பெரு : பெரு நாட்டில் Juventud Bellavista மற்றும் Familia Chocca ஆகிய இரண்டு கிளப்புகளுக்கு இடையில் Huancayoவில் இடம்பெற்ற போட்டியின் போது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்நாட்டின் உள்ளூர் நேரப்படி மாலை 4 மணியளவில் புயல் தீவிரமடைந்தபோது, போட்டி நிறுத்தப்பட்டதாகவும் நடுவர் ஆட்டத்தை நிறுத்திய பிறகு, வீரர்கள் மைதானத்திற்கு வெளியே சென்று கொண்டிருந்தபோது, மின்னல் தாக்கி வீரர்கள் சிலர் அப்படியே கீழே விழும் சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது. அதில், 39 வயதான கால்பந்து […]
பெரு : கடந்த 2002ம் ஆண்டு பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த அமெரிக்க மலையேறும் வீரர் வில்லியம் ஸ்டாம்ஃபில்லின் உடல் 22 ஆண்டுகளுக்கு பின் கிடைத்துள்ளது. ஆண்டஸ் மலையில் புதைந்த வில்லியமின் உடல் முழுவதும் பனிக்கட்டியால் உறைந்ததால் இயற்கையாக பதப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது பனி உருகியதால், அவரின் உடைமைகளுடன் இருந்த பாஸ்போர்ட்டை வைத்து வில்லியமை அடையாளம் கண்டுள்ளனர். வில்லியம் ஸ்டாம்ப்லின் உடல் கடல் மட்டத்திலிருந்து 5,200 மீட்டர் உயரத்தில் உள்ள ஒரு முகாமுக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டது. தென் அமெரிக்காவின் தெற்கு முனையிலிருந்து […]
சுனாமி எச்சரிக்கை : தென் அமெரிக்க நாடான பெருவில், இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியில் உள்ளனர். யுனைடெட் ஸ்டேட்ஸ் புவியியல் மையத்தின்படி, ரிக்டர் அளவில் 7.2ஆக பதிவான நிலநடுக்கத்தால் வீடுகள், மிகப்பெரிய கட்டடங்கள் குலுங்கியது. இதனால், அச்சமடைந்த மக்கள், வீடுகளில் இருந்து வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பெருவியன் தலைநகர் லிமாவிற்கு தெற்கே சுமார் 600 கிமீ தொலைவில் உள்ள அட்டிகிபாவிற்கு […]
பெரு நாட்டு மக்கள் போராட்டத்தில் நிகழ்ந்த உயிரிழப்புகளை மேற்கோள் காட்டி, அமைச்சர்கள் பாட்ரிசியா கோரியா மற்றும் ஜெய்ர் பெரெஸ் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். பெரு நாட்டில் கடந்த தேர்தலில் இடதுசாரி ஆதரவாளரான பெட்ரோ காஸ்டிலோ வெற்றிபெற்று கடந்த 2021 ஜூலை மாதம் பெரு நாட்டின் ஜனாதிபதியாக தெரிந்தெடுக்கப்பட்டார். பெரு ஜனாதிபதி பெட்ரோ காஸ்டிலோ, நாடாளுமன்றத்தை கலைத்து , புதிய அரசை நியமிக்கப்போவதாக அறிவித்ததை தொடர்ந்து, நாடாளுமன்ற எம்.பிக்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவருக்கு எதிராக […]
பெரு நாட்டில் கடந்த தேர்தலில் இடதுசாரி ஆதரவாளரான பெட்ரோ காஸ்டிலோ வெற்றிபெற்று கடந்த 2021 ஜூலை மாதம் பெரு நாட்டின் ஜனாதிபதியாக தெரிந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு , அண்மையில், நாடாளுமன்றத்தை கலைத்து , புதிய அரசை நியமிக்கப்போவதாக அறிவித்தார். இதனால் அவசர நிலையை அமல்படுத்தினார். இதற்கு நாடாளுமன்ற எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஜனாதிபதி பெட்ரோ காஸ்டிலோவுக்கு எதிராக வாக்களித்து அவரை பதவி நீக்கம் செய்தனர். மேலும் மக்களை கிளர்ச்சி செய்ய தூண்டியதாக கூறி கைது செய்தனர். இதனை தொடர்ந்து […]
மனைவி, மகளை தாக்கிய பெரு நாட்டு பிரதமர் ஹெக்டர் வலெர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குடும்ப வன்முறை குற்றச்சாட்டுகளுக்குப் எதிராக புதிதாக நியமிக்கப்பட்ட பெரு பிரதமருக்கு எதிராக பெருவின் ஜனாதிபதி பெட்ரோ காஸ்டிலோ நடவடிக்கை எடுத்துள்ளார். ஜனாதிபதி பெட்ரோ காஸ்டிலோ, பிரதமர் ஹெக்டர் வாலர் பின்டோவை பதவியில் இருந்து நீக்கியுள்ளார். பிரதமராக நியமிக்கப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு பிரதமர் ஹெக்டர் வாலர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் உலக அளவில் பெருமளவில் பேசப்பட்டு வருகிறது. பிரதமர் பின்டோ […]
பெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று பெரு. பெரு நாட்டில் வடக்கு பகுதியில் இன்று அதிகாலை 5.22 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்துள்ளது என்ற போதிலும் 112 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்துள்ளதால் பெரிய […]
