அங்கோலாவில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் தூய இளஞ்சிவப்பு வைரம். அங்கோலாவின் வைரங்கள் நிறைந்த வடகிழக்கில் உள்ள லுலோ சுரங்கத்தில் தூய இளஞ்சிவப்பு வைரம் கண்டுபிடிக்கபட்டுள்ளது. இந்த 170 காரட் இளஞ்சிவப்பு வைரமானது ‘தி லுலோ ரோஸ்’ என்று கூறப்படுகிறது. மேலும் இது கடந்த 300 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட வைரங்களை விட அறிய மற்றும் மிகப்பெரிய வைரமாக கூறப்படுகிறது. இந்த இளஞ்சிவப்பு வைரமானது ஒரு வகை இலா வைரமாகும், இது இயற்கை கற்களின் அரிதான மற்றும் தூய்மையான வடிவங்களில் ஒன்றாகும்.