சென்னை: தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாட்டில் அக்கட்சித் தலைவர் விஜய் ஆட்சிக்கு வந்தால் கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு உண்டு என அறிவித்திருந்ததற்கு ஒரு பக்கம் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், ஒரு பக்கம் ஆதரவும் எழுந்து வருகிறது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சி இதற்கு ஆதரவு தெரிவித்து இருந்தது. அதனைத்தொடர்ந்து தற்போது பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கும் விதமாகப் பேசியிருக்கிறார். இன்று சோளிங்கரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் “தமிழ்நாட்டில் 2026-ல் கூட்டணி ஆட்சி கண்டிப்பாக […]
விக்கிரவாண்டி : சட்டப்பேரவைத் தொகுதியில் உறுப்பினராக இருந்த திமுகவை சேர்ந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. எனவே, தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டது. அதில் வரும் ஜூலை மாதம் 10-ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவித்தது. இதனையடுத்து, ஒவ்வொரு கட்சியில் இருந்தும் இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுபவர்களின் பெயர் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் […]
பாமக பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தில் தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. பாமக பொதுக்குழு நடைபெற்றது.இந்த பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஈழத்தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும். தமிழகத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) திட்டத்தை செயல்படுத்தக் கூடாது. தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும். அதற்காக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். காவிரி – கோதாவரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.மருத்துவப் படிப்புக்கான அகில […]
பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் மாணவர்கள் சங்கம் சார்பாக, கல்வி கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, சென்னை சேப்பாக்கம் அருகே மாபெரும் தொடர்முழக்கப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் உள்ளிட்டு பலர் கலந்து கொண்டனர்.