ஜம்மு-காஷ்மீர் : பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து சாலையில் இருந்து தவறி, பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தனர். ஜம்மு மாவட்டத்தில் பக்தர்களை ஏற்றிச் சென்ற சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று நிலை தடுமாறி ஒரு 150 பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் குறைந்தது 15 பேர் பலியாகினர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்த விபத்து ஜம்மு-பூஞ்ச் நெடுஞ்சாலை டாங்லி மோர் அருகே சோகி சோராவில் நடந்ததுள்ளது. பேருந்து 150 அடிக்கு கீழே பள்ளத்தாக்கில் உருண்டதாக சொல்லப்படுகிறது. தற்போது, […]
தமிழகத்தை சார்ந்த யாத்ரீகள் மானியம் பெற விண்ணப்பிக்குமாறு தமிழக அரசு அறிவித்துள்ளது. 2021-2022 ஆம் நிதியாண்டில் சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்தில் உள்ள முக்திநாத் ஆகிய திருத்தலங்களுக்கு புனித யாத்திரை மேற்கொண்டு யாத்திரையை முழுமையாக நிறைவு செய்த, தமிழ்நாட்டை சேர்ந்த யாத்ரீகள் மானியம் பெற விண்ணப்பிக்குமாறு தமிழக அரசு அறிவிப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது: “2021-2022 ஆம் நிதியாண்டில் சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்தில் உள்ள […]
பம்பை ஆற்றில் வெள்ளம் குறைந்துள்ளதால், சபரிமலை செல்ல பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு கார்த்திகை, மார்கழி மாதங்களில் மகரவிளக்கு மற்றும் மண்டல பூஜைகளில் கலந்து கொள்வதற்காக கேரளா, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மாலை அணிந்து விரதம் கடைபிடிப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பத்தனம்திட்டா மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால், கல்கி அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. […]