வியன்னா: ஆஸ்திரியா நாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அங்குள்ள இசைகலைஞர்கள் வந்தே மாதரம் இசைத்து வரவேற்றனர். பிரதமர் மோடி, ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா நாடுகளுக்கு 3 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ளார். முன்னதாக ரஷ்யாவில் 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் இருந்து ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவிற்கு சென்றுள்ளார். 1983ஆம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் இந்திராகாந்தி ஆஸ்திரியா நாட்டிற்கு சென்ற பிறகு 41 ஆண்டுகள் கழித்து இந்திய பிரதமர் ஒருவர் தற்போது தான் ஆஸ்திரியா […]