வழக்கு தாமதத்தால் நீதி பரிபாலன முறையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள் என நீதிபதி கருத்து. வழக்கை இழுத்தடிக்கும் வகையில் தேவையற்ற மனுக்களை தாக்கல் செய்பவர்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி எஸ்எம் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். வழக்கை இழுத்தடிக்கும் வகையில் தேவையற்ற மனுக்களை தாக்கல் செய்பவர்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கக்கோரி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நீதிபதி கூறுகையில், வழக்கு தாமதத்தால் நீதி பரிபாலன முறையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள். […]
மும்பையில் 2,000 கிலோவுக்கும் அதிகமான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பறிமுதல் செய்யப்பட்டு ரூ.16 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) கடந்த இரண்டரை மாதங்களில் 2,000 கிலோவுக்கும் அதிகமான தடைசெய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கைக் கைப்பற்றியது. மேலும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தும் கடைகள் மற்றும் விநியோகஸ்தர்களிடமிருந்து ₹16 லட்சம் அபராதமும் வசூலித்துள்ளது. தடை செய்யப்பட்ட அதாவது ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளுக்கு எதிரான இயக்கம் ஜூலை 1 முதல் மும்பை சிவில் அமைப்பால் நடைமுறைப்படுத்தப்பட்டது […]
பான் எண்ணை ஆதார் கார்டுடன் இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி),பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடு முன்னதாக 30 செப்டம்பர் 2021 முதல் 31 மார்ச்,2022 வரை நீட்டிக்கப்பட்டது.அதன்பின்னர்,எழுந்த பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. இன்றுடன் நிறைவு: இந்நிலையில்,பான் எண்ணை ஆதார் கார்டுடன் இணைப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது.எனவே,இன்றைக்குள் (ஜூன் 30, 2022) ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்கவிட்டால் வருமான வரிச் சட்டம் 272N […]
போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கான அபராதத்தை வளைகுடா நாடான குவைத் அரசு சட்டநீதிமன்றத்தில் பரிசீலனைக்காக அனுப்பியுள்ளது. வளைகுடா நாடான குவைத் நாட்டில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோருக்கான திருத்தப்பட்ட சட்டம் நாட்டின் தேசிய சட்டமன்றத்திற்கு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட சட்டத்தின்படி வாகனங்களை பொறுப்பற்ற நிலையில் ஓட்டுவது, சிவப்பு விளக்குகளை எரிய வைத்துக்கொண்டு ஓட்டுவது, வேகமாக வாகனம் ஓட்டுவது, அல்லது நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம் ஓட்டுவது போன்ற விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு 200 முதல் 500 தினார் வரை அபராதம் […]
இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆமைவேகத்தில் பந்துவீசிய காரணத்தால் நியூசிலாந்து அணிக்கு 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை முழுமையாக கைப்பற்றி சாதித்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் ஆனது நடைபெற்று வருகிறது. நேற்று ஆக்லாந்தில் ஈடன்பார்க் மைதானத்தில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து […]