Tag: PERAMBALUR

தொடர் கனமழை : பெரம்பலூர், அரியலூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.! 

சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்கள்,  தமிழக கடலோர பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை பெய்து வருவதன் காரணமாக குறிப்பிட்ட மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையும், சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறையும் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு […]

#Ariyalur 3 Min Read
School leave

வீட்டருகே துப்பாக்கி குண்டு விழுந்ததால் பரபரப்பு!

துப்பாக்கி சுடும் தளத்தில் இருந்து குண்டுகள் வந்து விழுந்ததா என போலீசார் விசாரணை. பெரம்பலூர் மாவட்டம் ஈச்சங்காட்டில் வீட்டின் முன் உள்ள தண்ணீர் தொட்டில் துப்பாக்கி குண்டு வந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெருமாள் என்பவரது வீட்டின் தண்ணீர் தொட்டியிலும், புஷபா என்பவரது வீடு வாசலும் துப்பாக்கி குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. நாரணமங்கலம் பகுதியில் உள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் இருந்து குண்டுகள் வந்து விழுந்ததா என போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

#GunShot 2 Min Read
Default Image

பெரம்பலூர் முதல் தொழிற்பூங்காவை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.! 4800 பேருக்கு வேலைவாய்ப்பு.!

பெரம்பலூரில் அமையவுள்ள சிப்காட் தொழிற்சாலை துவக்க பணிகளை துவங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.  முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக திருச்சி, பெரம்பலூர் , அரியலூர் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். அந்தவகையில், காலையில் திருச்சி, காட்டூர் பகுதியில் ஆதிதிராவிடர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில், 25 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட ‘வானவில் மன்றம்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து தற்போது, பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை […]

- 3 Min Read
Default Image

இன்றும் நாளையும் தமிழக முதல்வரின் பயண விவரம் இதுதான்.! 3 மாவாட்ட சூறாவளி பயணம்….

இன்றும் நாளையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கு சென்று அங்கு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்குகிறார்.  இன்றும் நாளையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கு சென்று அங்கு பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி சென்று, அங்கு காட்டூர் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில், 25 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட ‘வானவில் மன்றம்’ […]

#DMK 4 Min Read
Default Image

சுங்கசாவடி ஊழியர்களின் உள்ளிருப்பு போராட்டம்.! தமிழக அமைச்சர் நேரில் ஆதரவு.!

பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கசாவடியில் ஊழியர்கள் மூன்றாவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆதரவு தெரிவித்துளளார்.  திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது திருமாந்துறை சுங்கச்சாவடி. இந்த சுங்க சாவடி தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்த அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. கடந்த மாத இறுதியில் இந்த தனியார் நிறுவனம் , சுங்க சாவடியில் வேலைபார்த்த சுமார் 30 பேரை முன்னறிவிப்பின்றி பணிநீக்கம் செய்ததாக […]

CHENNAI TRICHY HIGHWAY 3 Min Read
Default Image

#BREAKING: கல்குவாரியில் பாறை சரிந்து 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

பெரம்பலூர் அருகே கவுள்பாளையத்தில் செயல்படும் கல்குவாரியில் பாறை சரிந்து 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு.  பெரம்பலூர் அருகே கவுள்பாளையத்தில் உள்ள கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.  கல்குவாரியில் இயந்திரம் மூலம் பாறைகளை அகற்றி கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குவாரி பணியில் பாறைகளை அகற்றியபோது ஏற்பட்ட விபத்தில் சுப்பிரமணி, வினோத் ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், விபத்து ஏற்பட்ட கல்குவாரி அதிமுக ஒன்றிய செயலாளர் செல்வகுமாருக்கு சொந்தமானது என தகவல் வெளியாகியுள்ளது.

- 2 Min Read
Default Image

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது..? முதல்வர் விளக்கம்..!

இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று காலை அரியலூரில் கொரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு செய்தநிலையில், பெரம்பலூரிலும் ஆய்வை மேற்கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், கொரோனா தொற்று குறையும்போது பள்ளிகள் திறப்பது பற்றி முடிவு எடுக்கப்படும். பெற்றோர்களின் கருத்தை அறிந்துதான் பள்ளிகள் திறப்பது பற்றி முடிவு எடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி […]

#EdappadiPalaniswami 2 Min Read
Default Image

இது டைனோசர் முட்டைகளா? பெரம்பலூரில் கிடைத்த அரிய வகை முட்டைகள்!

பெரம்பலூரில் கிடைத்த அரிய வகை முட்டைகள். பெரம்பலூர் மாவட்டம், குன்னம் கிராஅமத்தில், ஏரியை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வந்துள்ளது. இந்த ஏரியை தோண்ட, தோண்ட பெரிய அளவிலான முட்டைகள், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நத்தை, ஆமை, நட்சத்திர மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த முட்டைகள் மிக பெரிய அளவில், அதிக எண்ணிக்கையில் காணப்படுவதால், அவை டைனோசர்களின் மூட்டைகளாக இருக்குமோ என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

dinosaureggs 2 Min Read
Default Image

பெரம்பலூரில் அமமுக நிர்வாகி வெட்டி படுகொலை.!

பெரம்பலூரில் அமமுக நிர்வாகி வல்லத்தரசு மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பெரம்பலூர் மாவட்டத்தில் அமமுக கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்தவ வந்தவர் வல்லத்தரசு. இவர் இன்று பெரம்பலூரில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுகொலை குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதில், அரசியல் முன்விரோதம் காரணமாக இந்த படுகொலை நிகழ்த்தப்பட்டதா என விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 

#AMMK 2 Min Read
Default Image

போதைக்காக டிஞ்சர் குடித்த 3 இளைஞர்கள் கவலைக்கிடம்

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால், நாடெங்கிலும் மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இயங்கி வந்த டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால், மதுபிரியர்கள் போதைக்கு  ஆசைப்பட்டு,எத்தனால், சானிடைசர் என குடித்துவிட்டு உயிர்விட்ட சோக நிகழ்வுகளும் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது. இருந்தும் இந்த நிகழ்வுகள் குறைந்தபாடில்லை. நேற்றும், பெரம்பலூரில் 3 இளைஞர்கள் மதுக்கடைகள் திறக்காததால் போதைக்கு ஆசைப்பட்டு டிஞ்சரை (காயங்களை துடைப்பது போன்ற செயல்களுக்கு பயன்படும் மருத்துவ பொருள்) குடித்துள்ளனர். இதனால், தற்போது பெரம்பலூர் […]

#Tasmac 2 Min Read
Default Image

தகாத உறவால் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு..!

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி. இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பச்சையம்மாள்.அதே கிராமத்தை சேர்ந்த செந்தில்குமாருக்கும் , பச்சைமாலுக்கும் தகாத உறவு இருப்பதாக தெரிகிறது. இந்த பிரச்சனை பச்சையம்மாள் கணவன் பழனிச்சாமிக்கு தெரியவர பழனிச்சாமி பச்சையம்மாளை விட்டு தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை வயலுக்கு சென்ற பச்சையம்மாளிடம்  செந்தில்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபமடைந்த செந்தில்குமார் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பச்சையம்மாளை வெட்டியுள்ளார். இந்த சம்பவத்தை பார்த்தவர்கள் […]

bad relationship 3 Min Read
Default Image

தனியார் கல்லூரி பேருந்து மோதி மாணவர்கள் படுகாயம்! பொதுமக்கள் சாலை மறியல்!

