாநில உள்துறை அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று முன் தினம் தொடங்கி, நேற்று இரண்டாவது நாளில் பிரதமர் மோடி காணொளி வாயிலாக டெல்லியில் இருந்துகொண்டு கலந்துகொண்டார். அதில் பல்வேறு விஷயங்ளை பகிர்ந்து கொண்டார். அதில் பேசுகையில், ‘ ஒரு சிறிய போலீ செய்தி நாட்டில் புயலை ஏற்படுத்திவிடும். என குறிப்பிட்டார். மேலும், ஒரு செய்தியை பிறருக்கு […]
சட்டம் ஒழுங்கை பராமரிப்பது மாநில அரசுகளின் பொறுப்பு – உள்துறைஅமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு. ஹரியானா மாநிலத்தில் நேற்று அனைத்து மாநில உள்துறை அமைச்சகம் மாநாடு நடைபெற்றது. இதில் உத்தரபிரதேச முதல்வர் உட்பட பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்துகொண்டுள்ளனர். தமிழகம் சார்பில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டுள்ளார். இதில் முன்னதாக பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘ சட்டம் ஒழுங்கை பேணி பாதுகாப்பது, மத்திய மாநில அரசுகளின் கூட்டு பொறுப்பு . ‘ என […]
நமது நாட்டு கடற்படையினரே, நமது மீனவர்களை சுட்டது வருத்தமளிக்கிறது. இதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற செயல்கள் மீனவர்களிடையே நம்பிக்கையின்மையையும், பாதுகாப்பற்ற உணர்வையும் இது ஏற்படுத்தும். என முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். நேற்று நள்ளிரவில் மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடித்துவந்த மயிலாடுதுறை மீனவர்களை சந்தேகத்தின் பேரில் எச்சரிப்பதற்காக இந்திய கடலோர காவல்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் மயிலாடுதுறை மாவட்ட மீனவர் வீரவேல் என்பவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது. குண்டடிபட்ட […]
ரோஸ்கர் மேளா எனு ம் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் மூலம் பல்வேறு துறைகளில் பணிக்கு சேர்ந்த 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார் பிரதமர் மோடி. பிரதமர் அலுவலகம் இன்று நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நாடு முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தரும் வகையில் ‘ரோஸ்கர் மேளா’ எனு ம் மாபெரும் வேலை வாய்ப்பு முகாமை வருகிற 22ஆம் தேதி (நாளை) சனிக்கிழமை அன்று பிரதமர் மோடி […]
சட்டங்கள் எளிமையான அனைவர்க்கும் புரியும் வண்ணம் பிராந்திய மொழிகளில் எழுதப்பட வேண்டும். நீதி வழங்குவதில் தாமதம் என்பது பெறும் இடையூறாகும். – பிரதமர் மோடி உரை. குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் இந்திய சட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறை செயலாளர்கள் மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாடு 2 நாட்கள் நடைபெறும். இதன் தொடக்க விழாவில் பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்துகொண்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, ‘ டிஜிட்டல் தொழில் நுட்பங்களை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள […]
பசி பட்டினி இருக்கும் இருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 107வது இடத்திற்கு சரிந்துள்ளது குறித்து பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். Global Hunger Index எனும் ஐரோப்பிய நாடுகள் சார்ந்த நிறுவனம் ஒன்று, உலக நாடுகளில் குறிப்பிட்ட 121 நாடுகள் அளவில் பசி பட்டினி இருக்கும் நாடுகளின் வரிசை பட்டியலை வெளியிட்டது. ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தை வளர்ச்சி மந்தநிலை, குழந்தைகளின் வாழ்வு வீணாதல், குழந்தை இறப்பு ஆகியவற்றை கணக்கிட்டு […]
நமது அரசு 20 மற்றும் 21ஆம் நூற்றாண்டு தேவைகளை மக்களுக்கு வழங்கி வருகிறது. எல்லா வீடுகளுக்கும் கியாஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கியுள்ளோம் – என இமாச்சல பிரதேசத்தில் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பெருமிதம். இந்தியாவில் 4வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி நேற்று இமாச்சல பிரதேசத்தில் தொடங்கி வைத்தார். மேலும், ஹிமாச்சல் உனாவில் பூங்கா மற்றும் புதிய ஐஐடி ஆகியவை அமைப்பதற்கான அடிக்கல் நட்டு வைத்தார். அதன் […]
வருகிற அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவுக்கு பிரதமர் மோடி வருகை குறித்து எந்த தகவலும் வரவில்லை என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு இன்று காலை பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பல்வேறு தகவல்களை குறிப்பிட்டார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு செய்தியாளர்களிடம் பதில் கூறினார். அப்போது செய்தியாளர்கள் வருகிற தேவர் ஜெயந்தி விழாவுக்கு பிரதமர் மோடி வருவதாக […]
பிரதமர் நரேந்திர மோடி பத்திரிக்கையாளர்களை நேரடியாக அழைத்து சந்தித்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியுமா.? என கர்நாடகா முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான் சித்தராமையா சவால் விடுத்துள்ளார். காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கடந்த மாதம் 30ஆம் தேதி கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினர். யாத்திரையின் 12வது நாளில் கர்நாடாக வந்தடைந்தார் ராகுல் காந்தி. அவருக்கு போட்டியாக கர்நாடக பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் முன்னாள் முதல்வர் எடியூரப்பா உட்பட பாஜகவினர் பலர் […]