பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்டது எப்படி? உடன் சென்ற ஆய்வாளர் முனிசேகர் ராஜஸ்தான் போலீசில் புகார் – எஃப்.ஐ.ஆர். விவரம் .3 பெண்கள் உட்பட 5 பேர் கட்டை, இரும்புக் கம்பியால் போலீசாரை தாக்கினர் .கொள்ளையர்கள் தாக்கியதில் ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கி தவறி விழுந்தது முனிசேகரின் துப்பாக்கியை எடுத்தார் ஆய்வாளர் பெரியபாண்டியன் . கொள்ளையர்களின் தாக்குதலையடுத்து எல்லோரும் தப்பிவிட பெரியபாண்டியன் சிக்கிக் கொண்டார் .துப்பாக்கி சப்தம் கேட்டது; உள்ளே சென்று பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் பெரிய பாண்டியன் கிடந்தார். ■ […]
கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற, சென்னை மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் கொள்ளையர்களால் சுடப்பட்டு வீர மரணமடைந்தார். நேற்று சென்னை கொண்டு வரப்பட்ட அவரது உடலுக்கு காவல்துறையினர், முதல்வர், அமைச்சர்கள் அஞ்சலி செலுத்திய பிறகு, சொந்த ஊரான சங்கரன் கோவிலுக்கு அருகே உள்ள சாலைப்புதூரில் அவரது உடல் நேற்று நள்ளிரவு அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், பெரிய பாண்டியனின் உடலுக்கு நடிகர் கார்த்தி நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதோடு, அவரது குடும்பத்திற்கும் ஆறுதல் தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொளத்தூர் கொள்ளையர்களை பற்றி துப்பறிந்து ராஜாஸ்தான் வரை சென்று போராடிய ரியல் தீரன் பெரியபாண்டியின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து சென்னை விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் தற்போது, விமான நிலையத்தின் 5வது கேட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு பேன்ட் வாத்தியங்கள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து அமைச்சர்கள் மாஃபா பாண்டிய ராஜன், ராஜலட்சுமி, தலைமை செயலாளர் அதிகாரிகள் […]