திருச்சி ஸ்ரீரங்க ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனத்தை முடித்துவிட்டு, ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி இன்று பிற்பகல் ராமேஸ்வரம் சென்றடைந்தார். பின்னர் சாலை மார்க்கமாக பயணித்து, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு வழிநெடுகிலும் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதன்பின் ராமநாத சுவாமி கோயிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் பிரதமர் மோடி புனித நீராடினார். அப்போது, கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதை செய்து பிரதமருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனிடையே, பலத்த […]
இன்று காலை திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தரிசனத்தை முடித்துவிட்டு, ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்ட பிரதமர் மோடி ராமேஸ்வரம் சென்றடைந்தார். ஹெலிகாப்டர் மூலம் பேக்கரும்பில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் இறங்கு தளத்திற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் ராமேஸ்வரம் சென்றார். பிரதமர் மோடிக்கு வழிநெடுங்கிலும் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடி வருகையையொட்டி ராமேஸ்வரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு ஆயிரக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். எனவே, சற்று நேரத்தில் ராமநாதசுவாமி கோயிலில் […]
இன்று காலை திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோயிலுக்கு பிரதமர் மோடி வருகை தந்தார். அப்போது, ரங்கா ரங்கா கோபுரம் முன்பு மேள தாளங்கள் முழங்க பிரதமர் நரேந்திர மோடிக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் தங்க குடத்தில் பூரண கும்ப மரியாதை அளித்து, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்பின், கோயிலுக்குள் சென்ற பிரதமர் மோடி, உற்சவர் ரங்கநாதரை வழிபட்டார். அதன் பின்னர் கருடாழ்வார், மூலவர், தாயார், பெரிய பெருமாள், சக்கரத்தாழ்வார், பட்டாபிராமர், கோதண்டராமர், ராமானுஜர் உள்ளிட்ட முக்கிய […]
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 40 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடித்த புகாரில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடிக்கடி சிறைபிடித்து செல்கிறார்கள். சுமார் 100க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை சிறைகளில் உள்ளனர். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரம் வருவதை ஒட்டி இலங்கை சிறைகளில் உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் 40 […]
ஸ்ரீரங்கத்தில் சுவாமி தரிசனம் செய்வதற்காக இன்று காலை தனி விமானம் மூலம் பிரதமர் மோடி திருச்சி வந்தடைந்தார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பஞ்சக்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக ஹெலிபேட் தளத்திற்கு சென்று, பின்னர் சாலை மார்க்கமாக பயணம் செய்த பிரதமர் மோடி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்றடைந்தார். பிரதமர் மோடிக்கு, வழிநெடுகிலும் மலர்களை தூவியும், ஜெய் ஸ்ரீ ராம் போன்ற முழக்கங்களை எழுப்பியும் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். காரின் கதவை திறந்து நின்றபடி சென்ற […]
இன்று இரண்டாவது நாள் பயணமாக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி, ஸ்ரீரங்கத்தில் சுவாமி தரிசனம் செய்வதற்காக திருச்சி வந்தடைந்தார். பிரதமர் வருகையால் திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்ட பிரதமர், ஸ்ரீரங்கம் யாத்ரிநிவாஸ் எதிரே பஞ்சக்கரை பகுதியில் தற்காலிக ஹெலிபேட் தளத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து சாலை மார்கமாக ரங்கநாதரை தரிசிக்க ஸ்ரீரங்கம் சென்ற பிரதமர் மோடிக்கு, வழிநெடுகிலும் மலர்களை […]
மூன்று நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, நேற்று மாலை சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் மற்றும் திமுக அமைச்சர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதன்பின், நேற்று இரவு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பிரதமர் தங்கினார். இந்த நிலையில், பயணத்தின் 2வது நாளான இன்று பிரதமர் மோடி திருச்சி செல்கிறார். இதற்காக […]
உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலுக்கு கும்பாபிஷேக விழா வரும் ஜனவரி 22ஆம் தேதி, நாளை மறுநாள் திங்கள் கிழமை நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க உள்ளார். கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ள உள்ளதால் 11 நாட்கள் விரதத்தையும் பிரதமர் மோடி கடைபிடித்து சிறப்பு பூஜைகளையும் செய்து வருகிறார். இந்தியாவில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு பிரதமர் மோடி பயணித்து வருகிறார். ஏற்கனவே கேரளாவில் குருவாயூர் கோவிலுக்கு சென்ற பிரதமர் […]