பெருவில் 800 ஆண்டுகள் பழமையான மம்மி தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்க நாடான பெரு நாட்டில் குறைந்தபட்சம் 800 ஆண்டுகள் பழமையான மம்மி ஒன்றை நிலத்தடி கல்லறையிலிருந்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த மம்மி லிமா என்னும் நகரின் புற நகரில் உள்ள நிலத்தடி கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், மம்மியின் பாலினம் என்ன என்பது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சான் மார்கோஸ் மாநில பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வான் டேலன் லூனா […]
பெரு நாட்டில் இரண்டு படகுகள் மோதி 11 பேர் உயிரிழந்துள்ளனர். பெரு நாட்டில் உள்ள ஹல்லகா ஆற்றில் படகு விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று சாண்டா மரியாவிலிருந்து யுரிமைகஸ் என்ற பகுதிக்கு படகு மூலம் ஹல்லகா ஆற்றில் 80 பேர் பயணித்துள்ளனர். அந்த சமயத்தில் ஆற்றில் மோட்டார் படகு ஒன்று சென்றுள்ளது. அப்போது மோட்டார் படகு இந்த படகின் மேல் மோதியதில் 11 பேர் பலியாகியுள்ளனர். இந்த விபத்து குறித்து தெரிவிக்கப்பட்டதுடன் அந்நாட்டின் மீட்பு படை மற்றும் பாதுகாப்பு […]
பெரு நாட்டில் சுரங்கத்தொழிலாளர்கள் பேருந்து விபத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர். தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று பெரு. இந்நாட்டில் உள்ள அப்ருனிமெக் மாகாணத்தில் காப்பர் சுரங்கம் அமைந்துள்ளது. ஹடபம்பாஸ் நகரில் அமைந்துள்ள இந்த சுரங்கத்திலிருந்து வழக்கம்போல் வேலை முடிந்தவுடன் 18 பணியாளர்களை ஏற்றி கொண்டு அந்த நிறுவனத்தின் பேருந்து சென்றுள்ளது. அப்பொழுது மலைப்பாங்கான பகுதி வழியாக பேருந்து சென்றுள்ளது. அச்சமயத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து திடீரென 200 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் […]
பெரு நாட்டில் 250 மீ பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விழுந்ததால் 27 பேர் உயிரிழந்துள்ளனர். பெரு நாட்டின் சுரங்க தொழிலாளர்களும் அவர்களது குடும்பத்தாரும் பேருந்து ஒன்றில் அயாகுசோ நகரிலிருந்து ஆரிகுப்பா நகருக்கு சென்றுள்ளனர். இது பெரு நாட்டில் தெற்கு பகுதியில் இருக்கிறது. பேருந்து பெருவியன் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது அங்கிருந்த 250 மீ ஆழப்பள்ளத்தில் திடீரென்று கவிழ்ந்து விழுந்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே 27 பேர் பலியாகியுள்ளனர். மேலும், விபத்து நிகழ்ந்த தகவல் தெரிந்தவுடன் […]
பெருவின் தலைநகர் லிமாவில் இருந்து சுற்றுலா நகரமான அரேகிப்பாவிற்கு பேருந்து ஒன்று சென்றுள்ளது. அதில் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 60 பேர் பயணம் செய்துள்ளனர். ஒரு வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மீது மோதி சாலையில் உருண்டுள்ளது. இதில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலி ,42 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தென் அமெரிக்க நாடான பெருவின் தலைநகர் லிமாவில் இருந்து சுற்றுலா […]
பெருவில் 57 பயணிகலுடன் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 48 பேர் பலியாகினர். தென் அமெரிக்க நாடான பெருவில் மலைபகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து திடிரென்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதனால் பேருந்தில் பயணித்த 57பேரில் 48 பேர் பலி என போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது . இதுகுறித்து பெரு போலீஸ் தரப்பில், “பெருவில் 57 பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று பெரிய பள்ளத்தில் சரிந்து விழுந்ததில் அதில் பயணம் செய்த 48 பேர் பலியாகினர். பலியானவர்களின் […]
பெரு நாட்டின் தலைநகரான லீமாவில் 57 பயணிகளுடன் பயணித்த பேருந்து மலைச்சரிவில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.இந்த கோரவிபத்தில் சுமார் 36 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.விபத்தின் பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.