சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், 7வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. கர்நாடக தேர்தலையொட்டி பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. அதன்பின்னர் கடந்த 7 நாட்களாக விலை உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் 70 காசுகளும், டீசல் விலை ஒரு ரூபாய் 76 காசுகளும் அதிகரித்துள்ளன. இன்று காலை நிலவரப்படி, பெட்ரோல் விலை 35 காசுகள் […]