தமிழகத்தில் முதல் முறையாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி துவக்கம். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகளவில் பரவி வருகிறத. பிளாஸ்மா சிகிச்சை நோயாளிகள் விரைவில் குணமடைய உதவுதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் 2 கோடி ரூபாய் மதிப்பில் சென்னையில் அமைக்கப்பட்ட பிளாஸ்மா வங்கியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். இந்த பிளாஸ்மா வங்கி இந்தியாவிலேயே டெல்லிக்கு அடுத்து இரண்டாவதாக தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது. தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை வெற்றி அடைந்திருக்கிறது. […]
தமிழகத்தில் கொரோனா வைரஸூக்கு பிளாஸ்மா தெரபி மூலம் சிகிச்சை அளிக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரோனா நோய் தொற்றிலிருந்து குணமடைந்தவரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அதில் உள்ள பிளாஸ்மா தனியே பிரித்தெடுக்கப்பட்டு, அதனை கொண்டு மற்ற கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பதே பிளாஸ்மா சிகிச்சையாகும்.பிளாஸ்மா பிரித்தெடுக்கப்பட்ட பின்பு, மீண்டும் ரத்தமானது, குணமடைந்து பிளாஸ்மா தானம் செய்தவர்களின் உடம்பில் செலுத்தப்பட்டுவிடும்.இந்த சிகிச்சை முறைக்காக நாட்டிலேயே முதன் முறையாக பிளாஸ்மா வங்கி தலைநகர் டெல்லியில் தொடங்கப்பட்டது. […]