சென்னை : மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்திட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பிரதமர் மோடிக்கு இன்று (நவ.-28) கடிதம் எழுதியுள்ளார். மேலும், அரிட்டாப்பட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்பட்டால் அங்குள்ள பல்லுயிர் வாழிடங்களும், புராதனப் பெருமை மிக்க சின்னங்களும் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விடும் என்பதை கருத்தில் கொண்டு அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் […]
மும்பை : நேற்று (நவம்பர் 27) மும்பை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன் கால் வந்துள்ளது. அதில், பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து ஒரு பெண் பேசியதாக PTI செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்தததாகவும் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து, வழக்கை விசாரணை செய்த மும்பை போலீசார், அந்த போன் கால் மும்பை புறநகருக்கு வெளியில் இருந்து வந்ததாக கூறி, ஒரு பெண்ணை கைது […]
சென்னை : பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தற்போதைய தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது என்றும், அதற்கு மாற்றாக சமூகநீதி அடிப்படையில், தமிழ்நாட்டிலுள்ள கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் தமிழ்நாட்டிற்கு என விரிவான திட்டம் ஒன்றினை உருவாக்கிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சிக்கு கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய அந்த கடிதத்தில், “ஒன்றிய அரசின் விஸ்வகர்மா திட்டம், சாதி அடிப்படையிலான தொழில் முறையை வலுப்படுத்தும் என்பதைக் கருத்தில் […]
டெல்லி : 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் இயற்றிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அரசு ஏற்றுக்கொண்டது. அதன் பிறகு 1950 ஜனவரி 26இல் இந்திய அரசியலமைப்பு சட்டம் அதிகாரபூர்வமாக அமல்படுத்தப்பட்டது. அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நவம்பர் 26ஆம் தேதியானது ஆண்டுதோறும் அரசியல் சாசன தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்டுகிறது. இன்று 75வது அரசியல் சாசன தினம் கொண்டாடப்படுவதால், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அலுவல் பணிகள் இன்று ஒருநாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இன்று பழைய நாடாளுமன்ற வளாகத்தில் […]
டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இரங்கல் கூட்டம் நடைபெற்றதைத் தொடர்ந்து, 12 மணிக்கு அவை ஒத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 12 மணிக்கு மீண்டும் அவை கூடிய போது அதானி விவகாரம் குறித்துப் பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர். ஆனால், அவைத் தலைவர் ஓம் பிர்லா அது போன்ற விவாதங்களுக்கு அனுமதியளிக்கவில்லை. இதனால், மக்களவைக் கூட்டத் தொடர், நாள் […]
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் அதானி விவகாரம், வக்பு வாரிய சட்டமசோதா , மணிப்பூர் விவகாரம், உத்திர பிரதேச மசூதி விவகாரம் உள்ளிட்டவை பேசு பொருளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தொடரில், மத்திய அரசு, வக்பு வாரிய திருத்த சட்டம், ரயில்வே துறை திருத்த சட்டம், வங்கி புதிய சட்டதிட்டங்கள் […]
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், மகாராஷ்டிராவில் 235 இடங்களை கைப்பற்றி மஹாயுதி கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது, அதில் பாஜக மட்டும் 132 இடங்களை கைப்பற்றி மாநிலத்தில் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. திருமாவளவன் குற்றச்சாட்டு தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற்றுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில், இந்த தேர்தலில் பாஜக கூட்டணி முறைகேடான விதத்தில்தான் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது’ எனவும், இதற்கு […]
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி யும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணியும் முன்னிலை வகித்து வருகின்றன. மகாராஸ்டிரவாரவில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கு இடையே காலை போட்டி நடந்து வந்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய வெளிட்டு இருக்கும் தகவலின் படி, மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் […]
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் அனைத்து திமுக எம்பிக்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்றும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் தற்போது தொடங்கி இருக்கிறது. இந்த போட்டியில் ஆல் ரவுண்டர் நிதிஷ் ரெட்டி சர்வதேச டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி இருக்கிறார். […]
சென்னை : தமிழகத்தில், தென் மாவட்டங்களில் கனமழையின் காரணத்தால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் விடுமுறை அறிவித்துள்ளனர். மேலும், திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகப்பட்டினம், தென்காசி, கன்னியாகுமாரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கான தேர்தல் வாக்குப்பதிவும், ஜார்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் 7 மணிக்கு தொடங்கி, விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
