செவிலியர்கள் படிப்படியாக பணிநிரந்தரம் செய்யப்படுவர் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். செவிலியர்களின் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதே போல் எம்.ஆர்.பி.யில் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நிரந்தரம் செய்யப்படாத செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்திப் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செவிலியர்களின் பணி நிரந்திரம் கோரிக்கைகள் தொடர்பாக முதல்வர் பழனிசாமியின் […]