கட்சி அலுவலகத்தில் உள்ள ஆவணங்களை பாதுகாக்கவே அவை ஓபிஎஸ் வாகனத்தில் வைக்கப்பட்டதாக மனுவில் தகவல். எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதாவது, அதிமுக தலைமை அலுவலகத்தில் வன்முறையில் ஈடுபட்ட ஈபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி ஓ.பி.எஸ் ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவுக்கு செப்டம்பர் 19-க்குள் பதிலளிக்க காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் […]
அதிமுக தலைமை அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் காணாமல் போன விவகாரம் தொடர்பாக டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையரிடம் மனு. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த விலை உயர்ந்த பரிசுப்பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் காணவில்லை என ஈபிஎஸ் தரப்பு குற்றசாட்டியிருந்தது. அதிமுக அலுவலகத்தில் 3வது மாடியில் இருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பரிசுப்பொருட்களை, முக்கிய ஆவணங்கள் மற்றும் அலுவலக அசல் சான்றிதழ்கள் உள்ளிட்ட பல லட்சம் மதிப்புடைய பொருட்கள் காணவில்லை […]
அதிமுக பொதுக்குழு நேற்று சலசலப்புடன் நடைபெற்ற நிலையில்,இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியது.ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால்,டெல்லி புறப்படுவதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ்,பாஜக சார்பாக குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திரௌபதி முர்மு இன்று வேட்புமனுவை தாக்கல் செய்வதை முன்னிட்டு அந்த நிகழ்வில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்ததால்,டெல்லி செல்கிறேன் என தெரிவித்திருந்தார்.இதனிடையே,பொதுக்குழு கூட்டத்தில் உயர்நீதிமன்றம் […]
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வேலூரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய முன்னாள் தமிழக பாஜக மாநில தலைவரான எல்.முருகன் அவர்கள்,திமுகவின் முரசொலி அலுவலகம் பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது என்று கூறியதால் சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து,சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் எல்.முருகன் மீது திமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது.இதற்கிடையில்,தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன்,கடந்த ஆண்டு மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை,கால்நடை பராமரிப்பு, மீன்வளம் துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து,எம்பிக்கள் வழக்குகளை விசாரிக்கும் […]
சென்னை:நடிகர் விஜய்சேதுபதி மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு. நடிகர் விஜய்சேதுபதி, அவரது மேலாளர் ஜான்சன் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி,நடிகர் மகாகாந்தி என்பவர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,”மருத்துவ பரிசோதனைக்காக நான் மைசூர் செல்வதற்காக நவம்பர் மாதம் இரவு பெங்களூர் விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை எதிர்பாராத விதமாக சந்தித்தேன்,அப்போது,திரைத்துறையில் அவரின் சாதனைகளை […]
சென்னை:வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்கப்பட்டதை ரத்து செய்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டுக்கு அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் எனும் வீட்டில் வசித்து வந்தார். இந்த இல்லத்தை நினைவிடமாக மாற்ற உள்ளதாக 2017 ஆம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்திருந்தார். அந்த இடத்தை தமிழக அரசு கையகப்படுத்தி, அரசுடைமை ஆக்குவது […]
நடிகை மீரா மிதுனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். கடந்த 14-ஆம் தேதி பட்டியல் இன மக்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். புழல் சிறையில் தனது நண்பர் சாம் அபிஷேக் உடன் அடைக்கப்பட்டுள்ள மீரா, தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், குறுகிய காலமே ஆகியுள்ளதால் நீதிமன்றம் ஜாமீன் […]
ஏ.ஆர்.ரஹ்மானிடம் இசை நிகழ்ச்சி தோல்வியடைந்ததற்காக ரூ.3 கோடி நஷ்ட ஈடு கேட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. துபாயில் இசைநிகழ்ச்சி ஒன்றை 2000 ஆம் வருடத்தில் சென்னையை சேர்ந்த காளியப்பன் என்ற நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை வைத்து நடத்தினார். ஆனால், இந்த நிகழ்ச்சி நஷ்டத்தில் முடிவடைந்ததால் இதற்கு நஷ்ட ஈடாக ரூ.3 கோடி ஏ.ஆர்.ரஹ்மானிடம் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கு ஏற்கனவே நீதிபதி ஆர்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு […]
கிஷான் திட்டம் முறைகேடு தொடர்பாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும் பாஜகவினர் இன்று புகார் மனு அளித்துள்ளனர். பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 என மூன்று தவணைகளாக உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கரூர், வேலூர் போன்ற மாவட்டங்களில் கிசான் திட்டத்தில் விவசாயிகள் அல்லாதோரும் சேர்க்கப்பட்டு பயனடைந்ததாக அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து பல்வேறு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, கிசான் […]
