ரஷ்யா அணுஆயுதங்ளை பயன்படுத்துமோ என்ற கவலை குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் கலந்துரையாடினர். – சிஐஏ தலைவர் வில்லியம் பர்ன்ஸ். ரஷ்யா , உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து 10 மாதங்களை கடந்தும் இன்னும் போர் ஓய்ந்தபாடில்லை. மேலும், தங்களால் முடிந்த அனைத்து வழிகளிலும் போராடுவோம் என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்து இருந்தார். இதுகுறித்தும் அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பான – சிஐஏ தலைவர் […]
குஜராத்தின் 18வது முதலமைச்சராக பூபேந்திர ரஜினிகாந்த் படேல் பதவியேற்றார். நடந்து முடிந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 156 தொகுதிகளை கைப்பற்றி இதுவரை இல்லாத அளவுக்கு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது பாரதீய ஜனதா கட்சி. தொடர்ந்து 7வது முறையாக பாஜக குஜராத்தில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், கடந்த ஆட்சியில் முதல்வராக இருந்த பூபேந்திர ரஜினிகாந்த் படேல் தான் இரண்டாவது முறையாக இன்று மீண்டும் முதல்வராக பொறுப்பேற்று உள்ளார். குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் பூபேந்திர படேலுக்கு […]
பிரதமர் நரேந்திர மோடி தனது ட்வீட் மூலம் காயம் அடைந்துள்ளார். ஆனால் மோர்பி பாலம் இடிந்த சம்பவத்தில் 135 பேர் இறந்ததால் அவருக்கு வருத்தமில்லை. – திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சாகேத் கோகலே. மேற்கு வங்க ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கட்சியை சேர்ந்த செய்தி தொடர்பாளர் சாகேத் கோகலே, சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்து பரப்பியதாக அளிக்கப்பட்ட புகாரின் கீழ் கைது 2 முறை கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கை […]
குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தொடர்ந்து 7 வது முறையாக வெற்றிபெற்றதற்கு பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் டிவீட் செய்துள்ளார். குஜராத் சட்டமன்ற தேர்தல் அண்மையில் நடைபெற்று முடிந்தது. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக தொகுதிகளில் வென்று 7வது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த தேர்தல் வெற்றிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் […]
தேர்தல் முடிவுகள் வருவதை ஒட்டி பாஜக மூத்த நிர்வாகிகளுடன் டெல்லில் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். குஜராத் தேர்தல் சட்டசபை முடிவுகள் வெளியாகி பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். குஜராத்தில் தொடர்ந்து 7வது முறையாக ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் பாஜகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்து வருகிறது. இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ், பாஜக இடையே கடும் இலுபறி இருந்து வருகிறது. இதனால் இமாச்சல பிரதேசத்தில் யார் ஆட்சியை கைப்பற்றுவார் என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்து […]
டெல்லியை சிறப்பாக மாற்ற பிரதமர் நரேந்திர மோடியின் ஆசீர்வாதங்களைக் கேட்டுக் கொள்கிறேன். – அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லி நகராட்சியில் மொத்தமுள்ள 250 வார்டுகளுக்கான வாக்குப்பதிவு கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெற்று இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், டெல்லி மாநகராட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக இருந்த பாஜகவின் உள்ளாட்சி ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. டெல்லி மாநகராட்சியில் மொத்தமுள்ள 250 வார்டுகளுகளில் 134 இடங்களில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்றது. பாஜக […]
மக்களவை கூட்டதொடர் 12 மணி வரையில் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார். இன்று (டிசம்பர் 7) முதல் இம்மாதம் (டிசம்பர்) 29ஆம் தேதி வரையில் நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்த குளிர்கால கூட்டத்தொடரில் 20கும் மேற்பட்ட மசோதாக்களை நிறைவேற்றப்பட உள்ளன. அதே போல , விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள், விவாதங்களை முன்னெடுக்கவும் தயாராக உள்ளன. இதனால், இந்த கூட்டத்தொடர் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் […]
குளிர்கால கூட்டத்தொடரில் விவாதம் மிக ஆரோக்கியமாக இருக்க வேண்டும். – பிரதமர் மோடி. இன்று முதல் இம்மாதம் 29ஆம் தேதி வரையில் நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்த குளிர்கால கூட்டத்தொடரில் 16 மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன. அதே போல , விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள், விவாதங்களை முன்னெடுக்கவும் தயாராக உள்ளன. இதனால், இந்த கூட்டத்தொடர் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி பத்திரிகையாளர்களிடம் […]
அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்கிற முறையில் இபிஎஸிற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஓபிஎஸிற்கு அழைப்பில்லை. – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம். இந்தியா தலைமையில் இந்த வருடம் நடைபெறும் ஜி20 மாநாடு பற்றி கலந்தாலோசனை செய்வதற்கு இந்தியா முழுவதும் உள்ள பிரதான கட்சிகளுக்கு அழைப்பு விளக்கப்பட்டது. இந்த அனைத்துக்கட்சி கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் திமுகவுக்கு அழைப்பு வந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ள […]
குஜராத் மக்களால் இன்று ஜனநாயக திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. – குஜராத் தேர்தலில் வாக்களித்த பின்னர் பிரதமர் மோடி பேட்டி. குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 1-ஆம் தேதி நடைபெற்றது. குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில், இன்று 89 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றிருந்தது. இதனைத்தொடர்ந்து, குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 14 மாவட்டங்களில் 93 […]
