சென்னையில் உள்ள கொரட்டூரை சார்ந்த தம்பதி விசுவநாதன்- மீனா அவர்கள் கருத்து வேறுபாடு கடந்த மூன்று ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மீனா தங்கியிருந்த வீட்டிற்கு சென்ற விசுவநாதன் தன்னுடன் வாழும் படி கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது அப்போது விசுவநாதன் மறைத்து வைத்திருந்த பிளேடால் மீனாவை சரமாரியாக கிழித்து விட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். இதில் மீனாவிற்கு தலை , கை , முகம் மற்றும் கழுத்து என பல இடங்களில் வெட்டப்பட்டது. […]