உங்களது வெற்றியால் இந்தியா பெருமைகொள்கிறது – ராகுல் காந்தி ட்வீட்
உங்களது வெற்றியால் இந்தியா பெருமைகொள்கிறது என வெள்ளி பதக்கம் வென்ற பவினா படேலுக்கு ராகுல் காந்தி வாழ்த்து. டோக்கியோ பாராலிம்பிக் மகளிர் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டியில், இந்தியாவின் பவினா படேல், சீனாவின் மியாவோ ஜாங்கை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதனைத்தொடர்ந்து, இறுதி போட்டியில் பவினா படேல், உலகின் நம்பர் 1 வீராங்கனை சீனாவின் ஜோஃவ் யிங்கை எதிர்கொண்டதில் பவினா 3:0 (11-7, 11-5, 11-6) என்ற செட் கணக்கில் போராடி தோல்வி […]