ரியோ டி ஜெனிரோ : பிரேசிலில் 19-வது ஜி20 உச்சி மாநாடானது நடைபெற்று வருகிறது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடி உட்பட பல நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டு விவாதம் நடத்தி வருகின்றனர். இதில், ‘சமூக உள்ளடக்கம், பசி மற்றும் வறுமைக்கு எதிரான போராட்டம்’ என்பது பற்றி பிரதமர் மோடி பேசி இருந்தார். அதனைத் தொடர்ந்து, இந்த மாநாட்டுக்கு இடையே பல்வேறு நாடுகளின் தலைவர்களை மோடி சந்திக்க திட்டமிட்டிருந்தார். அந்த வகையில் இத்தாலி […]
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தீவிரம் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று தென்மாவட்டங்கள் உட்பட 10 மாவட்டங்களில் உள்ள ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிரேசில், ரியோவில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில், நேற்று உரையாற்றிய மோடி, ‘பல்வேறு நாடுகளிடையே நீண்ட காலமாக நீடிக்கும் போர்கள் மற்றும் போர் பதற்றத்தால் தெற்கு நாடுகள் மிகக் […]
ரியோ டி ஜெனிரோ : கடந்த 16-ம் தேதி 5 நாட்களாக அரசு முறை பயணமாக பிரதமர் மோடி டெல்லியிலிருந்து புறப்பட்டார். முதலில் நைஜீரியாவின் தலைநகர் அபுஜா சென்ற அவர் அதனைத் தொடர்ந்து, ஜி20 உச்சி மாநாட்டிற்கு பங்கேற்பதற்காக பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகருக்கு சென்றார். அங்கு பிரேசிலுக்கான இந்திய தூதர் சுரேஷ் ரெட்டி மற்றும் இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பிறகு, நேற்று உச்சி மாநாடு தொடங்கியது. இதில், […]
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது. இன்று மற்றும் நாளை என 2 நாட்கள் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டிற்கு கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று கயானாவில் இருந்து ரியோ டி ஜெனிரோவுக்கு சென்றடைந்துள்ளார். மாநாட்டில் பங்கேற்கபதற்கு ரியோவில் தரையிறங்கய பிரதமர் மோடிக்கு பிரேசில் அரசாங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறது. […]
சென்னை : ஆம் ஆத்மி கட்சியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த கைலாஷ் கேலோட். நேற்று அமைச்சர் பதவியில் இருந்து விலகி, ஒரே நாளில் பாஜகவில் இணைந்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியல் வட்டாரத்தில், அதிமுக தவெகவுடன் கூட்டணி அமைக்கும் என பேசப்பட்டு வந்த நிலையில், ‘திமுகவுடன் கூட்டணி இல்லை எனவும் அதிமுகவுடன் கூட்டணி குறித்த இந்தச் செய்தி, முற்றிலும் தவறானது எனவும்’, அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் உயர் சிகிச்சை மையத்தில் நேற்று நள்ளிரவில் தீடிரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் 10 குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், அங்கு 54 குழந்தைகள் இருந்த நிலையில், 37 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். 7 குழந்தைகளுக்கு தீக்காயம் ஏற்பட்டதால் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக […]
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 16) முதல் வரும் நவம்பர் 21 வரையில் 6 நாள் பயணமாக நைஜீரியா, பிரேசில், கயானா நாட்டிற்கு புறப்பட்டார். அதற்கான தனி விமானத்தில் பிரதமர் மோடி புறப்படும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதற்கு முன்னர் தனது எக்ஸ் சமூக வலைதள பதிவில் பிரதமர் மோடி குறிப்பிடுகையில், “அடுத்த சில நாட்கள், நான் நைஜீரியா, பிரேசில் மற்றும் கயானா நாடுகளில் இருப்பேன். பல்வேறு நாடுகளுடன் இந்தியாவின் உறவை மேம்படுத்த […]
டெல்லி : உடல் நலக்குறைவால் நடிகர் டெல்லி கணேஷ் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ்த்திரையுலகில் ஒரு பேரிடியாக அமைந்திருக்கிறது. அவரது மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரையில் பலரும் நேரிலும், சமூக தளத்திலும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின், தவெக கட்சித் தலைவர் விஜய், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இரங்கல் தெரிவித்தனர். அந்த வரிசையில் […]
மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிக்கும் வரும் நவம்பர் 20ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜக தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கூட்டணியும், காங்கிரஸ் தலைமையில் சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கூட்டணியும் களம் காண்கின்றனர். இந்த தேர்தலுக்காக பாஜக கூட்டணிக்கு ஆதரவாக பேசிய தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வரும் பிரதமர் மோடி, இன்று அகோலா […]
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 2,153 போலீசாருக்கு பணியிட மாறுதல் வழங்கி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிடுள்ளார். முதல் நிலை காவலர்கள் முதல் உதவி ஆய்வாளர்கள் வரை பணியிட மாறுதல் கோரி மனு அளித்தனர். அந்த மனுவின் அடிப்படையில் 2,153 காவலர்களை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ராயப்பேட்டையில் 5 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருளுடன் சீரியல் நடிகை எஸ்தர் என்பவரை போலீசார் கைது செய்தனர். கைதான சின்னத்திரை நடிகை எஸ்தர், திரைத்துறையினருக்கு போதைப் பொருள் சப்ளை செய்தாரா என […]