அரசுப் பணிக்கான அடிப்படை பயிற்சி பெறுவதில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், பார்வை?, செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி அரசுப்பணியாளர்கள் அடிப்படை பயிற்சி பெற வேண்டாம். பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் பார்வை, செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி பயிற்சி பெற வேண்டாம் என்றும் அதே சமயம் ஊன்றுகோல் உதவியுடன் நடப்போர், சக்கர நாற்காலி உதவியுடன் நடப்போர் பயிற்சி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி, 4, 1809, லூயி பிரெய்லி பிறந்த தினம்: பார்வையற்றோருக்கு கல்விக் கண் திறந்த லூயி பிரெய்லி பிறந்த தினம் இன்று. 1809 ஆம் ஆண்டு பிரான்சில் பிறந்த இவர், சிறு வயதில் ஏற்பட்ட விபத்து காரணமாக தன் கண்பார்வையை இழந்தார். பார்வையற்றவர்கள் வாசிப்பதற்காக ஒரு முறையை உருவாக்க வேண்டுமென்ற தீவிர சிந்தனை பிரெய்லிக்கு ஏற்பட்டது. இந்நிலையில் ராணுவத்தில் பயன்படுத்தப்படும் நைட் ரைட்டிங் என்னும் முறை பிரெய்லிக்கு உதவிகரமாக அமைந்தது. இம்முறையைப் பயன்படுத்தி 1829 ஆம் ஆண்டு […]