அரியலூர் மாவட்டத்தில் வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் 8 அடி பெருமாள் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருமானூர் பகுதியில் இருக்கும் கரையான்குறிச்சி கிராமத்தில் வாட்டர் சர்வீஸ் கடை வைத்துள்ள சரவணன் அவருக்கு சொந்தமான 3 சென்ட் இடத்தில் வீடு கட்ட முற்பட்டுள்ளார். அதன் காரணத்தினால் கடந்த 2 நாட்களாக அஸ்திவாரம் போடுவதற்கு பள்ளம் தோண்டியுள்ளனர். அப்போது அந்த இடத்தில் நேற்று 4 அடி தோண்டிய பொழுது, அங்கு சிலை போன்று ஒன்று இருப்பதை பார்த்துள்ளனர். பின்னர் அந்த கற்சிலையை […]