1949-ல் திராவிட முன்னேற்ற கழகத்தினர் தந்தை பெரியார் மீது வைத்த இந்த விமர்சனம் இன்றளவும் அவர் மீது அவதூறாக அவரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக, பெரியார், மணியம்மையை திருமணம் செய்வதற்கு பதிலாக அவரை மகளாகவோ அல்லது தனது பாதுகாவலராகவோ தத்தெடுத்து இருந்தால் இந்த பிரிவினை ஏற்பட்டிருக்காது என்றும் சொல்லப்படுகிறது. தி.க வின் அடுத்த வாரிசு; இந்த சர்ச்சைகளுக்கு முன், 1948 ம் ஆண்டு ஈரோட்டில் நடந்த மாநாட்டில் தனக்குப் பிறகு தனது கட்சியின் அண்ணாதான் […]