ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை அடிப்படையில் சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆர்.ஆர்.கோபால்ஜி என்பவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். தமிழக அரசு மற்றும் சிபிஐயிடம் மனு அளிக்காமல் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் ரகசியமும், வெளிப்படை தன்மையும் பின்பற்றவில்லை […]
மது பாட்டில்களில் சுகாதார எச்சரிக்கை ஸ்டிக்கர்களை ஒட்டக் கோரிய பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். சிகரெட் பாக்கெட்டுகளில் இருப்பது போன்று மது பாட்டில்களிலும், சுகாதார எச்சரிக்கை அடங்கிய ஸ்டிக்கர் ஓட்ட வேண்டும் என கோரி பொது நல மனு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், சிகரெட்டை விட மதுபானம் 10 மடங்கு தீங்கு விளைவிக்கிறது. நீதிமன்ற உத்தரவுகளால், சிகரெட் பாக்கெட்டுகளில் சுகாதார எச்சரிக்கைகள் கட்டாயமாக்கப்பட்டன. அதே போல் மது பாட்டில்களிலும் இவ்வாறு எச்சரிக்கை ஸ்டிக்கர்களை […]
கேரள குற்றப்பிரிவு போலீஸ் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரிய நடிகர் திலீப் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு. விசாரணை அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி மலையாள நடிகர் திலீப் தாக்கல் செய்த மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. நடிகர் திலீப் உள்பட 6 பேர் மீது சைபர் க்ரைம் போலீஸ் பதிவு செய்த வழக்கை தொடர்ந்து விசாரிக்கவும் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த […]
கொரோனா தடுப்பூசி குறித்து பேசியதாக பதிவான வழக்கில் மன்சூர் அலிகானின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட மறுநாள் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காலமானதை தொடர்ந்து, மன்சூர் அலிகான் கொரோனா தடுப்பூசி குறித்து சில கருத்துகளை தெரிவித்தார். அவரது பேச்சை தொடர்ந்து, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் மன்சூர் அலிகான் மீது வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். புகாரின் அடிப்படையில் மன்சூர் அலிகான் […]