தினமும் வீட்டில் வேர்க்கடலை சாப்பிட்டு வந்தால் உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படாமல் தடுக்க முடியும் வேர்க்கடலையில் விட்டமின் ஏ, விட்டமின் பி3 போன்ற சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. இது கர்ப்பிணிப் பெண்களுக்கு அவசியமான ஒன்று. இந்த வேர்க்கடலைக்கு உடலில் பாதிக்கப்பட்ட செல்களை சரி செய்யும் ஆற்றல் இருக்கிறது. அதனால் அந்த வேர்க்கடலையை தினமும் சாப்பிட்டு வந்தால் பல்வேறு நோய்களை நம்மால் தவிர்க்க முடியும். வேர்க்கடலையில் அதிகமான அளவில் இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க் போன்ற சத்துக்கள் காணப்படுகிறது. […]
நிலத்தின் அடி வேரில் முளைக்கக் கூடிய வேர்க்கடலையில் நமக்கே தெரியாத ஏகப்பட்ட ஆரோக்கியமான நன்மைகளும் மருத்துவ குணங்களும் உள்ளது. புரோட்டீன், கால்சியம், நார்ச்சத்து, பொட்டாசியம் இரும்பு ஆகிய பல குணங்கள் நிறைந்த இந்த வேர்க்கடலையில் எவ்வளவு மருத்துவ நன்மைகள் உள்ளது என்பது குறித்து அறியலாம் வாருங்கள். வேர்க்கடலையின் நன்மைகள் 100 கிராம் வேர்க்கடலையில் 30 கிராம் அளவுக்கு புரதச்சத்துக்கள் இருப்பதால் இது உடல் தசை மற்றும் முடியின் வளர்ச்சியை அதிகரிப்பதோடு உடலுக்கு தேவையான சத்துக்களை அள்ளித் தருகிறது. […]
கடலை பருப்பு சாப்பிட்டு திண்டுக்கல்லில் உள்ள ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது. பொதுவாகவே ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு என்னென்ன சாப்பிட கொடுக்க வேண்டும் என்பதில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்துவது வழக்கம். சில கடினமான பொருட்களை குழந்தைகளுக்கு கொடுக்காமல் தவிர்ப்பது மிகவும் நல்லது. தற்பொழுது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே உள்ளது செங்குளத்துபட்டியை சேர்ந்த விஜய் என்பவரின் ஒன்றரை வயது குழந்தை தர்ஷனா கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக வீட்டிலிருந்த கடலைப் பருப்பை எடுத்து சாப்பிட்டுள்ளார். […]