அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இதுவரை கொரோனா வைரஸ் காரணமாக 5,874,146 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் 180,604 -பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மீட்கப்பட்ட கொரோனா நோயாளிகளிடம் இருந்து பெறப்பட்ட இரத்த பிளாஸ்மா சிகிச்சைக்கு அவசர ஒப்புதல் அளிப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிளாஸ்மாவில் சக்திவாய்ந்த ஆன்டிபாடிகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கொரோனாவை விரைவாக எதிர்த்துப் போராடி, கொரோனா பாதிக்கப்படுவதிலிருந்து மக்களை பாதுகாக்க உதவும் என கூறப்படுகிறது. பிளாஸ்மா சிகிச்சை ஏற்கனவே அமெரிக்காவிலும், […]