ஜி20 மாநாடு குறித்து விவாதிக்க இன்று நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க தமிழகத்தில் திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி புறப்பட்டார். அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா உட்பட 20 நாடுகள் கொண்ட கூட்டமைப்பு தான் ஜி20 நாடுகள் கூட்டமைப்பு. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு நாடு தலைமை ஏற்று அந்த வருட ஜி20 மாநாட்டை நடத்தும். அந்த வகையில், இந்த வருட […]
குஜராத் இரண்டாம் கட்ட சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது. குஜராத் சட்டமன்ற தேர்தல் 182 தொகுதிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதற்கட்ட தேர்தல் 89 தொகுதிகளுக்கு கடந்த 1ஆம் தேதி நிறைவடைந்துள்ளது. இதனை தொடர்ந்து நாளை மறுநாள் வரும் டிசம்பர் 5ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து தேர்தல் விதிப்படி இன்று மாலையுடன் மீதம் உள்ள 93 தொகுதிகளுக்கும் பிரச்சாரம் முடிகிறது. இந்த முறை வழக்கத்துக்கு […]
மணிப்பூரில் நடைபெறும் சங்காய் திருவிழாவில் பிரதமர் மோடி காணொளி வாயிலாக கலந்துகொண்டு மாநிலத்தின் பெருமை குறித்து உரையாற்றினார். மணிப்பூரில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் கடைசி 10 நாளில் சங்காய் திருவிழா நடைபெறும். இந்த விழாவானது. தாமின் மான் எனும் மான் வகையின் நினைவாக இந்த திருவிழா நடைபெறுகிறது. இதில் மணிப்பூரின் பழம்பெருமையை குறிப்பிடும் வகையில் ஆண்டுதோறும் நடைபெபெற்று வருகிறது. இந்தாண்டு நடைபெறும் மணிப்பூர் சங்காய் விழாவில் பிரதமர் மோடி காணொளி வாயிலாக பங்கேற்று பல்வேறு தகவல்களை பகிர்ந்து […]
ஆளுநர் ரவி செயல்படுகிறார். அவர் பாஜகவின் கைப்பாகையாக செயல்படுகிறார். அவர் சொல்வதெல்லாம் பொய். மோடி தமிழகத்தை ஏமாற்ற நினைக்கிறார். – வைகோ குற்றசாட்டு. விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் மறைந்த பிரபாகரன் அவர்களின் 68வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ படத்திற்க்கு மரியாதை செலுத்திவிட்டு மதிமுக தலைவர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து தமிழக ஆளுநர், பாஜக, பிரதமர் மோடி குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், அரசியல் சட்டத்திற்கு விரோதமாக ஆளுநர் ரவி செயல்படுகிறார். […]
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இந்த மோசமான சூழ்நிலையில் இந்தோனேசியாவுக்கு இந்தியா என்றும் துணை நிற்கும். – பிரதமர் மோடி ஆறுதல். இந்தோனேசியா நாட்டில் ஜாவா தீவில் நேற்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தில் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் 13,000 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது . இதற்கு பல நாட்டு தலைவர்களும் தங்கள் வருத்தத்தை தெரிவித்து வரும் நிலையில், நமது நாட்டு பிரதமர் […]
2047ம் ஆண்டு இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக இருக்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின் கனவு. என சென்னையில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசினார். இன்று பிரதமர் மோடி , மத்திய வேலைவாய்ப்பு மூலம் பணியில் சேர்ந்த 71,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார். இதில், சென்னை ஆவடியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டு பணி ஆணைகளை வழங்கினார். பணி நியமன ஆணைகளை வழங்கி பின்னர் அவர் […]
பீகாரில் உள்ள வைஷாலி மாவட்டத்தின் மெஹ்னாரில் சாலையோர மக்கள் கூட்டத்தில் டிரக் மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். சுல்தான்பூருக்கு அருகில் உள்ள மாநில மகானார்-ஹாஜிபூர் நெடுஞ்சாலையில் புவையன் பாபாவின் பூஜை ஊர்வலத்தைக் காண மக்கள் கூடியிருந்தனர். இந்த கூட்டத்தின் மீது வேகமாக வந்த லாரி டிரக் மோதியதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் 3 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர், மற்றும் பலர் இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர். […]
பிரதமர் பதவி என்பது நிரந்தரம் இல்லை. அந்த பதவியில் இருந்து ஒருநாள் மோடி விலக நேரிடும் என்பதை பிரதமர் மோடி புரிந்து கொள்ள வேண்டும். – மேகாலயா முன்னாள் ஆளுநர். பிரதமர் பதவி என்பது நிரந்தரமில்லை. அதில் இருந்து மோடி விலக நேரிடும் என மேகாலயா முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு பல்கலைக்கழகத்தின் நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் கலந்து கொண்டார். அதில் பேசிய இவர் […]
காசி தமிழ்ச்சங்கமம் தனித்துவம் சிறப்பு வாய்ந்தது. காசி நகரம் பழமை வாய்ந்து. சிறப்பு வாய்ந்தது. அது போல, தமிழகமும் பழமை வாய்ந்தது, சிறப்பு வாய்ந்தது. காசி மக்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றி. – காசி தமிழ்ச்சங்கத்தில் பிரதமர் மோடி புகழாரம். வாரணாசியில் உள்ள பனராஸ் பல்கலைக்கழகத்தில், காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வேட்டி சட்டை அணிந்து கலந்து கொண்டுள்ளார். மேலும், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி […]
ஜி20 மாநாட்டின் தலைமை பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தோனேசியாவிலுள்ள பாலியில் நேற்று (நவம்பர் 15) மற்றும் இன்று (நவம்பர்16) நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, மூன்று நாள் பயணமாக இந்தோனேசியா சென்றுள்ளார். ஜி20 உறுப்பினர்களான அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில் , கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரிபப்ளிக் ஆஃப் கொரியா, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய […]