இன்று தஞ்சை பெரிய கோவிலில் 1038வது சதய விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜ ராஜ சோழன், தான் சோழ தேசத்து மன்னனாக முடிசூட்டிக்கொண்ட ஐப்பசி மாதம் சதய நட்சத்திர தினத்தில் இந்த சதய விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இதே போல ஐப்பசி மாத சதய நட்சத்திரத்தில் தான் ராஜ ராஜ சோழன் பிறந்தார் என்றும் குறிப்புகள் தெரிவிக்கின்றன. கி.பி.985ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் முடிசூட்டிக்கொண்ட அருண்மொழி வர்மன் […]