திருச்சியை அடுத்த பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சித்தனியில் சாலையோரம் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் பேருந்துக்காக காத்திருந்தத்தாக தெரிகிறது. அப்போது அவ்வழியாக வந்த தனியார் கல்லூரி பேருந்து ஒன்று சாலையோரம் நின்றிந்த மாணவர்கள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த 5 மாணவிகள் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் ஒரு மாணவி மட்டும் மேல் சிகிச்சைக்காக திருச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் தனியார் கல்லூரி பேருந்துகள் வேகமாக சென்றதுதான் இந்த விபத்துக்கு காரணம் என […]

PERAMBALUR 5 Min Read
Default Image

பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை

பெரம்பலூரில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் கடைவீதி பகுதியை சேர்ந்தவர் கவிதா. கணவரை இழந்த இவர் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், கூலி வேலைக்கு சென்றிருந்த அவர் வீடு திரும்பியபோது, வெளிக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 30 பவுன் நகை, 6 ஆயிரம் ரூபாய் ரொக்கம் […]

#House 2 Min Read
Default Image

அரசுபேருந்தை செல்போன் பேசிக்கொண்டே இயக்கும் தனியார் வாகன ஓட்டுநர்

அரசு பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகிறது. இதனால் மக்களின் நலன் கருதி குறைந்த பட்ச எண்ணிக்கையில் பேருந்துகளை தற்காலிக ஓட்டுநர்களை கொண்டு அரசு பேருந்துகள் இயக்கி வருகின்றனர். இதில் பெரம்பலூரிலிருந்து ஆத்தூர் வரை செல்லும் அரசு பேருந்தை தனியார் ஓட்டுனர் ஒருவர் இயக்கினார். அவர் இடது கையில் செல்போன் பேசிகொண்டே வலது கையில் பேருந்தை இயக்கி உள்ளார். மேலும் கியர் போடும் போதும் போனை வைக்காமல் வலது கையாலேயே கியரையும் போட்டு வண்டி ஒட்டி […]

#Trichy 2 Min Read
Default Image

பெரம்பலூரில் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள துங்கபுரம் கிராமத்தை சேர்ந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டணை விதித்து மகிளா நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 1998 ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

after 10 year 1 Min Read
Default Image

பெரம்பலூரில் பாலத்தின் மீது பயணிகள் வேன் மோதி 2 பேர் உயிரிழப்பு ; 11 பேர் காயம்

பெரம்பலூர் தண்ணீர்பந்தல் அருகே பாலத்தின் மீது பயணிகள் வேன் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் அந்த விபத்தினால் சுமார் 11 பேர் காயம் அடைந்துள்ளனர். இதனால் அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

#Death 1 Min Read
Default Image

பெரம்பலூர் அருகே கார் விபத்து இருவர் பலி…!

துறையூர் ,பெரம்பலூர் நெடுஞ்சாலை கோட்டத்தூர் பிரிவு ரோட்டின் அருகே சுமார் மாலை 4மணி அளவில் கோர விபத்து நடந்தது. செல்லிபாளையம் ஊராட்சி ராஜீ அவர்களின் மனைவி சுலோச்சனா மற்றும் செல்லிபாளையத்தை சேர்ந்த இருவர் விபத்தில் சம்பவ இடத்திலே அகலா மரணம் அடைந்தனர் .

#Death 1 Min Read
Default Image

பெரம்பலூர் : ஜெயங்கொண்டத்தில் பைக் திருட்டு

பெரம்பலூர்: ஜெயங்கொண்டம் அருகே வெத்தியார்வெட்டு கிராமத்தை சேர்ந்த நடேசன் மகன் ராமலிங்கம் இவரது பைக்கை  கடந்த 13ம் தேதியன்று தனது  வீட்டின் பின்புறம்  நிறுத்திவிட்டு மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. பதட்டமடைந்த அவர்,  இதுகுறித்து மீன்சுருட்டி போலீசில் புகார் செய்தார். அவர் புகார் தெரிவித்ததன் பெயரில்  சப்.இன்ஸ்பெக்டர் வசந்த் வழக்குப் பதிந்து உடனே  கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி அருகில் உள்ள நாட்டார்மங்கலம் கிராமத்தை சேர்ந்த துரையப்பன் மகன் அசோக்ராஜ் மற்றும் மீன்சுட்டி அருகில் உள்ள […]

motorcycle theft 2 Min Read
Default Image