“பாஜக மாநிலத் தலைவர் பணிகள் எனக்கு இருக்காது!” அண்ணாமலை மீண்டும் திட்டவட்டம்!
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் நியமிக்கப்பட நயினார் நாகேந்திரன், எல்.முருகன், வானதி சீனிவாசன் ஆகியோரது பெயர்கள் இருக்கின்றன என்றும், அண்ணாமலைக்கு மாநிலங்களவை எம்பி பதவி வழங்கப்படும் என்றும் பல்வேறு செய்திகள் உலா வருகின்றன. இப்படியான சூழலில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மாநிலத் தலைவர் குறித்த கேள்விக்கு பதில் அளித்தார். […]