இந்தியாவில் யுபிஐ பயன்பாட்டில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு, புதிதாக சில விதிகள் சேர்க்கப்பட்டுள்ளது. மொபைல் மூலம் பணப் பரிமாற்றம் செய்ய ஏதுவாக பயன்படுத்தப்படும் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI), இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் கட்டண முறையாக மாறியுள்ளது. அனைவரது கையிலும் மொபைல் போன்கள் உள்ளது. இதனால், ஆன்லைன் பேமெண்ட் மூலம் தங்களுக்கு தேவையான அனைத்து வேலைகளையும் எளிதாக முடிந்து விடுகிறது. சாதராண பெட்டி கடைகள் முதல் சூப்பர் மார்க்கெட் வரை ஆன்லைன் பணப் பரிவர்த்தனை அனுமதிக்கப்படுகிறது. […]
நாட்டின் சில்லறை பரிவர்த்தனைகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகள் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் மூலம் செயல்படுகிறது.மேலும்,நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) தரவுகளின்படி, மார்ச் மாதத்தில் மட்டும்,மொத்த UPI பரிவர்த்தனைகள் 540 கோடிக்கு மேல் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனிடையே,பிரதமர் மோடி நேற்று தனது மாதாந்திர மன் கி பாத் வானொலி ஒலிபரப்பின் போது,ஒவ்வொரு நாளும் சுமார் ரூ.20,000 கோடி ஆன்லைன் பரிவர்த்தனைகள் செய்யப்படுவதாகக் கூறினார். இந்நிலையில்,யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) சர்வர்கள் கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் […]
தொழில்நுட்ப வசதியுடன் Google pay, Phonepe மூலம் பணப்பரிமாற்றம் செய்யப்படுவதை தடுக்க குழு அமைத்துள்ள தேர்தல் ஆணையம். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை அடுத்து, தமிழகம் முழுவதும் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. தேர்தல் நெருங்குவதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. மேலும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் ஆணையம் எவ்வளவுதான் விதிமுறைகளை […]
ஃபாஸ்ட் டேக் ரிசார்ஜை எளிமையாக தற்பொழுது, UPI அல்லது BHIP பேமெண்ட் மூலமாக உங்களின் மொபைலில் நீங்களே செய்து கொள்ளலாம். அது எவ்வாறு செய்யலாம் என்பது குறித்து காணலாம். சுங்க சாவடிகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், மக்களின் நேரத்தை சேமிக்க நெடுஞ்சாலை துறை, “ஃபாஸ்ட் டேக்” முறையை அமல்படுத்தியது. இதன் மூலமாக ஒரு அடையாள எண் கொண்ட ஒரு ஸ்டிக்கர் உங்கள் வாகன கண்ணாடியில் ஓட்டப்படும். நமது வாகனம், சுங்க சாவடியை கடந்து செல்லும்போது அந்த ஸ்டிக்கரை […]