கிராமங்களுக்கு எது சிறந்தது என்பது அந்தந்த கிராம மக்களுக்கு தெரியும் என உயர் நீதிமன்றம் மதுரை கிளை கருத்து. தேனி லட்சுமிபுரத்தில் உக்கடை வாய்க்காலில் இருந்து கைலாசநாதர் சாலையின் குறுக்கே பாலம் கட்ட உத்தரவிட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில், எந்த ஒரு திடமாக இருந்தாலும் அந்த பகுதி மக்களை இணைக்கவில்லை என்றால் அது வெற்றி அடையாது. தாங்களே சிறந்த அறிவுஞானம் கொண்டவர்கள் என […]
பெரியகுளம் தாலுகாவில் பல ஏக்கர் அரசு நிலம் மோசடி தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம். தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவில் 3 கிராமங்களில் பல ஏக்கர் அரசு நிலம் மோசடி தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பல ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை போலியாக தனியாருக்கு பட்டா மாறுதல் செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. உதவி ஆட்சியர் அளித்த புகாரின் பேரில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் […]
முன்னாள் துணை முதல்வர் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.பாலமுருகன் பெரியகுளத்தில் இன்று காலமானார். முன்னாள் துணை முதல்வர் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.பாலமுருகன் புற்றுநோயால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து,சிகிச்சை பெற்று ஓ.பாலமுருகன் நேற்று இரவு பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பினார்.இந்நிலையில், திடீரென்று இன்று காலை அவர் உயிரிழந்துள்ளார். இதனைத்தொடர்ந்து,ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தம்பியின் குடும்பத்தினருக்கு […]