8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதித்தற்கு எதிரான வழக்கை விரைந்து விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல். சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதித்தற்கு எதிரான வழக்கை விரைந்து விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவசர வழக்காக கருதி மீண்டும் விசாரணைக்கு எடுக்கக்கோரி 8 வழிச்சாலை திட்ட மேலாளர் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும், பணிகள் பாதியில் விடப்பட்டுள்ளதால் மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க திட்ட மேலாளர் கோரிக்கை விடுத்துள்ளார். […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிக்கியுள்ள 400க்கும் மேற்பட்ட தமிழர்களை மீட்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் சிக்கியுள்ள 400க்கும் மேற்பட்ட தமிழர்களை மீட்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் மகாராஷ்டிரா குப்வாட் கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட தமிழர்கள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் சூரிய பிரகாசத்தின் ஆட்கொணர்வு மனு உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சொந்த ஊருக்கு அனுப்ப ரூ.3,500 செலுத்துமாறு மகாராஷ்டிரா […]
இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வருகிற 29-ந்தேதி தொடங்கி மே மாதம் இறுதி வரை நடக்க இருக்கிறது. ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக திட்டமிட்டப்படி இந்த போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில் டெல்லியை சேர்ந்த மோகன்பாபு அகர்வால் என்ற வக்கீல் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை ஒத்திவைக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். மேலும் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமெனவும் […]
நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தூக்கு தண்டனைக்கு எதிராக புதிய சீராய்வு மனு மற்றும் கருணை மனு அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். சட்ட, அரசியல் சாசன வாய்ப்புகள் அனைத்தும் நிறைவடைந்து விட்ட நிலையில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார் நிர்பயா குற்றவாளி. இதனிடையே கருணை மனுக்களை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டதால், முகேஷ் சிங், வினய் ஷர்மா, பவன் குப்தா, […]
திருப்பூர் ராயர்பாளையம் பகுதியை சேர்ந்த 85 வயதுடைய சென்னியப்பன் மற்றும் 65 வயதுடைய இவரது மனைவி கருணையம்மாள், இவர்களுக்கு பழனிச்சாமி என்ற மகனும், கண்ணம்மாள் என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் முடிந்து தனியாக வசித்து வருகின்றன. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தம்பதியர் மனு அளித்தனர். அதில், எனது மகன் பழனிச்சாமி, எங்களது சொத்துக்களை ஏமாற்றி, பிடுங்கிக் கொண்டு கடந்த10 ஆண்டுகால எங்கள் இருவரையும் கொடுமைப்படுத்திவருகிறான். இது குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் புகார் […]
மக்களவை தேர்தலுக்கு முதலில் விருப்ப மனு பெரும் கட்சி அதிமுக தான் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து அரசியல் கட்சிகளும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சார பரப்புரை என தொடர்ந்து அரசியல் நடவடிக்கை_களை தீவிர படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ராயப்பேட்டையில் உள்ள விநாயகர் கோயிலில் விழாவில் கலந்து கொண்ட மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில் , மக்களவை தேர்தல் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாகவும் , மக்களவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளுக்கும் முன்னதாக […]
விமான போக்குவரத்திற்க்கான பொது இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள ராகேஷ் அஸ்தானா_விற்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. C.B.I சிறப்பு இயக்குநராக இருந்த ராகேஷ் அஸ்தானா மீது ஊழல் புகார் எதிரொலியையடுத்து அவருக்கு கட்டாய ஓய்வு வழங்கப்பட்டது. இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதையடுத்து ராகேஷ் அஸ்தானா_வை கடந்த 18-ம் தேதி அவரை விமான போக்குவரத்து துறையின் புதிய பொது இயக்குநராக மத்திய அரசு நியமித்தது. இந்நிலையில் இந்த நியமனத்தை எதிர்த்து, மூத்த வழக்கறிஞர் எம்.எல். சர்மா உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். […]
மதத்தை இழிவு படுத்தியதாக கூறிய வழக்கில் மரண தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆசியா பீபி விடுதலைக்கெதிரான சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 2010-ஆம் ஆண்டு கீழமை நீதிமன்றம் ஆசியா பீபிக்கு மரண தண்டனை விதித்தது. . இதை எதிர்த்து 2015-ஆம் ஆண்டு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் ஆசியா பீபி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்த வழக்கிக்கின் விசாரணை முடிந்து கடந்த ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி விடுதலை செய்தது உச்சநீதிமன்றம் . இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், […]
சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இடையே மோதல் ஏற்பட்டதால் இவர்களை மத்திய கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டது. கட்டாய விடுப்பில் அனுப்பிய நடவடிக்கையை எதிர்த்து அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.கடந்த 6ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கின் மீதான தீர்ப்பை நீதிபதிகள் இன்று வழங்க இருக்கின்றனர்.